யாழ் மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளை செய்வதற்கு புதிய பிரிவு
(பாறூக் சிகான்)
யாழ் மாவட்ட செயலகத்தில் முறைப்பாடுகளை செய்வதற்கு புதிய பிரிவு ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவானது நாளை திங்கட்கிழமை (1-7-2013) இயங்கவுள்ளது.
யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற பிரச்சினை குறித்து பொதுமக்கள் முறையிடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறான புதிய பிரிவினை ஆரம்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இப்பிரிவின் ஊடாக மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம் அறியத்தரும்படியும் ,அதனூடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளினூடாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment