கொலைகார வெறிநாயின் வளர்ச்சிப் பாதை!
(எழில் பிரகாசம்)
அரசியலில் ஆளும்கட்சி-எதிர்கட்சி ஆகிய இரு தரப்பினரால் யாருக்கு லாபமோ இல்லையோ, அவர்களை ஆட்டுவிக்கும் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கும்
அவர்கள் வீசும் எலும்புத் துண்டுக்காகக் காத்திருக்கும் செய்தி ஊடகங்களுக்கும் கொள்ளை லாபம். தேர்தல் நெருங்கிவிட்டால் இவர்களின் ஒட்டுமொத்த கவனமும் எப்படியெல்லாம் கல்லா நிரப்பலாம் என்ற குறிக்கோளுடனேயே இருக்கும். இவர்களது ஊடக தர்மங்களும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைப்போல் ஆட்டுவிப்பதற்கேற்ப தலையாட்டும்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எழுதும்வரை அரசு விளம்பரங்களும் இன்னபிற சலுகைகளும் கொட்டோ கொட்டென்று கொட்டும். பிரதமருடன் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்ளவும் வெளிநாட்டுப் பயணங்களின்போது செய்தியாளர் என்ற போர்வையில் சொகுசு பயணம் செய்வதிலாகட்டும் எல்லாவற்றிலும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்கட்சியினருக்கு வாலாட்டி விசுவாசம் காட்டும் ஆளுங்கட்சியால் கண்டுகொள்ளப்படாத இரண்டாம்தர ஊடகங்களுக்கும் கிட்டத்தட்ட இதே ராஜ உபசாரம் கிடைக்கும்.
ஊடக முதலாளிகளைப் பொறுருத்தவரை ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒருகவலையுமின்றி , தங்கள் வயிறு நிரப்பும் எஜமானர்களின் நலனுக்கேற்ப இவர்களின் ஊடக தர்மம் பல்லிளிக்கும். எந்தக் கட்சிக்கு முந்திக் கொண்டு ஜால்ரா தட்டுவது என்ற போட்டியால் பலசமயங்களில் அரசியல் கட்சிகளின் பிரச்சார பிரசுரங்களையே விஞ்சுமளவில் பத்திரிக்கைகளிடையே போட்டி நிலவும். இந்தியாவில் எல்லாவற்றுக்கும் விலையுண்டு எனும்போது லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் மட்டும் விதிவிலக்கல்ல என்பதற்கு சமீபத்திய உதாரணம் குமுதம்.
இந்தியளவில் பாஜகவின் பிரச்சார பீரங்கி இந்தியா டுடே என்றால், தமிழகத்தில் தினமலர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனினும் தினமலரின் சங்பரிவார விசுவாசத்தை விஞ்சும்படியாக அவ்வப்போது சில பத்திரிக்கைகள் போட்டியிடுவதும் உண்டு. அவ்வகையில் அத்வானியையே பின்னுக்குத்தள்ளிவிட்டு முன்னேறியதோடு சங்பரிவாரத்தின் கனவு பிரதமராக முன்னிறுத்தப்படும் மோடியை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் ஊடகங்களின் பட்டியலில் குமுதமும் இணைந்துள்ளது.
குமுதம் ஒன்றும் சமூக அக்கரையுடன் செயல்படும் ஊடகமல்ல என்றாலும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் பத்திரிக்கை. குமுதத்தின் உள்ளடக்கம் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்பட்டதாகவோ அல்லது சினிமா தொடர்புடைய கிசுகிசு, கவர்ச்சிப்படங்களால்தான் பக்கங்கள் நிரப்பப்படும் என்றாலும் ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல் குமுதமும் வாசிக்கப்படுகிறது. வாசகர்களின் வாசிப்பையும் அரசியலாக்கி காசு பார்க்கும் உத்தியில் குமுதம் தீவிரமாக இறங்கியுள்ளதால், அதன் முரண்ன்பாட்டையும் அரசியல் சார்பு நிலைப்பாடையும் மக்களிடம் தோலுரித்துக் காட்டவேண்டியது அவசியமாகிறது.
அரசியல் பத்திரிக்கைகளைப்போல் வெகுஜன பொழுதுபோக்கு ஊடகங்களிலும் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சார்ந்த செய்திகள் கண்ணில் தட்டுப்பட ஆரம்பிக்கும். பெட்டிச்செய்தி, கார்ட்டூன், கேள்வி-பதில் என்று வாய்ப்புகிடைக்கும் அனைத்து வழிகளிலும் ஆதரவு பிரச்சாரத்தை ஊடுருறுவச் செய்து வாசகர்களிடையே கருத்துத் திணிப்பு செய்வதோடு தலையங்கத்திலும் உச்சபட்ச விசுவாதத்தைத் தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சிக்குக்காட்டி முடிந்தவரை ஆதாயம் பெறும்.
கடந்த 10 ஆண்டாண்டுகளாக அரசியல் வரட்சி கண்டுள்ள பாஜகவின் கடைசி ஆயுதமாக இருக்கும் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் போட்டிக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனைப் புரிந்துகொண்ட ஊடகங்களும் 10 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசுமீதுள்ள அதிருப்தியை, பாஜகவுக்கு குறிப்பாக மோடிக்கு ஆதரவாகத் திருப்புவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கின்றன. 'இனச்சுத்திகரிப்பு படுகொலைகள் புகழ்' நரேந்திர மோடியின் நிர்வாகத்திறமையாக இல்லாததைச் சொல்லி புகழ்ந்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல மோடியை விட்டால் வேறுநாதியே இல்லை என்பதாகவும் செய்திகளை வெளியிடுகின்றனர்.
குமுதம் 19-06-2013 இதழில் மின்சார பிரச்சினையை மையமாக வைத்து, அடுத்த பிரதமராக மாநில முதலமைச்சராக இருந்து அனுபவமுள்ளவரையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அரியகண்டுபிடிப்பை தலையங்கமாகத் தீட்டியுள்ளது. மோடியை விட்டால் பாஜகவினருக்கு வேண்டுமானால் வேறுநாதியில்லை; குமுதம் வாசகர்களுக்கு என்ன நேர்ந்தது?
முந்தைய பிரதமராக இருமுறை இருந்த வாஜ்பாய் எந்த மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர் என்றும் தெரியவில்லை!
மாநில முதல்வராக இருந்து அனுபவம் பெற்றவரே பிரதமராக இருக்கத் தகுதியானவர் என்றால் மோடியை விடவும் திறமையானவர் என்று அத்வானியின் சான்றிதழ்பெற்ற மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் மோடியைவிட பொருத்தமானவர். குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போதுதான் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டனர். முதலமைச்சர்களிலேயே சொந்தமாநில மக்களை இனச்சுத்திகரிப்புசெய்ய முன்னின்று வழிகாட்டிய அனுபவஸ்தர்தான் நரேந்திர மோடி. அதனால்தான் குஜராத் படுகொலைகளில் ஈடுபட்ட மோடியின் கூட்டாளிகள் 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டபோது, "கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்கவேண்டிய இடம் தூக்குமேடை" என்று குமுதமும் பதிவு செய்தது.
2007-ல் வெறிநாயாக வும் தூக்குமேடைக்கு அனுப்பப்பட வேண்டியவராகவும் குமுதத்தால் முன்மொழியப்பட்ட ஒருவர், 2014 ல் பிரதமர் நாற்காலிக்கு முன்மொழியப்படுகிறார் என்பதிலிருந்து "அரசியல்வாதிகளிடமிருந்து பெட்டி பெறும்" ஊடக வியாபாரிகளின் கேவல முகம் பளிச்சிடுகிறது!
ONE DAY HE'LL GET RIGHT PUNISHMENT
ReplyDelete