மட்டக்களப்பு புத்தர் சிலை விவகாரம் சூடுபிடிப்பு - பொதுபல சேனா எதிர்ப்பு
மட்டக்களப்பு நகரில் (வடக்கு பிரதான நுழைவாயில்) பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை வைப்பதற்கு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக தான் கொழும்பு மேல் நீதிமன்றத்தை நாடப் போவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன ரத்தன தேரர் தெரிவிக்கின்ற அதேவேளை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிராக கடந்த
புதன்கிழமை அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொலிஸார் முன்வைத்த
அறிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், அதற்கான வேலைகளுக்கு தடை விதித்தது.
மட்டக்களப்பு நீதிமன்றம் புத்தர் சிலை வைப்பதற்கும் அது தொடர்பான
நடவடிக்கைகளுக்கும் ஏற்கனவே விதித்துள்ள தடை உத்தரவில் எதிர்வரும் 12ம் திகதி
மங்களராமய விகாராதிபதியையும் சில உள்ளுர் மக்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும்
பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.
இதனிடையே பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மக்கள் செறிந்து வாழும் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை நிர்மாணிப்பது தவறான அணுகுமுறையாகும். அப்பகுதி மக்களுடன் கலந்து பேசிய பின்னரே இதுபற்றி இறுதித் தீர்மானத்திற்கு வரவேண்டும். மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதியின் இந்த முன்னெடுப்பு வீணான பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். எதுவாயினும் இந்த விவகாரத்தை அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவுக்கு வரவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியாவது ஞானசார வுக்கு மட்டக்களப்பு பகுதியில் ஒரு நல்ல பெயர் தேவப்படுது போல தெரியுது, இல்லாட்டி இப்படியெல்லாம் வராதே பேச்சு. சந்தேகமா இருக்கு வழமையான மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாத்தா? என்று தெரியல இருந்தாலும் கண்டிப்பா நாளைக்கு இல்லாட்டி மறுநாள் அங்கதான் அந்த சிலைய வெக்கணும் என்று கண்டிப்பா ஞானசார சொல்லுவார் இல்லையா தேரரே...
ReplyDeletebawthe inavaathe amaippuhalai CID inar kankaanipathaaha arikai vidappaddullathu. ithenai mraippathetkoo. Yellaam coppy thaan.
ReplyDeleteஇவனுக்கு எப்பொளுது நல்லபுத்தி கிடைக்கும்....?அப்பொழுது பொத்துவில் தனி சிங்கள பொளத்தர்கள் உள்ள ஊரா.
ReplyDeleteGnaanasaaravukku gnaanam porandirukku. Ellam ethaavathu draamaavaahaththaan nitchayamaaha irukkum.
ReplyDeleteIthu bauda naadu shiley engu veypathukkum yaaridamum ketka avashiyam illey enbathey thaan ethirpaarthoom aanaal yaaroo evarey aattuvathaaka therihirathu.
Therthal varavum ullathe.
ARASHIYALIL ITHU VELLAAM SHAHAJAM APPA.
ஞானசாரவுக்கு எதிரிகள் இந்துக்கள் அல்ல முஸ்லிம்கள்தான் என்று இன்னும்கூட உங்களுக்கு புரியவில்லையா?
ReplyDeletewakul jahal haq wajahakal batil,innal batila kana jahooka.
ReplyDeleteBBS leader now so tired to see everywhere bhudists statues and may be he´s fed up too.
ReplyDeleteஇவனுக்கு எப்பொளுது நல்லபுத்தி கிடைக்கும்?.அப்பொழுது பொத்துவில் தனி சிங்கள பொளத்தர்கள் உள்ள ஊரா.
ReplyDelete