Header Ads



ஆஸாத் சாலியின் கூட்டம் நடைபெறவிருந்த உணவகத்திற்கும், உரிமையாளர் வீட்டிற்கும் ஒயில்

(நஷ்ஹத் அனா)

ஓட்டமாவடியில் நாளை (29.06.2013) ஆஸாத் சாலியின் கூட்டம் நடைபெற இருந்த உணவகத்திற்கும் உணவகத்தின் உரிமையாளரின் வீட்டிற்கும் ஒயில் தெளித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி மீறாவோடை பிராதன வீதியில் அமைந்துள்ள மன்னு ஸல்வா கோடை வாசஸ்தள உணவகத்திலும் ஓட்டமாவடி சேர்மன் வீதியில் அமைந்துள்ள மன்னு சல்வா உணவகத்தின் உரிமையாளர் அபூபக்கர் ஜூனைதீன் என்பவரின் வீட்டிற்கும் ஒயில் தெளிக்கப்பட்டுள்ளது.

இன்று 10.45 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். சம்ப நேரம் வீட்டில் ஒருவரும் இருக்க வில்லை என்றும் உணவகத்தில் தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால் எவர் இதனைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது என்றும் அவர் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

ஆஸாத் சாலியின் கூட்டத்தினை ஏற்பாடு செய்த ஆஸாத் சாலி பௌன்டேசனின் கல்குடாத் தொகுதி இணைப்பாளரான ஹயாத்து முஹம்மது நிஜாம்தீன் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் நாளை நடாத்தவிருந்த கூட்டத்தை தடுப்பதற்கு விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட செயலாகவே இதனை தான் கருதுவதாகவும் நாளைய கூட்டத்திற்காக வாழைச்சேனை பொலிஸில் அனுமதி பெற்றே கூட்டத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. Hi Friends,

    நம்மவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய கேவலமானதும் கோழைத்தனமானதுமான செயல் இது.

    ReplyDelete

Powered by Blogger.