Header Ads



பொது பலசேனா தேவை, ஹலால் தேவையில்லை - கல்முனை சங்கரத்ன தேரர்

(ஏ. எல்.ஜுனைதீன்)

கல்முனை சுபத்திராராம விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் எமது இணையத்திற்கு www.jaffnamuslim.com வழங்கிய பிரத்தியேக பேட்டி இது. தேரருடனான பேட்டி

 தேரரே முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை பற்றி உங்கள் கருத்து என்ன ? 

   சங்கரத்ன தேரர்:- இது ஒரு நல்ல விடயம். மற்றவர்கள் ரசிக்கக் கூடியவர்களாக பெண்கள் இருக்கக் கூடாது.பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எமது நாட்டில் இப்படியான நிலைமை இருந்தபடியால்தான் பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சில கட்டுப்பாட்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது கட்டுப்பாடுகளை மீறி நடப்பதன் காரணமாக பல விதமான பிரச்சினைகள் தோன்றியிருப்பதை பத்திரிகைகள் ஊடாக வாசித்து அறிந்திருக்கிறோம். நாம் எம்மிடம் இருக்கின்ற பண்பாடு கலாசாரம் என்பவற்றை மதிக்காமல் வெளி நாடுகளிலுள்ள சில விடயங்களை எடுத்துப் பார்த்து அதற்காகவே நாம் முகம் கொடுக்கின்றோமே தவிர எமது கலாச்சாரங்களைப் பாதுகாப்பாக பேணவில்லை.இது ஒரு முக்கியமான காரணம். எமது நாட்டில் பெளத்தம் இஸ்லாம் இந்து கிறிஸ்தவம்  ஆகிய சமயங்களில் இருந்து கொண்டிருக்கின்ற நாம் அவ்வரவரின் சமயத்தை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம்தான் நூற்றுக்கு நூறு எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். $

    தேரரே இறைச்சிக்காக மாடுகளை அறுப்பது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன ?

   சங்கரத்ன தேரர்:- மாடுகள் அறுப்பது குறித்து எங்களுக்கு சொல்ல முடியாது ஆனால் உயிர்களைக் கொல்வது பாவம். இதனைக் கட்டாயம் சொல்லித்தான் ஆகவேண்டும். கிழக்கு மாகாணத்தில் கல்முனையைப் பொறுத்த வரையில் எங்கு பார்த்தாலும் அதிகமான மாட்டு இறைச்சிக் கடைகள் திறந்து இருப்பதைக் காண்கின்றோம். இதில் நன்மையே இல்லை ஆனால் இப்பொழுது முஸ்லிம்கள் இறைச்சியை விரும்பி சாப்பிடுவதுமில்லை. எனக்கு இறைச்சியை சாப்பிட வேண்டும் என்று சொல்ல முடியாது. இறைச்சி மனிதனுக்கு ஒரு ஆரோக்கியமான சாப்பாடு அல்ல 

   தேரரே முஸ்லிம்களின் ஹலால் உணவு பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? 

   சங்கரத்ன தேரர்:- ஹலால் உண்மையிலே எங்களுக்குத் தேவையில்லை அது அவசியமும் இல்லை. அது கிடையாது.

    தேரரே போவத்தே  இந்திரரத்தின தேரரின் தீக்குளிப்பு பற்றி?

   சங்கரத்ன தேரர்:-  இன  மத பேதமின்றி எல்லோரும் ஒற்றுமையாக ஒரு மேசைக்கு வந்து அது சம்மந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியிருந்தால் தீர்வு நூற்றுக்கு நூறு கிடைக்க ஒரு வாய்ப்பு இருந்தது.ஆனால் அவருக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கு உடனடித் தீர்வாக எந்த இனத்திற்கும் எந்த மததிற்கும் பாதிப்பு வராமல் முக்கியமான ஒரு சட்டம் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.

   தேரரே சிங்கள முஸ்லிம் உறவு பற்றி?

    சங்கரத்ன தேரர்:-  ஆமாம் கிழக்கு மாகாணத்தை நாம் எடுத்துக் கொண்டால் இங்கு நான்கு சமயத்தைச் சேர்ந்தவர்களும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் நெருங்கிப் பழகி ஒற்றுமையாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் இங்கிருக்கும்  அதிகமான முஸ்லிம் முதலாளிமார்களிடம் இங்குள்ள சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்துதான் தொழில் செய்கின்றார்கள் உதாரணமாக இங்கு பார்த்தால் இங்குள்ள முஸ்லிம் முதலாளிமார்களிடம் வேலை செய்யும் தொழிலாளிகளில் பெரும் எண்ணிக்கையானோர் சிங்களவர்களும் தமிழர்களும்தான் இப்பிரதேசத்தில் இந்த உறவு நெடும் காலமாக இருந்து வருகின்றது. நடைபெற்று முடிந்த பயங்கரமான யுத்தத்திற்கு காரணம் எமது நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிகள் கொண்டு வரப்பட்டதாகும்.ஆனால் இன ரீதியாக மத ரீதியாக பிரிந்து யாராலும் வாழ முடியாது. இந்த நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் நாங்கள் ஒற்றுமையாக இணைந்து பேச வேண்டுமே தவிர தனித் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் அப்படி பேசுவதன் மூலம்  பிரச்சினை தீரப்போவதில்லை மாறாக வளர்ந்து கொண்டுதான் செல்லும்.

   தேரரே இஸ்லாமிய விழுமியங்களிலும் முஸ்லிம்களின் பண்புகளிலும் தங்களுக்கு பிடித்தவை?

   சங்கரத்ன தேரர்:- எங்களைப் பொறுத்தவரயில் எமது புத்த பெருமானிடம் இருக்கின்ற கலசார விழுமியங்களை  நாங்கள் பார்த்தாலும் கூட முஸ்லிம்களுக்கும் நல்ல சில விடயங்கள் உண்டு போற்றத்தக்கது. ஆனால் போதனை செய்கின்ற  பொழுது அதனை நாங்கள் பின்பற்றக் கூடியவர்களாகவும் மத ரீதியாக அதில் ஒரு பங்காளியாகவும் அவசியம் இருத்தல் வேண்டும். இதுவல்லாமல் சும்மா ஒரு அலங்காரத்திற்காக இருக்கக்கூடாது. சிங்களவர்களிடம் இருக்கின்ற நல்ல பண்புகள் அனைத்தும் முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. 

   தேரரே கல்முனை மேயர் விவகாரம் பற்றி?

   சங்கரத்ன தேரர்:-  கல்முனை மேயர் மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கூட அமைதியாக இருந்தவர். மக்களிடையே ஒற்றுமை சக வாழ்வை உருவாக்க அவர் தயாராக இருக்கின்றார். உதாரணமாக தற்போதய மேயர் இப்பிரதேசத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்க்கின்றார். இது போன்றுதான் ஹரீஸ் எம்.பியும் பிரச்சினைகளை நேரடியாகச் சென்று பார்த்தார். இது சந்தோசமான ஒரு விடயம். இது வரைக்கும் இப்பிரதேசத்தில் எந்த விதமான பிரச்சினை இல்லாததற்கு காரணம் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதுதான். இப்பிரதேசத்தில் அண்மையில் வீதிகளில் டயர் போட்டு எரித்தார்கள்  முஸ்லிம்களுக்கு கிரிஸ் மனிதன் போன்ற விடயங்களில் மன வருத்தம் ஏற்பட்டதன் காரணமாகத்தான் அச் செயல்பாட்டில் அவர்கள் இறங்கினார்கள் அவர்களுக்கு மன வேதனை இல்லாவிட்டால் ஒரு போதும் டயர்களை வீதியில் எரிக்கமாட்டார்கள். இச் செயல்பாடுகள் எல்லாம் எப்பையாவது ஒரு நாள் அதுவும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள்தான் செய்வார்கள் இவர்கள் இப்பிரச்சினைகளைக் கூடுதலாகவோ பெரிதாகவோ நடத்துவதில்லை. தங்கள் மனவருத்தங்களை. காட்டுவதற்காகவே இப்படி நடந்து இருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனைப் பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களைப் பற்றி யாரும் சரியாகக் கவனிப்பதில்லை. நான் இதனை இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட்டேயாக வேண்டியிருக்கிறது. கடந்த 1954 ஆம் ஆண்டிலிருந்து நாம் எடுத்துக் கொண்டாலும் சிங்கள மக்கள் அக்காலத்திலிருந்து கல்முனையில் வாழ்ந்து வருகிறார்கள் நான் அந்தக் காலத்தில் இருக்கவில்லை. அன்று சிங்கள மக்கள் கூடுதலாக கடைகள் பேக்கரி என்பனவெல்லாம் வைத்திருந்திருக்கிறார்கள் கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் மாத்திரமல்லாமல் அக்கரைப்பற்று போன்ற கரயோரப் பிரதசங்களில் வாழ்கின்ற சிங்கள மக்களும் சிறப்பாக வாழ்வதற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு இப்பிரதேச அரசியல்வாதிகள் உதவ வேண்டும்..இப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எல்லோரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதேமாதிரி தமிழ் மக்கள், சிங்கள மக்கள் வாழ்வாதாரம் வளர்ச்சி அடவதற்கும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள சிங்கள மக்களுக்கு சரியான முறையில் வாழ்வாதாரம் அமைத்துக் கொடுக்கப்படவில்லை எனில் இப்பகுதியில் சிங்கள மக்களைக் காணமுடியாத ஒரு சூழ் நிலை உருவாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இறுதியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.இதேபோல்தான் தமிழர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் முக்கியமாக் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.ஏனெனில் மக்கள் நிம்மதியாகவும் சமாதானமாகவும் தற்பொழுது இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் தமிழ் சிங்கள முஸ்லிம் வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாகவும் இப்பிரதேச மக்கள் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம் யுத்தம் முற்று முழுதாக முடிவுற்றதாகும்    இதுதவிர பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இது போன்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபே ராஜபக்ஷ அவர்களுக்கும் அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தை மிகவும் கவணத்தில் கொண்டு வந்து இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு எங்களையும் அழைத்து கலந்துரையாடி ஒத்தாசை தரல் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தற்போதய மேயரைப் பொறுத்த வரையில் அவரே தொடர்ந்து நடத்த வேண்டும். இதே போன்று இம்மாநகரத்திற்கு மேயராக வர விரும்புகிறவர்களும் இப்படியான ஒரு சமாதானத்தை உருவாக்க வேண்டிய நிலைமை  கட்டாயம் தேவை என்பதையும் கூறிக்கொள்வதற்கு விரும்புகின்றோம்.

    தேரரே இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி என்று எதை உடனடியாக அரசு செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? 

   சங்கரத்ன தேரர்:- வடக்குப் பிரதேசங்களுக்கு ரயில் பாதை அமைப்பது போன்று எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்பிரதேச மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் பாதை அமைக்கும் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் சந்தோசமாக வேண்டுகோள் விடுக்கின்றேன். 

    தேரரே பொது பல சேனா கல்முனையில் அலுவலகம் திறப்பது பொதுக்கூட்டம்  நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பது பற்றி ?

   சங்கரத்ன தேரர்:- எங்களைப் பொறுத்தவரையில்  எங்களுக்கு பொது பல சேனா கட்டாயம் தேவை. ஆனால் சிங்கள மக்கள் கூடுதலாக இல்லாத இடங்களில் காரியாலயம் திறப்பது என்பது எந்தப் பிரயோசனமும் இல்லை  இதனால்.பிரச்சினைகள்தான் வளரும். எங்கள் பிரச்சினைகளை நாங்கள் தீர்க்கவேண்டும்.பெளத்த சமயத்தைப் பாதுகாப்பதற்கு பொது பல சேனா  மாதிரி அமைப்புக்கள் எங்களுக்குத் தேவை இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் கல்முனையில் பொது பல சேனாவின்   காரியலயத்திற்கு  யாராவது கல்லெறிந்து விடுவார்களேயானால் அந்தச் செய்தி ஏனைய இடங்களுக்கு பரவிச் செல்கின்றபோது அங்கேயுள்ள சிங்கள மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் அதனால் இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோது மிகக் கவணமாகச் சிந்தித்துச் செய்ய வேண்டும்.

4 comments:

  1. we always welcome the Jaffna Muslim network but sometimes it is launching unwanted issues like this interview inclusive arguing the HALAL, HIJAB, BEEF etc etc are course to think for a new conflict.

    ReplyDelete
  2. No need to publish on off interviews at all here.We are muslim and we have our lifes some rules we follows that.No need other peoples opinions what like cow meats or halal foods.

    ReplyDelete
  3. தேவையில்லாமல் தேரரைப்போய் பேட்டியெடுத்து அவருக்கும் சமுதாயத்திற்குமிடையில் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம். அவர் தந்துள்ள பதில்கள் வரவேற்கத்தக்கதாக இல்லை. நடு நிலைவாதியின் பதிலல்ல.

    ReplyDelete
  4. Thanks Renees,Sindu Bindiya,irfan Majeed, this interview and the answers may provoke some youngsters so please avoid this type of informations after LTTE started to rule north and east no Sinhala people were residing in Kalmunai he is telling about tsunami victims........

    Please avoid we don't want any advice from others about our Islam

    ReplyDelete

Powered by Blogger.