Header Ads



அஹதிய்யா சான்றிதழ் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


(ஏ.எல் ஜுனைதீன்)

    இஸ்லாமிய சன்மார்க்க அஹதிய்யா அல்குர்-ஆன் இறுதிச் சான்றிதழ் பரீட்சை-2012  இற்காக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தற்போது தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது

    மேற்படி பரீட்சை பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தப்படும். இப்பரீட்சை தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடாத்தப்படும். எனினும் ஒரு பரீட்சார்த்தி, தான் தோற்றும் சகல பாடங்களுக்கும் இவற்றுள் யாதேனும் ஒரு மொழியில் மட்டுமே தோற்ற முடியும்.

    இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பரீட்சார்த்தியும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில், பதிவு செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களாயிருத்தல் வேண்டும். அல்லது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அங்கீகரிக்கப்பட்ட சிரேஷ்ட தர அல்குர்ஆன் மத்ரஸாப் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்த மாணவர்களாயிருத்தல் வேண்டும். அல்லது. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் க.பொ.த. (சா/த) பரீட்சையில் இஸ்லாம் அல்லது அரபு பாடத்தில் சித்தியடைந்தவர்களாயிருத்தல் வேண்டும்.

    இப்பரீட்சைக்குத் தோற்றும்  ஒவ்வொரு விண்ணப்பதாரியும் மேற் குறிப்பிட்டுள்ள தகைமைகளில் ஒன்றைப் பெற்றுள்ளாரென அஹதியாப் பாடசாலையின் அதிபர் அல்லது சிரேஷ்ட அல்குர்ஆன் மத்ரஸா அதிபர் அல்லது பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தல்படல் வேண்டும்.

    பரீட்சார்த்தி ஒருவர் இப்பரீட்சைக்கு பதிவு செய்யப்பட்ட அஹதியாப் பாடசாலை அதிபர் அல்லது சிரேஷ்ட அல்குர்ஆன் மத்ரஸா அல்லது பாடசாலை அதிபர் மூலமே விண்ணப்பிக்கமுடியும்.

    பதிவு செய்யப்பட்ட சகல அஹதிய்யாப் பாடசாலைகள், சிரேஷ்ட குர்ஆன் மத்ரஸாக்கள், மத்ரஸாப் பாடசாலைகள் என்பனவற்றிற்கு விண்ணப்பப்பத்திரங்களும், அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறாத நிறுவனங்கள், “பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை” என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு எதிர்வரும் (2013.06.28) 28 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

    விண்ணப்பங்கள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் எதிவரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதியாகும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் “பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை” என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

    விண்ணப்பங்களை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “இஸ்லாமிய சன்மார்க்க அஹதிய்யா இறுதிச் சான்றிதழ் பரீட்சை 2012” எனவும் , பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் நகரமும் குறிப்பிடுதல் வேண்டும்.

No comments

Powered by Blogger.