கல்முனையில் 'பீச் பார்க்' - தடைகளை தகர்க்க ரவூப் ஹக்கீமின் உதவியை நாடும் மேயர்
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபின் முயற்சியின் பயனாக சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் சுமார் 15 மில்லியன் ரூபா செலவில் கிழக்கின் முன் மாதிரியான “பீச் பார்க்” ஒன்று அழகான முறையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதல் கட்டம் 60 இலட்சம் ரூபா செலவில் தற்பொழுது முடிவடைந்திருப்பதாகவும் இரண்டாம் கட்ட வேலைகள் 90 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அழகான முறையில் அமைக்கப்பட்டு வரும் இப் பீச் பார்க் வேலைத் திட்டத்தை ஒரு சிலர் தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகவும் அது அவர்களின் பகல் கனவாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ள மேயர் சிராஸ் மீராசாகிப் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இப் பீச் பார்க் அமைப்பதற்குள்ள தடைகளை நிவர்த்தி செய்து துரிதமாக இவ் வேலைத் திட்டத்தை முடிப்பதற்கு வழி வகுத்துத் தரல் வேண்டும் என்றதொரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.
சாய்ந்தமருதுக்கு ஏதோவொரு சாபம் இருக்கிறது ஏன் என்றால் யாரவது நல்லது செய்தால் அதை ஒரு கூட்டம் எதிர்த்துக்கொண்டே இருக்கிறது மர்ஹூம் அஷ்ரப் காலத்தில் ஒலுவிலில் ஒரு பல்கலைக்கழகம் நாங்கள் இடம் பார்த்து திரிந்த போது இந்தக்கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வந்து எங்கள் அமைச்சில் கூறினார்கள் என்ன வேலை பார்கிறார் இந்த அஷ்ரப் மூத்திரம் கழுவதெரியாதவன் எல்லாம் பட்டதாரியாக வந்தால் நமக்கு ஏது மதிப்பு என்று கேட்டதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை இன்னும் ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது சாய்ந்தமருத்துக்கு ஒரு தொழில்நுட்ப நிலயம் அமைப்பதற்கு நான் கொழும்பில் shm ஜமீலை சந்தித்து அவருடைய வீட்டை வாடகைக்கு எடுப்பதட்கு அவரின் சம்மதம் பெற்று அங்கு சென்றபோதுஇது மையோன் வயிற்றில் அடிப்பதற்குதிறக்கபடுகிறது என்று எதிர்ப்பு காட்டினார்கள் பின்னர் நான் அதை சம்சம காரியப்பர் வீட்டில் திறக்க ஒழுங்கு செய்தேன். எனவே மேயர் சிராஸ் அவர்களே நீங்கள் நல்லது செய்கிறீர்கள் என்று தெரிகிறது.போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றுபவர்தூற்றட்டும் ஏற்றதொரு கருத்து உன் மனசாட்சிக்கு சரி என்றால் எதற்கும் தயங்க வேண்டாம் please carry on your good work
ReplyDeleteகல்முனையில் வீடற்ற ஏழைகள் அதிகம். இதனால் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட குமர்கள் ஏராளம். இவற்றுக்கு மத்தியில் உல்லாசம் புரிய கல்முனையில் பீச் பார்க். வாழ்க! வளர்க! மேயரின் உல்லாசம் தொடரட்டும்
ReplyDeleteThis park was not approved by the Coastal Conservation department ! Thus he is seeking 'political'support from the RH!! Please be a responsible media !
ReplyDeleteThis park is being constructed from the funds of NELSIP project which is implemented in all the local bodies in North-East provinces since Jan 2011 !! If Siraz were not there , the park would have been constructed or some other projects might be done !
The reporters of "Jaffna Muslims" are biased ( or already licked the bones of Siraz) ! News are coming with one intention !!
மாநகர தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட சுழற்சிமுறை மேயர் பதவியின் முதல் பதவி காலம் முடிவுக்கு வரும் நிலையில் மேயரினால் முன்னெடுக்கப்படும் தனது பதவியை தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஒரு முயற்சியே பீச் பார்க் விடயம் ஒரு சிலரினால் தடுத்து நிறுத்தும் கைங்கரியம் என்பதாகும், இதன் மூலம் பிரதேசவாதம் இன்னும் கூர்மை அடையுமே தவிர ....வேறு பயன் கிடைக்குமா என்பது கேள்விகுறியானாலும் அதற்கு தூபமிட்டு மு.கா.தலைவரும் சாதுரியமாக காய் நகர்த்துவார்.
ReplyDeleteகல்முனை மேயர் கலாநிதி சிராசின் இந்த முயற்சிக்கு முழு சாய்ந்தமருது மக்களும், SLMC தலைவர் உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் நிட்சயம் கிடைக்கும்.
ReplyDeleteபுல்லுரிவிகள், கோடாரிக்காம்புகள் தூக்கி வீசப்பட வேண்டும், புறக்கணிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரு ஊரின் பொது நலம், அபிவிருத்திக்கு எப்பொழுதும் முழு ஒத்துழைப்பு வழங்குவோமாக.