விண்வெளியில் இருந்துகொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்போகிறார்..!
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை அமைந்துள்ளன. இந்த நிலையில் கம்யூனிச நாடான சீனாவும் தனக்கென தனியாக விண்வெளியில் ஆய்வுக் கூடத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு முன்னதாக ‘டியாங் கோங்-1’ என்ற சிறிய ஆய்வு கூடத்தை விண்வெளியில் அமைத்துள்ளது. அதற்கு தேவையான ஆய்வு பணிகள் மேற்கொள்ள இதுவரை 5 தடவை வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், நேற்று 5-வது முறையாக விண்வெளிக்கு வீரர்களை சீனா அனுப்பியுள்ளது. இந்த பயணத்தில் வாங்க் யாபிங் (35) என்ற பெண் உள்பட கமாண்டர் நைஹாய்ஜங், ஹாங்ஷியாகு வாங் ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் சென்ஜோ-10 விண்கலம் மூலம் புறப்பட்டு சென்றனர். இந்த விண்கலம் சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுலான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து லாங் மார்ச்-2 எப் ராக்கெட் மூலம் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சீன அதிபர் ஷி ஜிங்பிங் நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளை பாராட்டினார்.
விண்வெளிக்கு முதன்முதலாக சென்ற பெண்ணான ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டீனா டெரெஷ்கோவா, வரும் ஜுன் 16-ந் தேதியுடன் விண்வெளிக்கு சென்று 50 ஆண்டுகள் பூர்த்தியானதை உலகம் கொண்டாட உள்ளது. இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த பெண்மணியான வாங்க் யாபிங் விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளது பெருமையாக கருதப்படுகிறது.
15 நாட்கள் விண்வெளியில் தாங்கும் இந்த குழுவினர் ஆய்வுப் பணிகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்கள். விண்வெளியில் ‘டியாங் கோங்’ ஆய்வு கூடத்தில் இருந்தபடி வாங்க் யாபிங் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் நடத்துகிறார். இதன் மூலம் விண்வெளியில் இருந்து பாடம் நடத்திய முதல் ஆசிரியை என்ற பெருமையை இவர் பெறுகிறார். உடன் சென்றுள்ள மற்றொரு வீரான ஹாங்ஷியாகு வாங் இதனை பதிவு செய்வதற்கும், விண்கலத்தை இயக்குவதற்கும் துணை புரிவார்.
சீனா ராக்கெட்டை செலுத்தியது குறித்து, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ், 2020-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துடன் சீனா செயல்பட்டு வருகின்றது. ஆயினும் அதற்கு முன்னரேகூட அந்தத் திட்டத்தை அது நிறைவேற்றக்கூடும் என்று தெரிவித்தார்.
Post a Comment