இஸ்ரேலுக்கு உளவுபார்த்த இருவரை தூக்கில் போட்ட ஹமாஸ் போராளிகள்
உளவு மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட 2 பேரை ஹமாஸ் இன்று தூக்கிலிட்டு கொன்றனர்.
கடந்த 10 ஆண்டு காலமாக இஸ்ரேல் உளவுத்துறையினருடன் தொடர்பு வைத்திருந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களை ஹமாஸ் இயக்கத்தினர் சிறைபிடித்த போது ஏ.ஜி.49 மற்றும் எச்.கே.43 ரக துப்பாக்கிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
லெபனானில் நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஹமாஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிரூபணமானது.
இதனையடுத்து, பாலஸ்தீன சட்டங்களின்படி அவர்கள் இருவரும் இன்று தூக்கிலிடப்பட்டதாக காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் அரசின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இதேபோல் உளவு பார்த்த 3 பேரை ஹமாஸ் அரசு தூக்கிலிட்டு கொன்றது நினைவிருக்கலாம்.
Post a Comment