Header Ads



பஷீர் சேகுதாவூத்தின் அதிசய கண்டுபிடிப்பு


(Vi) பள்ளிவாசல்களுக்கு கல் எறிந்தும் முஸ்லிம்களின் ஹலால் மற்றும் அபாயா பற்றி மிக மோசமாக பேசியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம் மக்களை திசை திருப்புவதற்கு தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்விடயத்தில் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கூறினார்.

ஏறாவூர் தாய் மண் அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 02ஆவது முறையும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக இருக்கின்றார். இந்நிலையில் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் ஆட்சி மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து ஜனாதிபதிக்கு எதிரான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

18ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்நாட்டில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடலாம் என்ற நிலைமை மாற்றம் அடைந்த பின்பு இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்குவார் என்ற நிச்சயத்தன்மை பொதிந்துள்ள நிலையில் பல சக்திகள் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தில் களமிறங்கியுள்ளன.

இதன் ஓர் அங்கமாகவே இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை இச்சக்திகள் முன்னெடுத்து வருகின்றன. இதனால் நூறு வீத முஸ்லிம்களையும் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்கச் செய்வதே இவர்களின் குறிக்கோளாகவுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் என இவர்கள் நினைத்துக் கொண்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசுடன் இணைந்த பின்பு வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் ஆதரவு அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைக்கும் என்பதை கணக்குப் பார்த்து செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதியை மாற்றுகின்ற இச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமாக முஸ்லிம் சமூகம் பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பல விதமான அடக்கு முறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர்.

இதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது கல்லெறிதல், ஹலால் விடயம் முஸ்லிம் பெண்களின் அபாயா போன்ற விடயங்களை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு எதிராக முஸ்லிம்களை திசை திருப்பவே இத்தகையவர்கள் சதி செய்கிறார்கள் எனவும் கூறினார்.
.

18 comments:

  1. நீர் அரசியல் சில்லறை வியாபாரி. உன் பேச்சை யார் நம்புவார் . மட்டக்களப்பின் சில்லறைகள் முஸ்லிம் அரசியலுக்கே சாபக்கேடு .

    ReplyDelete
  2. athai ean janathipathi aseervathikkirar ummaip pontra muttalkal ulla varai ennum eppirachina patry eryum

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. என்னது இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினையா ?

    இதை வாசிக்கும் போது ஒரு தமிழ் திரைப்படத்தின் நகைச்சுவை வசனம் ஞாபகம் வருகிறது ........."என்னது காந்தி.....செத்திட்டாரா" ?

    காக்கா உங்களுக்கு பொழுது போகாவிட்டால், தயவு செய்து வாசிகசாலைப் பக்கம் போகாதீங்கோ, போனாலும் பழைய பேப்பர படிக்காதங்கோ ?

    சில நேரம் இந்திய அமைதிப்படை ( 1987 ) இலங்கைக்கு போன மாதம் ( மே, 2013 ) வந்தது என சொன்னாலும் சொல்லுவீர்கள் ?

    ReplyDelete
  5. பசீர் அவர்களே என்னமா நக்குரிங்க
    அரசியல் இலாபாத்துக்காக மனசாட்சியையும் ஆண்மையையும் விற்றுவிட்டு பேசும் உம்மைப்போன்ற நயவஞ்சகர்களுக்கு உரிய பாடம் புகட்ட முஸ்லிம் சமூகம் இன்னும் பின் நிற்பதையிட்டு மனவேதனையாக உள்ளது..
    அத்தனை முஸ்லிம்களையும் மந்தைகளாக நினைத்துகொண்டு நீர் பேசி இருக்கும் பேச்சு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே ஆத்திரமடைய செய்துள்ளது.
    உனக்கு கிடைக்கும் நக்கு சோற்றை நக்க உண்மைக்கு புறம்பாக பேசிய உம்மைப்போன்றவர்களை தலைமயாகொண்டு இயங்கும் முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் முஸ்லிம் மக்கள் மத்தியில் நாடகம் ஆடுவதை விட்டபாடுமில்லை, அதனை கண்டு ரசிக்காமல் கிழக்கும் முஸ்லிமகள் நிமிர்ந்தபாடுமில்லை..
    உலகமே நடுங்கும் பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட ஒரே ஒரு உலக தலைவன் என்பவருக்கா அவருக்கு எதிராக இயங்கும் இந்த சிறிய குழுக்களை அடக்க முடியாதுள்ளது. உமது பேச்சு ஜனாதிபதியை கிண்டலடிப்பதுபோலுள்ளது.

    ReplyDelete
  6. well said....., Mr. Mirshal

    ReplyDelete
  7. So.why this government still allowed this stupids To do theirs protest.Bazeer like a pachonthy

    ReplyDelete
  8. There is no sense in Baheer Shekh Dawood's speech. It's utter shame to have such biased thoughts on the part of a Muslim Politician. It's a democratic right of every single citizen of a country to have their freedom of choice. There is no hard and fast rule as to why one would choose a particular leadership at all times. In the end, it would be the merits on performance of a leadership that make the voters make decision on whether a leader is retained or rejected.

    In this regard, if one were to weigh the good and bad of a leadership in a Muslim layman's term he would say the current leadership is "not a Muslim or minority friendly one". The reason for this position is, may be, more than one; If I recall it correct, it would be the 'Athan' (prayer call) to begin with has been banned or limited some years ago followed by vandalising Mosques preventing exercising religious freedom and, along with this is the rise of halal issues. This has not been resolved as yet. Moving on, the hindrances on Muslim businesses, the life blood of Most Muslims by the hard-core elements such as BBS, SR and JHU is so severe . Sadly the president and Defence Secretary showing blind eye to atrocities committed on all Muslims

    Finally, if Basheer Shakh Dawood still thinks the Muslims, having taken into consideration of the injustices caused by the current leadership, should be in favour of the him, then, I have to say insanity rules over him.

    ReplyDelete
  9. அமைச்சர் அவர்களே,
    வசனத்தை மாற்றிச் சொல்கிறீர்கள் ஜனாதிபதிக்கு எதிராக முஸ்லிம்கள் அல்ல,
    முஸ்லிம்களுக்கு எதிராக ஜனாதிபதியை - என்று பேசினால் பொருத்தமாக இருக்கலாம்.
    பெரிய கண்டு பிடிப்புதான் இது .....

    ReplyDelete
  10. sorry neengal oru arasiyalvathi illai arasiyal viyapari

    ReplyDelete
  11. நக்குண்டார் நாவிழந்தார் என்பதை நிருபிங்க சேர். நீங்கள் கொள்கை பாரப்புகாக செய்யும் போது மிகவும் ரசித்தோம் அன்று உள்ளத்திலும் உதட்டிலும் உண்மை இருந்தது. இப்ப வெறும் மஹிந்த மட்டும்தான் இருக்கார். அல்லாஹ்வைக் கூட மறந்திட்டீங்க.
    அஸ்வர் காதர் அடுத்த இடத்த நீங்க பிடிச்சிடுவீங்க போல இருக்கு.
    - சம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம் -

    ReplyDelete
  12. மற்றவர்களை நம்பியுள்ளவன் அதாவது கையாலாகாதவன் என்று சொல்லுவார்களே அத்துடன் பொய் பித்தலாட்டம் செய்யக்கூடியவனின் பேச்சு இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  13. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கே சாபக்கேடான ஜன்மங்கள். அவ்வளவுதான் சொல்லலாம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  14. muthalil muslim congress vote potuvathai nirutha venum, kilakku mahanathil vanthu mahinda periya mosamana aalu entru pesi makaludaya vote edupanga, piragu mabolla mosque kku poi avanga ellaruma decide panni vittu mahinda pakkam poi seruvaanga, ethu enna pilappu ungalukku, itha vida ivanga ellarum sernthu pichai edukka pohalaam.

    ReplyDelete
  15. கடைசியா பதவியை எடுத்த நீங்கள் எப்படி ஜனாதிபதியை விடமுடியும்

    ReplyDelete
  16. ஆக... இது மஹிந்தவுக்கு எதிரான கும்பல் என்று சொல்ல வருகிறீரா பஷீர் காக்கா??? அப்படி என்றால் இந்த பல சேனாக்களில் ஒரு கலகொட அத்தேவையோ... அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது சாரையையோ தேரையையோ கைது செய்து காட்டுங்கள் பார்ப்போம்...

    அல்லது... நீங்கள் உண்மை முஸ்லிம் அரசியல் வாதியாய் இருந்தால் கல்முனையில் நடக்க இருக்கும் BBS இன் மாநாட்டை தடுப்பதற்கு பகிரங்கமான எதிர்ப்பை காட்டுங்கள் பார்ப்போம்...

    இன்னும் மக்களை மடையர்கள் என்று நம்பிக்கொண்டு இருக்கும் அரசியல் வாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட கையை கசக்கிக்கொண்டு இன்னுமொரு தேர்தலை எதிர்பார்த்திருக்கும் மக்களிடம் உங்கள் பொய்ப்பிரச்சரங்கள் இனிமேலும் எடுபடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..

    நிச்சயமாக... நக்குண்டு நாவிழந்த ஒரு சிலரைத் தவிர்த்துள்ள நூறு சதவீத முஸ்லிம் வாக்குகளும் இந்த இனவாத அரசாங்கத்துக்கு எதிராகவே என்பதை எல்லோரும் பார்க்கத்தான் போகிறோம்.. இன் ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  17. onbadodu 9 pattawadayum 10 settu nayawanjahakkootum koodikkonde pohudappa arasiyal wadihalai kurai solla wendaam awarhalai weittu koottam podum maangai madayarhal anda oorwasihalai ennawendru solwadu

    ReplyDelete
  18. பஸீருக்கு தேவை முஸ்லிம் காங்கிரஸ் அல்ல தமிழ்மக்களுக்கு கிடைக்கும் வடகிழக்குத்தீர்வில் பங்கு அதற்கான சகல காய்நகர்த்தல்களும் அவர் கட்சிதமாக செய்து முடித்துவிட்டார் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்காலத்தில் படுதோல்வி கானும் என்பது அவருக்கு எப்பவோ தெரிந்த உண்மை அது உங்களுக்கும் காலம்தாழ்த்தித் நிதானம் கிடைக்கும் இருந்த பாருங்கள்

    ReplyDelete

Powered by Blogger.