யாழ்ப்பாண மேயர் முஸ்லிம்களை பழிவாங்குகிறார் - முஸ்தபா குற்றச்சாட்டு
(பாறூக் சிகான்)
யாழ் மாநகர முதல்வர் யாழ் முஸ்லீம்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம் .எஸ் முஸ்தபா தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் எமது கட்சி எங்கள் நாட்டின் தலைவர் மஹிந்த ராஸபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் சார்ந்த கட்சி மற்றும் பங்காளி கட்சிகளுடன் இணைந்து ஒன்றாக செயற்பட்டோம். அந்த வகையில் யாழ் மாநகர சபையில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி கட்சியுடன் இணைந்து நான் உட்பட 4 முஸ்லீம் மாநகர சபை உறுப்பினர்கள் .இணைந்து ஆதரவு தெரிவித்து வந்தோம்.
கடந்த காலத்தில் ஒரு சில சலுகைகளை காட்டி எங்களை பயன்படுத்தி தமது அபிவிருத்தி வேலைகளை செய்தனர். இன்று எம்மக்கள் மேயரின் அதிகார துஸ்பிரயோகத்தினால் வேலை இழந்து , நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் கூட முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மீது மாநகர சபையில் கொணரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து இன்று வரை முதல்வராக அவரை இருத்தியவன் நான். ஆனால் மேயரின் தலையெழுத்தை மாற்றிய என்னை கூட அவர் மறந்து நடக்கிறார்.
எனது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். இதன் தொடர்ச்சியாக யாழ் பொது நூலகத்தில் வேலை செய்த எனது மகளை திடிரென வேலைநீக்கம் செய்துள்ளார். இதுதவிர ஏனைய யாழ் மாநகர சபை பிரிவில் தற்காலிக அடிப்படையில் வேலை செய்த முஸ்லீம்களை இடைநிறுத்தியுள்ளதுடன்,சிலரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி பதவி இறக்கியுள்ளார்.
இவ்வாறான நிலையினை பார்க்கின்ற போது எம்மீது முதல்வர் பழிவாங்கும் விடயமாகவே பார்க்கிறேன். இது தொடரும் பட்சத்தில் முக்கியமான மீளவும் முதல்வருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரனை மேற்கொள்ளப்படும் என்றார்.
இது தொடர்பான ஈபிடிபி மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாமினை தொடர்பு கொண்டு கேட்ட போது,
தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மேற்படி உத்தியோகத்தர்கள் மேயரின் வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்கு மேலதிகமான காலம், மற்றும் திட்டமிடாத ஆட்சேர்ப்பினால் ஆளணி வளம் அதிகரித்ததன் காரணமாக சம்பளம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து இவ்வாறான முடிவு முதல்வரால் எடுக்கப்பட்டிருக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.
அப்ப என்னத்துக்கடா இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்
ReplyDeleteஅப்ப என்னத்துக்கடா இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்
ReplyDeleteமுஸ்தபாவுடைய மகளை மேயர் வேலை நீக்கம் செய்தாராம்: மேயர் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டாராம். நல்லா இருக்குதய்யா கதை…
ReplyDeleteஐயா முஸ்தபா அவர்களே! மேயர் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தது இப்பதான் உங்க கண்களுக்குத் தெரிந்ததா? அதுவரைக்கும் என்ன கூலிங்கிலாசா போட்டு இருந்தீங்க, எதுவும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். இப்போ முஸ்தபாவுக்கு வந்திருக்கின்றது. பொதுவாக யாழ்ப்பாணத்தில் பதவியில் இருக்கும் உயர் அதிகாரிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது இன்று நேற்று நடக்கும் விடயம் கிடையாது. அது நீண்டகாலமாக நடக்கின்றது.
முஸ்தபா, அஷ்கர், அஸ்பர் ஆகிய மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேயர் தன்னுடைய விஷேட அதிகாரத்தின் மூலம் யாழ் நகரின் மத்திய சந்தைக்கு அன்மித்த இடத்தில் 3 கடைகளை வழங்கினார். மூவரும் தமது கடைகளை 8-11 இலட்சம் ரூபாய்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபல வட்டிக்காரர்களுக்கு(முஸ்லிமல்லாதவ்ர்களுக்கு) ரொக்கப் பணத்துக்கு விற்றுவிட்டு காசோடு காணாமல் போய் மூன்றுமாதம் கழித்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்கள். இதுவிடயமாக உதயன் பத்திரிகை விரிவான செய்தி வெளியிட்டது. அப்போது சுமார் 40க்கும் அதிகமான முஸ்லிம் நடைபாதை வியாபாரிகள் தமது அன்றாட ஜீவனோபாயத்தை தேடிக்கொள்வதில் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள், அவர்களுக்கு மாநகர சபையா இடையூறாக இருந்தது. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை
யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தின் உள்வீதிகள் எதுவுமே புனரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக இருந்து, வடிகால்கள் எதுவும் சீரமைக்கப்படாமல் இருந்தது. அப்போது மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்க வில்லை
இன்றுவரை, யாழ்ப்பாண முஸ்லிம்களின் காணிகளுக்கு ஒழுங்கான இலக்கங்களோ, அளவீட்டு மதிப்பீடுகளோ, வரிப்பண பதிவு இலக்கங்களோ சீராக கிடையாது, மாநகர சபையின் விலாச இலக்கங்களிலும் பல கோளாறுகள் இருக்கின்றன, இவை இந்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு விளங்குவதில்லை.
முஸ்லிம் பிரதேசத்தில் தேவையிலாமல் ஒரு மார்க்கெட் கட்டியிருக்கின்றார்கள், ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் அது கேட்பார் பார்ப்பார் அற்று இருக்கின்றது. இது இவர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை
இவ்வாறு இன்னோரன்ன பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற நிலையில் அவை எதுவும் தெரியாதவர்களாக தனது மகளுக்கு வேலை போய்விட்டதால் மாநகர முதல்வர் முஸ்லிம்களின் துரோகியாவிட்டார் என கருத்து வெளியிடுகின்றார்.
உண்மையில் நடந்தது என்ன? யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு இரண்டு வழிகளில் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள்
01- உள்ளூராட்சி அமைச்சினால் நியமிக்கப்படுவது (நிரந்தரம்)
02- மாநகராட்சியினால் நியமிக்கப்படுவது (தற்காலிகம்)
ஒரு கட்சி ஆட்சியில் இருக்கின்றபோது அவர்களுக்குத் தேவையான பதவி நிலைகளை, தொழில் நிலைகளை உருவாக்கி தற்காலிக நியமனங்களை வழங்குவார்கள். இதனடிப்படையில் யாழ் மாநகர சபையிலும் நியமனங்கள் வழங்கப்பட்டன. யாழ் மாநகர சபையில் தற்போது அதிகாரத்தில் இருக்கும் அணியானது தனது வருவாயையும் மிஞ்சுகின்ற அளவிற்கு உத்தியோகத்தர்களுக்கான வேதனத்தை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அன்மையில் செய்திகள் கசிந்தன, இதனை நிவர்த்துக்கும் முகமாக தனது ஊழியப்படையினை குறைத்துக்கொள்ள குறித்த ஆளும் கட்சி முடிவு செய்தது. இதற்கான கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் நடைபெற்றபோது ஊழியப்படையினை குறைப்பத்தில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள், எனவே வேதனத்தை அரைவாசியாகக் குறைத்தல் என்ற அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டது, இதனை சகிக்காத ஒரு சிலர் தாமகவே பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர், முதல்வர் எவரையும் பதவியில் இருந்து நீக்கவில்லை. இதுதான் உண்மை நிலைமை.
எமது முஸ்லிம் பிரத்நிதிகளின் சமூகப்பற்றுகளை இப்போதாவது நாம் புரிந்துகொண்டால் சரி
ஐந்து சந்தியில் இருந்து ஐதுரூஸ்
முஸ்தபா ஏழை அகதி மக்களின் வாக்குகளில் மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்டது, ஏழை மக்களுக்கு சேவை செய்யவா, அல்லது தனது மகளுக்கு வேலை எடுத்துக் கொடுக்கவா?
ReplyDeleteI appreciate Jaffna mayor and his work, well done!! This should be a good lesson for selfish and so-called muslim politicians.
ReplyDelete