நாச்சியாதீவு பர்வீனின் 'மனவெளி'
(பாத்திமா நஸ்மியா)
நாச்சியாதீவு பர்வீனின் மனவெளியின் பிரதி நூல் வெளியீடும் எம்.எச்.எம் சம்ஸ் நினைவுரையும்.நிகழ்வு சனிக்கிழமை 15/06/2013 அன்று கொழும்பு தமிழ் சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
எழுத்தாளர் எம்.எச்.எம் சம்ஸ் அவர்களின் வழிகாட்டலில் இலக்கிய உலகில் தடம் பதித்த பல இளைய தலைமுறை எழுத்தாளர்களில் நாச்சியாதீவு பர்வீன் மிக முக்கியமான ஆளிமைகளில் ஒருவர் இவரது சிரட்டையும் மண்ணும் (கவிதைத்தொகுதி), பேனாவால் பேசுகிறேன் (பத்தி எழுத்து), ஆகிய இரண்டு தொகுதிகளும் புதுப்புனல் (எம்.எச் .எம் சம்ஸ் நினைவுக்கவிதைகள்), வேலியைத்தண்டும் வேர்கள் (கவிதை), கவியில் உறவாடி (கவிதை) ஆகிய தொகுதிகளின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்துள்ளார்
மனவெளியின் பிரதி - நாச்சியாதீவு பர்வீனின் மூன்றாவது சொந்த தொகுதியாகும் இரண்டாவது கவிதைத் தொகுதியும் ஆகும் நாளைய நிகழ்வில் பன்முக ஆளுமை எம்.எச்.எம் சம்ஸ் பற்றிய நினைவுரையை பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம் .அனஸ் நிகழ்த்தவுள்ளார் நிகழ்வுகள் எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்களின் தலைமையில் நடாத்தப்படவுள்ளது.
பிரதம அதிதியாக மேல்மாகாண மேல்நீதிமன்ற நீதிபதியும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவுக்கான ஆலோசகருமான என்.எம்.ஏ.கபூர் அவர்களும் சிறப்பு அதிதியாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீத் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் கவிதைத்தொகுதி பற்றிய உரைகளை எம்.சி .றஸ்மின் , விஜிதா சிவபாலன் மற்றும் வதிரி சி ரவீந்திரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர், நூலறிமுகம் வெளியீட்டு உரை ஆகியவற்றை மேமன்கவி அவர்கள் நிகழ்த்தவுள்ளார் முதல்பிரதியை வழமைபோலவே இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார் நிகழ்வில் கவிஞர் அமல்ராஜின் வாழ்த்துக்கவிதையும் இடம்பெறவுள்ளது வரவேற்புரையையும் நிகழ்சித் தொகுப்பையும் கலைஞர் எம்.சி நஜிமுதீன் நடத்தவுள்ளார் .
எம்.எச்.எம்.சம்ஸ் அவர்கள் விதைத்த இலக்கிய விதைகள் நாடளாவிய ரீதியில் வளர்ந்து கிளைபரப்பும் ஆரோக்கியமான சூழலை நாம் இப்போது
அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதற்க்கு சான்றாக நாச்சியாதீவு பர்வீனின் மனவெளியின் பிரதியும் ஒரு சான்றாகும் - இந்நூலை பிரபல சிங்கள நூல்களின் வெளியீட்டாளர்கள் கொடகே சகோதரர்கள் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது .
விழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமேலும் பல படைப்புக்கள் தந்திட பிரார்த்தனைகள்
அன்புடன்
முஸ்டீன்