Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகள் மூலம் தேவாலய ஜெபம் - தொழுகைக்கு இடையூறு


(யாழ்ப்பாணத்திலிருந்து பாறூக் சிகான்)

யாழ்ப்பாணத்தில் 2020 ஆண்டு  முஸ்லீம் பகுதிகள்  ஏனைய சமூகத்தவரின்  ஆளுகைக்குட்படும் என  யாழ்  அபூ அப்துல்லாஹ்வினால் கடந்த சில தினங்களில்முன் ஜப்னா இணையத்தளத்திற்கு வழங்கப்பட்ட தகவலினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று 02-06-2013 மாலை முஸ்லீம்கள் செறிந்து வாழும் கல்லூரி வீதி , முஹம்மதியா பள்ளிவாசல்  வீதியில்  மாலை மகரீப்  தொழுகையின் போது நாவாந்தறை தேவாலயத்தை சேர்ந்த தேவாலய ஜெபம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகியது.

திடிரென இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மகரீப் தொழுகைக்காக வந்திருந்த முஸ்லீம் மக்கள்  அதிர்ச்சியடைந்தனர்.ஒரு போதுமில்லாதவாறு இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லீம் பகுதியில் இடம்பெறகின்றன.

இது தொடர்பாக ஜப்னா இணையத்திற்கு கருத்து தெரிவித்த  முஸ்லீம் மக்கள்,

 கடந்த காலங்களில் செறிவாக தாங்கள் இப்பிரதேசத்தில் இருந்த போது இவ்வாறான சமய நிகழ்வுகள் இப்பகுதியில் இடம்பெறுவதில்லை.ஆனால் இன்று சமூக மாற்றத்தின் காரணமாகவும், முஸ்லீம் பகுதிகளில் முக்கியமான சில இடங்கள் ஏனைய சமூகங்களின் இடமாக மாறியதன் காரணமாக இப்படியான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.இதனை தவிர்க்க முடியாது. ஏனெனில் அது அவர்களின் அடிப்படை உரிமையாகும் என்றனர்.

இது இவ்வாறு இருக்க நேற்று இடம்பெற்ற கிறிஸ்தவ ஜெப செயற்பாட்டினால் போக்குவரத்து தடைபட்டதுடன்  முஹம்மதியா பள்ளிவாசலில் தொழுகை நடவடிக்கை சிறிது தடங்கலானது. அது அவ்வாறு தொடர்ந்தால் 2020 ஆண்டு ஏற்படும் இப்பிரதேச மாற்றத்தை தவிர்க்க முடியாது.

2 comments:

  1. லண்டன், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி, வெள்ளவத்தை, தெஹிவளை, நீர்கொழும்பு வாழ் நாநாமாரே வாங்கடா, யாழ்ப்பாணத்தில் எஞ்சிருக்கும் சொத்துக்களையும் விற்றுவிட்டுப் போங்கள். உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

    ReplyDelete
  2. நமது இடம் நம்மை வி்ட்டு போய்வடுமோ?.....நமது எதிர்கால சந்தியின் நன்மை கருதி அதிகாரம் உள்ளவர்கள் சமுதாய நலனுக்காக அவசர, அவசியமாக சொயல்படுங்கள்.ஒரு பள்ளிவாசலை கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம். கைவிட்டுப்போவதன்றால்?

    ReplyDelete

Powered by Blogger.