Header Ads



மருத்து துறையின் நவீன கண்டுபிடிப்பு..!

வளர்ந்துவரும் விஞ்ஞானத்தின் எதிரொலியாக மருத்துவத் துறைகளிலும் எத்தனையோ வியத்தகு கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. அவற்றுடன் புதிய வரவாக இந்த சென்சார் மருத்துவமுறையும் இனி இடம்பெறக்கூடும். வருடக்கணக்காக ராணுவத்தினர் தண்ணீருக்கடியில் உபயோகப்படுத்தும் சோனார் கருவியின் செயல்பாடுகளை ஒத்த அல்ட்ரா சவுண்டு தொழில்நுட்பத்தை மருத்துவ சிகிச்சைமுறையில் கொண்டுவர, அமெரிக்காவின் பஃபலோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சோனாரின் சிறியதாக்கப்பட்ட வடிவைமைப்புடன் உள்ள கருவியை மனித உடலினுள் பொருத்துவதன்மூலம் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

 உயிரியல் மருத்துவத்தின் முன்னேற்றமான இந்தக் கண்டுபிடிப்பு, நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் விதத்தில் புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தக்கூடும் என்று டாம்மாசோ மெலோடியா என்ற மின்பொறியியல் துணைப் பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

 இத்தகைய தொழில்நுட்பம் பத்து வருடங்களுக்கு முன்னரே வளர்ச்சி அடையத் துவங்கியது. ஆனால், ஆப்போது, ரேடியோ மின்காந்த அதிர்வெண் அலைகள் மூலம் சென்சார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அதிக வெப்பம் வெளிப்பட்டது. மேலும், இத்தகைய மின்காந்த அலைகள், மனித தோல், தசை, திசுக்கள் போன்றவற்றில் ஊடுருவிச் செல்ல அதிக சக்தி தேவைப்பட்டது.

 மனிதனின் உடலில் 65 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால், அல்ட்ரா சவுண்ட் கதிர்களின் பயன்பாடு எளிதாக இருந்தது. அதனால், இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மனித உடலினுள் பொருத்தப்படும் பேஸ்மேக்கர், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கணிக்கப் பயன்படும் கருவி போன்றவற்றை இயக்குவது எளிதாக இருக்கும் என்று டாம்மாசோ தெரிவித்தார்.

 இதனை ஒத்த முறையில், ரத்தத்தில் குளுகோஸ் அளவை அறிவிக்கும் சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் அளவை கண்காணித்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய இன்சுலின் கருவியிலிருந்து தேவைப்பட்ட இன்சுலினை ரத்தத்தில் கலக்கச் செய்தல் சாத்தியமாகக் கூடும். இந்தத் தொழில்நுட்பத்தில் சாத்தியமாக்கக்கூடிய பயன்பாடுகள் அதிகம் உள்ளன. நாம் இவற்றிலிருந்து என்ன பெறமுடியும் என்று ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என்றும் டாம்மாசோ கூறினார்.

No comments

Powered by Blogger.