Header Ads



இஸ்ராவும், மிஃராஜும்..!

(அஷ்ஷெய்க் றமீஸ், நளீமி - சமூகவியல்)

இஸ்ரா என்பது 'மக்காவிலிருந்து பாலஸ்தீனிலுள்ள குத்ஸூக்கு,அல்லது மஸ்ஜிதுல் ஹராமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவு நேரம் நபிகளார் பூமியில் அழைத்துச் செல்லப்பட்ட பயணமாகும்'. மிஃராஜ் என்பது 'பூமியிலிருந்து வானத்தை நோக்கி, அல்லது குத்ஸிலிருந்து எந்த தனிமனிதர்களோ ஜின்களோ வானவர்களோ சென்றடையாத சித்ரதுல் முன்தஹாவை நோக்கிய பயணமாகும்'. 

இஸ்ராவும் மிஃராஜும் ஏன்? இவ்விரு பயணங்களும் நபி (ஸவ்) அவர்களது வாழ்வில் முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தன. நபி (ஸல்) அவர்கள் மக்காவில் கொடுந்துன்பம் தாளாது தாஇபை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு அவர்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு உட்படுத்தப் படுகிறார்கள். தூண்டப்பட்ட சுpறுவர்கள், அடிமைகள், மடையர்கள் நபியவர்கள் மீது கல்லெறிகிறார்கள். தலையில் காயம் பட்டு இரத்தம் வழிந்தோடுகிறது. இத்தகைய நிலையில் கூட அப்பிரதேசத்தை அழிக்க வந்த மலக்குகளிடம்'அவர்களது பரம்பரையிலிருந்து அல்லாஹ்வை வணங்கக் கூடியவர்கள், அவனை நிராகரிக்காதவர்கள் தோன்றுவதையே நான் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுகின்றார்கள். நபியவர்களின் அன்புணர்வையும், தஃவா நோக்கையும் நாம் உணர்ந்து செயற்பட வேண்டும். இதன் தொடரில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் விதமாக அல்லாஹூத் தஆலா இப்பயணத்தை ஏற்பாடு செய்கிறான். பூமியில் இருப்பவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும் வானத்திலிருப்பவர்கள் உங்களை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற உணர்வு நாம் அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய ஒரு விடயமாகும். மனிதர்கள் எங்களைத் தடுத்தாலும் அல்லாஹ் எங்களை வறவேற்கிறான் என்ற உணர்வு நபியவர்களை எந்தளவு மகிழ்வூட்டியிருக்கும்.

அல்லாஹூத்தஆலா இப்பயணத்தின் மூலம் ஹிஜ்ரத்தின் பின்னரான போராட்ட வாழ்விற்கு நபியவர்ளை தயார்படுத்தினான். அனைத்து அரபிகளும் ஒன்றிணைந்து நபியவர்களை எதிர்த்த போதும் வீரியத்தோடு முன்னோக்கிச் செல்ல இது உந்து சக்தியைக் கொடுத்தது. அறபுலக சிலை வணங்கிகள், பாரசீக நெருப்பு வணங்கிகள், தௌராத்தைத் திரிபு படுத்திய யூதர்கள், ஏகத்துவத்தைக் குழப்பியடித்த கிரிஸ்தவர்கள், பைஸாந்திய, ரோமானியப் பேரரசுகள் இந்த மார்க்கத்தை எதிர்த்து நின்ற போதிலும் நபியவர்கள் சவாலை எதிர்க்கொண்டு தாக்குப் பிடித்தார்கள்.  எத்துனை சவால்கள் எம்மை நோக்கி வந்தாலும் இஸ்லாத்திற்காக துணிவோடு இயங்கும் உணர்வு இந்நிகழ்வு எம்மில் ஏற்படுத்த வேண்டிய ஒரு மாற்றமாகும்.

இந்த மார்க்கத்தை இவ்வுலகில் நிலை நாட்டுவதற்கான பெரியதொரு அத்தாட்சியை இந்நிகழ்வு மூலம் அல்லாஹ் காட்டுகின்றான். 'தனது அத்தாட்சியை காட்டுவதற்காக மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அருள்சூழப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு தனது அடியானை அழைத்துச்சென்ற அல்லாஹ் தூய்மையானவன்'. (17:01)

'அவர் அல்லாஹ்வின் மிகப்பெரிய அத்தாட்சியை கண்டுகொண்டார்'.(53:18) காட்டப்பட்ட அத்தாட்சிகள் மூலம் அல்லாஹ் நபியவர்களின் உள்ளத்தைப்பலப்படுத்தினான்.அவரது நாட்ட சக்தியை (றடைட pழறநச)  அதிகரித்தான்.பலதரப்பட்ட அசத்திய கூட்டாளிகளை எதிர்கொள்ளும் திராணியை வழங்கினான்.உலகில் தன்னை இலாஹ் என்று பறை சாற்றிய பிர்அவ்னிடம் மூஸா நபியை அனுப்பிய போது இத்தகைய அத்தாட்சியைத்தான் அல்லாஹ் காட்டினான்.ஆறுதலாகவும் எதிர்காலத்துக்கு தயார்படுத்தலாகவும் இவ்வத்தாற்சிகள் காணப்பட்டன.

தொழுகை ஒரு மிஃராஜ் நபி(ஸல்)அவர்களுக்கு இஸ்ராவும் மிஃராஜும் ஒரு கௌரவித்தலாகவும்;,ஆறுதலாகவும்,தயார்படுத்தலாகவும் காணப்பட்டது.முஸ்லிம்களின் எதிர்கால வாழ்விலும் அது அவ்வாறே இருக்க வேண்டுமென்பது இறைநியதி.எனவேதான் அன்றையதினமே கடமையாக்கப்பட்ட தொழுகையை வழங்கினான்.

சில முக்கியமான விடயங்களை செய்தியாகவோ,கட்டளையாகவோ மாத்திரம் பிறப்பிக்காது தூதுவர்களை தம்மிடம் அழைத்து,ஆலோசித்து,உபதேசித்து கட்டளை பிறப்பிப்பது நாடுகள் பொதுவாக கடைப்பிடிக்கும் வழமையாகும்.இவ்வகையில்தான் மனிதகுலத்துக்கான தூதுவரை அல்லாஹ் தன்னிடம் அழைத்து தொழுகையை வழங்குகின்றான்.இதனூடாக இதன் முக்கியத்துவத்தை தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உணர்த்துகின்றான்.இது, குறித்த நேரத்தில் அல்லாஹ்வை சந்திப்பதற்கான ஒரு ஏற்பாடாகும்.ஐந்து முறைதான் செயல்பட்டாலும் ஐம்பதுமுறை இயங்கிய நன்மை கிடைக்கும் ஒரு கொடைதான் தொழுகையாகும்.

தொழுகை அனைத்து முஸ்லிம்களதும் மிஃராஜாகும்.நபி(ஸல்) அவர்கள் தொழுகை மூலம் அல்லாஹ்வோடு உரையாடினார்.எமக்கு அதன்மூலம் அல்லாஹ்வை நெருங்கவும்,அவனுடன் உரையாடவும் முடியும்.அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்  'எனக்கும் எனது அடியாருக்குமிடையில் தொழுகையை இரு பகுதிகளாக பிரித்துவிட்டேன்.எனது அடியான் கேட்பது அங்கு கிடைக்கும்.எனது அடியான் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று கூறினால் 'எனது அடியான் என்னை புகழ்ந்துவிட்டான்' என்று நான் சொல்வேன். 'அர்ரஹ்மானிர்ரஹீம்' என்று சொன்னால் 'எனது அடியான் என்னை பாராட்டிவிட்டான்' என்று கூறுவேன். 'மாலிகி யவ்மித்தீன்'  என்று கூறினால் 'எனது அடியான் என்னை சங்கைப்படுத்திவிட்டான்' என்று நான் கூறுவேன். ''இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்' என்று சொன்னால் ''இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலான விடயம் எனது அடியான் எதனை கேட்கிறானோ அது கிடைக்கும்' என்று கூறுவேன். 'இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்.... என்று இறுதிவரை கூறினால்' 'இது எனது அடியானுக்குரியது.அவன் கேட்டது அவனுக்கு கிடைக்கும்' என்று கூறுவான்      
ஆதாரம்:முஸ்லிம்ஃதிர்மிதிஃநஸாஈ 
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா (ரலி)

புதிய தலைமைத்துவம் ஏன் அல்லாஹ் நபி(ஸல்)அவர்களை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து நேரடியாக தன்பால் அழைத்துச்செல்லாமல் அல்மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அழைத்துச்சென்றான்.? ஏன் அங்கு நபியவர்கள் ஏனைய நபிமார்களுக்கு இமாமாக தொழுவித்தார்கள்?

இதன் அர்த்தத்தை நாம் நின்று நிதானமாக சிந்திக்க வேண்டும். அல்மஸ்ஜிதுல் அக்ஸாவின் முக்கியத்துவத்தை இங்கு நாம் உணர்வதுபோன்றே தலைமைத்துவ மாற்றத்தையும் கண்டுகொள்கிறோம்.யூத கிறிஸ்தவ சமூகங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவரது சமூகத்திற்கும் தலைமைத்தவம் மாறுகின்றது.பிராந்திய,கிராமிய மட்டத்தோடு சுருங்கியிருந்த தலைமை சர்வதேச தன்மை பொருந்தியதாக அனைத்து மக்களுக்குமாக மாற்றப்படுகிறது.கால இட வரையறைக்கு அப்பாட்பட்ட உலகம் அழியும்வரை நிலைத்துநிற்கும்விதமான தலைமை தோற்றுவிக்கப்படுகிரது.
அன்பின் சகோதரர்களே ஏனைய சமூகங்களுக்கு தலைமைத்துவம் வழங்குமளவு எமது தலைமைத்துவ பண்புகளை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?எமது செயல்பாடுகள் தலைமைவகிக்கம் சமூகத்திற்கு பொருத்தமானதாக உள்ளனவா?இதற்கான அறிவார்ந்த,பண்பாட்டு,செயல்பாட்டு ஒழுங்குகள் குறித்து எமது கவனஈர்ப்பு என்ன?

மஸ்ஜிதுல் அக்ஸாவின் அந்தஸ்து இங்கு இரு பள்ளிவாயில்கள் இணைக்கப்படுகின்றன.ஒன்று இஸ்ராஃ ஆரம்பிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹராம்.மற்றது அது முடிவடைந்த மஸ்ஜிதுல் அக்ஸா.அது மாத்திரமல்ல மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ பரகத் அருளப்பட்டுள்ளது என்றும் இங்கு தெரிவிக்கப்படுகிறது.இதுதான் முஸ்லிம்களின் முதல் கிப்லாவுமாகும்.மக்காவில் மூன்று வருடங்களும் மதீனாவில் ஆறு மாதங்களும் அக்ஸாவை நோக்கியே தொழுகை நிறைவேற்றப்பட்டது.புனித யாத்திரை மேற்கொள்ள முடியுமான பள்ளிவாயில்கள் மூன்றில் இது ஒன்றாகும்.மற்றவை மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல் ஹராமும்,மதீனாவில் உள்ள அல்மஸ்ஜிதுன்னபவியுமாகும்.

அன்பின் சகோதரர்களே மூன்றாவது புனிதத்தளம் இன்று எமது கைகளில் இல்லை.அதனை தரைமட்டமாக்கிவிடும் எண்ணத்தில் சியோனிஸ யூதர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்.மூன்றாவது புனிதத்தளத்தின் புனிதங்களை மீறுபவர்கள் இரண்டாம்,முதலாம் புனிதத்தளங்களிலும் அத்துமீறவே முனைவர் என்பதனை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.அக்ஸா என்பது நிலமல்லஅது எமது நம்பிக்கை கோட்பாடு எமது அகீதா.எனவேதான் வரலாறு நெடுக முஸ்லிம்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து புணிதத்தை பேணிவந்தனர்.முழு ஐரோப்பாவும் திரண்டெழுந்து தமது சிலுவைகளுடன் கிறிஸ்தவத்தின் முன்னடைவுக்காக யுத்தம் செய்து அல்மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமித்தபோது முஸ்லிம்கள் வாழாவிருக்கவில்லை.அல்மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள்.சுல்தான் இமாமுத்தீன் ஸன்கி, சுல்தான் நூருத்தீன் மஹ்மூத் ஸன்கி, சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி போன்றவர்கள் அறபிகளல்லர்.இந்த விவகாரம் அறபிகளின் விவகாரமல்ல.ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினையாகும்.

உமர் (ரலி) காலத்தில் குத்ஸின் கிறிஸ்தவ ஓர்த்தடொக்ஸ் மதகுருவான பேட்ரியர்ச் சொப்ரோனியஸ் (PATRIARCH SOPHRONIUS)  நகரத்தின் சாவியை உமர்(ரலி)யிடம் கையளித்தார்கள்.அப்போது அவர் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்.அதில் காணப்பட்ட முக்கியமான சரத்து ''யூதர்களை குத்ஸில் குடியேற்ற கூடாது என்பதாகும்' 

முஸ்லிம்கள் குத்ஸுக்கு நுழைந்தபோது அங்கு யூதர்கள் இருக்கவில்லை.ஒட்டுமொத்த யூத சமூகத்தையும் ரோமானியர்கள் (கி.பி 135லிருந்து) வெளியேற்றியிருந்தனர்.முஸ்லிம்கள் யூதர்களிடமிருந்து குத்ஸை பொறுப்பேட்கவுமில்லை.ஏற்கனவே கி.மு 486களில் இருந்த யூத நாட்டைக்கூட பாபிலோனியர்கள் அகற்றியிருந்தனர்.25 நூற்றாண்டுகளாக யூத பிரசண்ணம் அங்கு காணப்படவில்லை. 'குத்ஸ் எமது பூமி.அங்கு எமக்கு வரலாற்று உரிமையுள்ளது'என்று யூதர்கள் கூறுவது எத்துனை அபத்தமானது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அது அறபிகளான கன்ஆனியர்கள் வாழ்ந்த பூமி.  30 நூற்றாண்டுகளாக அவர்கள்தான் அங்கு வாழ்ந்தார்கள்.பலஸ்தீனின் ஆதிக்குடிகள் அவர்கள்தான்.14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் அங்கு காணப்படுகின்றனர். கடந்த 1400 வருடங்களாக முஸ்லிம்களிடம்தான் குத்ஸ்  காணப்பட்டது.எனவே குத்ஸ் முஸ்லிம்களின் சொத்து.யூதர்களுக்கு எந்த உரிமையும் அங்கு இல்லை.

பலப்பிரயோகத்தின் மூலம்தான் அவர்கள் குத்ஸை ஆக்கிரமித்தார்கள்.கொலை,கொல்லை,சதி,பயங்கரவாத தாக்குதல்கள் மூலம்தான் குத்ஸை அவர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிரார்கள்.எம்மால் அதனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.எமது கண்ணியத்தை,கௌரவத்தை,புனித பூமியை,முதல் கிப்லாவை,மூன்றாவது புனிதத்தளத்தை,உரிமையை எப்படி நாம் விட்டுக்கொடுக்க முடியும்.ஆக்கிரமிப்பை அங்கீகரித்து யூத மயப்படுத்தலை அநுமதித்து மௌனிகளாக இருப்பது எத்துனை பெரும் சாபக்கேடு.

அன்பின் சகோததரர்களே இவ்விடயத்தில் நாம் குறைவு செய்ய முடியாது.யூதர்கள் தமக்கொரு போலியான தாய்நாட்டை கனவுகான முடியுமென்றால் நாம் ஏன் உண்மையான மஸ்ஜிதை மனக்கன்முன் கொண்டுவரக்கூடாது.அல்லாஹ் எங்களோடு இருக்கின்றான் என்பதனை மனங்கொண்டு செயல்படுவோம்.

எனது சமூகத்தில் ஒருசாரார் சத்தியத்தில் மிகைத்தும்,எதிரிகளை அடக்கிக்கொண்டும் இருப்பார்கள்.அவர்களோடு மோதுவது –சில பலவீனங்கள் ஏற்படுவதை தவிர- பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தாது.அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்கள் அதே நிலையில் தொடர்ந்திருப்பார்கள்.அப்போது சஹாபாக்;கள் 'அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கேட்டபோது 'பைதுல் மக்திஸிலும் அதனை சூழுவுள்ள பிரதேசங்களிலும்' என்று குறிப்பிட்டார்கள்.
அஹ்மத்ஃதபறானி
அறிவிப்பவர்:அபூ உமாமா அல்பாஹிலி (ரலி)

No comments

Powered by Blogger.