Header Ads



சோமாலிய கடற் போராளிகளின் அச்சுறுத்தல் தொடர்கிறதாம்..!

(Umar Ali)

இம்மாதம்  5ஆம்  திகதி சோமாலிய ஆயுதமேந்திய முஸ்லீம் போராளிகளால்    தாக்கப்பட்ட இந்திய  வர்த்தகக் கப்பல்  எதுவித சேதமுமின்றி   போராளிகளால் கைவிடப்பட்டது.

12 ஆயுதம் தாங்கிய போராளிகளால் தாம் தாக்கப்படுவதாக கப்பல் தலைவனால்  ஐரோப்பிய யூனியன் ,நேட்டோ  அமைப்பின் யுத்தக் கப்பல்கள்  தளபதிக்கு தகவல் அனுப்பப் பட்டது,அதைத் தொடர்ந்து  ஐரோப்பிய யூனியனின் கடல் கொள்ளையத்தடுக்கும்  பிரிவின் கீழ் ஒபேரேசன்  அட்லாண்டா எனும் பெயரில்   இயங்கும்  ஸ்வீடிஷ் கடற்படைக்குச் சொந்தமான HSwMS Carlskrona எனும் போர்க்கப்பல் அந்தப்பிராந்தியத்தை நோக்கி வந்து  கப்பலை  அவதானிக்கத்துவங்கியுள்ளது.

             அதன்போது போர்க்கப்பலில் இருந்து ஒரு ஹெலிகாப்ட்டர் ஒன்று கடத்தப்பட்ட கப்பலின் மேல் சுற்றிக்கொண்டிருந்தது, ஆயுதமேந்திய முஸ்லீம் போராளிகள்  பாதுகாப்பு படையினரது கெடுபிடிகள் அதிகமாகின்றன  அறிந்து கப்பலை  இரவு நேரத்தில் சோமாலிய  வடகடற்கரை ஓரமாக  செலுத்தச் சொல்லி ,கப்பல் கடற்கரை  ஒருமாக   செல்லும்போது இருளில் தப்பிச்சென்றுள்ளனர் .

இதனைத்தொடர்ந்து  கப்பலின் தலைவன்  உடனடியாக HSwMS Carlskrona போர்க்கப்பலினைத்  தொடர்புகொண்டு  12 போராளிகளும் தம்மை கைவிட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார்கள் தமது கப்பலுக்கும்  மாலுமிகளுக்கும் எதுவித காயங்களும் சேதமும் இல்லை தாம் பாதுகாப்பாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

                                     ஆயுதமேந்திய முஸ்லீம் போராளிகளிடம் இருந்து கப்பல்  கைவிடப்படுவதுக்குரிய நடவடிக்கைகளை எடுத்த ஐரோப்பிய   யூனியனின்  கடற்படையின்  நடவடிக்கைகளுக்கான கமாண்டர்  கடற்படைத்தளபதி  Bob Tarrant கருத்துத்தெரிவிக்கையில், இறுதியாக நடைபெற்ற இந்த நிகழ்வில்  இருந்து தெளிவாவது என்னவென்றால் இன்னும் இப்பிராந்தியத்தில் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கின்றது நாம் விழிப்பாக இருக்க வேண்டும் ,அத்துடன் கப்பலின் மாலுமிகள் 14 பேரும் தமது நாடுசென்று குடும்பங்களுடன் இணைந்து கொள்ள வாய்ப்பும் கிட்டியுள்ளது என்றார் .

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் நடந்த கப்பல் கடத்தலைத் தொடர்ந்து  இதுவரை கடந்த ஒரு  வருடமாக சோமாலிய ஆயுதமேந்திய முஸ்லீம் போராளிகளால்     எடுக்கப்பட்ட கடத்தல் முயற்ச்சிகளில்  எதுவும்  வெற்றி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ஆம் ஆண்டில் 46 கப்பல்களையும்
2010ஆம் ஆண்டில்  47 கப்பல்களையும்
2011ஆம் ஆண்டில்  25 கப்பல்களையும்
2012ஆம் ஆண்டில் 75 கப்பல்களையும்  

சோமாலிய  ,எடேன் வளைகுடாவில் வைத்து தாக்கிய இவர்கள்  இதுவரை 11 கப்பல்களை தம்மகப்படுத்தியிருக்கின்றார்கள்.

No comments

Powered by Blogger.