அப்துஸ் ஸமதுவின் 'ஜன்னலைத் திற'
(எஸ்.எல். மன்சூர்)
அக்கரைப்பற்றில் இலக்கிய மாமணி அ.ஸ.அப்துஸ் ஸமது பதிப்பகத்தினரால் 'ஜன்னலைத் திற..' எனும் நூல், எதிர்வரும் 06.07.2013 ஆம் திகதியன்று மாலை 3.40 மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் வெளியிடப்படவுள்ளது. 'வாழ்வியலுக்கான உளவியல் சிந்தனைகளை' தாங்கி வெளிவருகின்ற இந்நூலை எழுதி வெளியிடுகின்றார்; பிரபல எழுத்தாளரும், கல்விச் சிந்தனையாளரும், மண்வாசனையைத் தொட்ட சிறுகதை எழுத்தாளரும், முன்னாள் விரிவுரையாளருமான அஸ. அப்துஸ் ஸமது அவர்களின் புதல்வன் அ.ஸ.அகமது கியாஸ் ஆவார். அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளரான இந்நூலாசிரியர் ஜன்னலைத்திற எனும் நூல்வழியாக மனிதவாழ்வியலின் அடிப்படையான அம்சங்களைத், தெட்டத் தெளிவுகளை, தொட்டுவைக்கின்றார்.
இந்நிகழ்வானது அஸ்ஸெய்யித் அல்குத்ப் மக்கத்தார் ஏ. மஜீட் அவர்களது ஆசியுடன் எம்.ஏ. உதுமாலெவ்வை (ஓய்வுபெற்ற அதிபர்) தலைமையில் கௌரவ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை மற்றும் அக்கரைப்பற்று மாநகர மேயர் கௌரவ அதாஉல்லா ஏ. ஸக்கி ஆகியோர் சிறப்பதிதிகளாகவும், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம் நிஸாம், மற்றும் உதவிக் செயலாளர் எம்.ஏ. அனஸ் மற்றும் கல்வியதிகாரிகள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment