Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி பொறியியலாளர்களுக்கான ஓன்று கூடல்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் கொழும்பில் தொழில் புரியும் பொறியியலாளர்களுக்கான ஓன்று கூடல் ஜூன் 1ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.

இந் நிகழ்வு ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இராப்போசனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்  சுமார் 25 பொறியியலாளர்கள் கலந்து கொண்டனர். கொழும்பு கிளையின் பிரதி தலைவரும் பொறியியலாலருமான அஸ்லம் சஜா தலைமை தாங்கியிருந்தார்.  

இந்நிகழ்வின் ஒரு விசேட அம்சமாக தன்கொட்டுவ பீங்கான் தொழிற்சாலையில் தொழில்நுட்ப பொது முகாமையாளராக கடமையாற்றும் பொறியியலாளர் கலாநிதி U.பாரூக் அவர்களின் உரை இடம்பெற்றது. இவர் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முதலாவது பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கை மின்சார சபையில் தலைமை பொறியியலாளராக கடமையாற்றும் M.M. அலியார் அவர்களின் உரையும் இடம்பெற்றது. 

மற்றுமொரு விசேட அம்சமாக கொழும்பு கிளையினால் "த ஸஹிரியன்" என்ற செய்தி மடல் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இதன் முதற் பிரதிகள் இந்நிகழ்வின் அதிதிகள் இருவருக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இச்செய்தி மடல் தயாரிப்பில் துணை செயலாளர் தௌபீக் எம். கான் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பொறியியலார்கள் ஒன்றுகூடலை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு ஓர் குழு அமைக்கப்பட்டதுடன் பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இது கல்முனை ஸாஹிராவின் கல்வியலாலர்களுக்கான ஒன்றுகூடல் தொடரின் இரண்டாவது நிகழ்வாகும். கடந்த மார்ச் மாதம் வைத்தியர்களின் ஒன்று கூடல் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



2 comments:

  1. Dear Zahirian Engineers,

    we are proud of you that your are all from zahira's output bcz iam also zahirian's old boy.

    All are welcome, but we have to give our support hands more & more for OUR KALMUNAI ZAHIRA, bcz Our Zahira's Education situation is going to bad to worse situation.

    plz jon all to serve for our future of Society... Alhumdulillah.

    ReplyDelete
  2. Nice to see our seniors and friends, though am from out of that specified area, am so thankfull for the organisors and participants.

    Abdurrahman,Qatar(in 1996 passed out from Peradeniya,Hemman)

    ReplyDelete

Powered by Blogger.