ஜம்மியதுஸ் ஸபாப் அனுசரணையில் இரத்ததான முகாம்
(மூதூர் முறாசில்)
ஜம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெருந்தொகையானோர் கலந்து கொண்ட இரத்ததான முகாமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்கர் வீ.பிரேம் ஆனந்தின் ஒத்துழைப்புடன் அந்-நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ;nஷய்க். எம்.எஸ்.எம். சலீத் நத்வி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இரத்ததான முகாம் ஆரம்ப வைபவத்தில் மூதூர் மஜ்லிஸ் அஸ்ஷ{றாவின் தலைவர் அஷ;nஷய்க் எம்.எம்.கரீம் நத்வி, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். சுக்ரி,டாக்டர் எம்.எம்.எம்.முனாஸ், ஜம்மியதுஸ் ஸபாப் நிறுவனத்தின் தஃ;வா பிரிவுப் பொறுப்பாளர் அஷ;nஷய்க் எம்.என்.எம்.நிஸாத் நளிமி, மூதூர் தஃவா பரிவு பொறுப்பாளர் அஷ;nஷய்க் ஜே.எம்.றியாஜ் நத்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்வதற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment