றிசாத் பதியுதீன் முயற்சியின் பயனாக தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஆசிரிய உதவியாளர்களாக தொண்டராசிரியர்கள் நியமனம்
ஆசிரிய உதவியாளர்களாக வன்னி கல்வி வலயங்களில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய தொண்டராசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற் நிகழ்வில் மடு வலயத்தில் 43 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78 பேருக்கும், முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும் வவுனியா வடக்கு வலயத்தில் 24 பேருக்குமாக 231 பேருக்கு ஆசிரிய உதவியாளர் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தொடராக எடுத்துவந்த முயற்சியின் பலனாக இந்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment