தமிழ்த் தேசியத்திலிருந்து ஷூறா சபை
நேற்றய தினம் இராணுவ அதிகாரி ஒருவரை நிகழ்வொன்றில் சந்திக்க நேர்ந்தது. எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்க விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். நாட்டில் அவ்வப்போது இடம் பெரும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளை அழைத்து களந்தாலோசித்து சில விடயங்களுக்கு உடனடி தீர்வுகான்பதும் சில விடயங்கள் பற்றி ஆலோசிப்பதும் வழக்கமான விடயங்கள்.
இம்முறையும் வழமை போன்று கிழக்குமாகாண பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் உலமாசபை பிரதிநிதிகளையும் சந்திக்க விரும்புவதாகவே அவர் தெரிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பெயரைக்குறிப்பிட்டு அவர்கள் இவ்விரெண்டு அமைப்புக்களான சம்மேளனம் மற்றும் ஜம்மியதுல் உலமா ஆகியவற்றில் எதற்குள் அடங்குவார்கள் என கேள்வியும் எழுப்பினார்.
எந்தவொறு அமைப்புக்களுடனும் ஒத்துழைப்புடன செயற்படாதவர்கள் என்ற கருத்தை அவர் குறித்த இஸ்லாமிய இயக்கம் தொடர்பில் கொண்டிருந்தது கவலையளிப்பதாகவே இருந்தது. நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சாரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய அமைப்புக்கள் கூட நன்மையான விடயங்களில் ஒன்றித்து போதல் என்ற குரானிய வசனங்களுக்கு முறனாக செயற்படுவது ஒரு புத்திசாதுரியமான முடிவாக கருத முடியாது.
அதாவது உஸ்மானிய காலப்பிரிவில் மில்லத் பாஷி அல்லது மில்லத் அமைப்பு முறை என்ற இஸ்லாமிய அடிப்படையிலான சிந்தனை தற்காலத்தில் இஸ்லாத்தின் பரந்து பட்ட மத, இன சகிப்புத்தன்மை பற்றிய ஆழமான என்னக்கருவாக இன்று பேசப்படுகின்றது. அவ்வாரான பல்லின ஜனநாயக ஏற்புகளுக்கு மத்தியில் இஸ்லாத்தின் தாராள வாத தன்மை பற்றிய ஆய்வுகள் விரிந்து செல்லுகின்ற இக்காலப்பகுதியில் இஸ்லாமிய அமைப்புக்களுக்கிடையே நன்மையின்பாலான விடயங்களில் புறிந்துணர்வுடன் செயற்படுதல் என்ற விடயம் கேள்விக்குறியாக்கப்படுவது இலங்கையில் இஸ்லாம் பற்றிய இவ்வமைப்புக்களின் புறிதலை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.
இதகைய பிண்ணனியுடன் இன்று முஸ்லிம் புத்திஜீவிகள் மத்தியில் பேசு பொருளாக கானப்ப்டும் ஷூறா சபை பற்றி இங்கு நோக்கலாம் என நினைக்கின்றேன். இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரு கூட்டணி அரசியல் முறைமையைப்பற்றி சிந்திக்க வேண்டிய காலத்தேவையில் உள்ளதாக பேசப்பட்டது. கட்சி அரசியலை வன்மையாக கண்டித்து ஒற்றுமையான அரசியல் பயணம் பற்றி குறிப்பிடப்பட்டது. ஆனால் தோற்றுப்போன தூர நோக்கற்ற முஸ்லிம் அரசியல் பயணத்தில் நிவர்த்;திக்கப்படாத எத்தனையோ விடயங்கள் கிடப்பிலே உள்ளன. இந்நிலையில் தேஷிய ஷூரா சபையொன்றினை ஏற்படுத்துவதன் மூலம் சில எட்டப்படாத விடயங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டது.
ஷூறா சபை தேவையென்பதற்கான வாதங்களுக்கு சில இயக்க முறைமையின் தோழ்விகளும் காரனமாய் அமைகின்றது. குறைந்தது முஸ்லிம்களுக்கான ஆவணக்காப்பகமோ, அரசியல் வழிமுறைகளோ, கல்வி திட்டங்களோ இதுவரை இலங்கை இஸ்லாமிய இயக்கங்கள் சிலவற்றாள் சரியாக முன்வைக்கப்படவில்லை என்பதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முஸ்லிம்களது கல்வி வீழ்ச்சி அதற்கான மாற்றீடு, அரசியல் வங்குரோத்து அதற்கான மாற்றீடு, சரிந்து போகும் அல்லது கைமாரிச்செல்லும் பொருளாதார சூழ்நிலையும் அதற்கான தீர்வுகளும், தேசிய சர்வதேசத்துடனான இலங்கை முஸ்லிம்களின் உறவுகள், இலங்கை முஸ்லிம்கள் நிலை குறித்து சர்வதேச நியதிகளுக்கமைய குறைந்தது அறிக்கைவடிவிலாவது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தஃவா இயக்கங்கள் எத்தகைய தீர்வுகளை முனவைத்துள்ளன என்ற கேள்விக்கு விடை இல்லாத நிலையினிலேயே தேசிய ஷூறாவின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியத்தைப்பொருத்தவரை தமது இறுப்பு வரலாறு, உரிமைகள், அரசியல் தீர்வுகள் குறித்து ஓரளவு ஆவணமயப்படுத்தப்பட்டதும், அமைப்பு ரீதியானதுமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வந்துள்ளன. சர்வதேசத்தின் கவனத்தை இலங்கை தமிழர்களின் பக்கம் திசை திருப்பி பல்வேறு நடுவர்மையங்கள், நாடுகளின் அழுத்தங்களை இலங்கை அரசின் மீது செழுத்துமளவுக்கு தமிழ்த் தேசியம் நிர்வகப்படுத்தப்பட்ட போதும் சிதரிக்கிடக்கும் எஞ்ஞியுள்ள தமிழர் அமைப்புக்களையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. சர்வதேச பலமிக்க நாடுகடந்த திமிழீழம், உலக தமிழர் பேரவை, தமிழர் புலம்பெயர் அமைப்பு என்ற முக்கிய பாத்திரங்கள் வகிக்கும் தமிழர் போராட்டம் தற்போது இலங்கை தமிழர் அரசியலில் தமிழர்களுக்கான ஒறே தமிழ் அரசியல் கட்சி தொடர்பில் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றன. ஆனால் மாக்சிய சிந்தணை, மேற்கத்தேய குறிப்பாக நோர்வே பாரம்பரியம், இந்திய சிந்தணைப்பாரமபரியம் என தமிழ்த்தரப்பு வழிநடாத்தப்படுவதனால் ஓர் தேசிய கட்சி அரசியல் பயணம் சாத்தியப்பாடற்றதாகவே இருக்கின்றது. அதனால்தான் இன்று தமிழ்த்தேசியம் இஸ்ரேலின் உருவாக்க வழிமுறை பற்றியதிலிருந்து படிப்பிணைகளை பெற முயற்சிப்பதை கானமுடிகின்றது.
இரன்டாயிரம் வருடங்கள் புலம்பெயர் சமூகமாக வாழ்ந்த இஸ்ரேலிய சமூகம் தனக்கான வழிமுறைகளை துள்ளியமாக அமைத்துக்கொண்டதின்காரனமாக தமக்கான தாயக பூமி ஒன்றை பலஸ்தீன ஆக்கிரமிப்பு மூலம் உருவாக்கி கொண்டதுடன் சர்வதேசத்தில் இஸ்ரேலுக்கெதிரான கருத்துக்களை முறியடிக்க முடியுமானதாக இருந்தது. உதாரனமாக பலஸ்தீனத்தின் மீது சர்வதேச அனுதாபத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் எட்வர்ட் சயீட் அவர்களைக்கூட பகிரங்கமாக எதிரத்து அவரது கருத்துக்களை முறியடிப்பதில் சில போது வெற்றிகண்ட இஸ்ரேலிய புலம் பெயர் சமூகத்தின் ஒறுமைப்பாடான செயற்திட்டங்கள் பற்றி வாசிப்பு செய்ய வேண்டிய நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளது. இதன் கருத்து இஸ்ரேலின் கொள்கையினைப்பின்பற்றுவதல்ல மாறாக அவர்கள் தமது தேசியத்தை உறுவாக்க வேண்டி செயற்பட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடுகின்றேன். தமிழ்த்தேசியம் கூட கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் ஆயுத போராட்ட வழிமுறைகளில் இன்னும் தோற்றுப்போனதான மன நிலையிலிருந்தே முயற்சிப்பதாக புலப்படுகின்றது.
எனவே முஸ்லிம் ஆவணக்காப்பகம் ஒன்றையோ அல்லது தகவல் பெருமையம் அல்லது அரசியல் பணித்திட்டம் ஒன்றையோ அல்லது முஸ்லிம் அறிவியல் மையம் ஒன்றையோ உருவாக்குவதற்கான வேளைத்திட்டங்கள் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை. இத்தகைய இடைவெளிகளை நிரப்புவதற்கான ஒரு லொபியாக தேசிய ஷூறா சபை அமையவேண்டிய தேவைப்பாடு உள்ளது. அவ்வாறு ஒரு தேசிய ஷூறா சபை அமைகின்ற போது அதன் அகவய ஜனநாயகம் பேனப்படுகின்ற போதே இலக்கினை அடைய முடியும் என கருதுகின்றேன். எனவே இத்தகைய அகவய ஜனநாயகத்தை கொண்டதான ஷூறா சபை பற்றியே கடந்த காலங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இஸ்லாமிய தாராளவாத ஜனநாயகத்தின மறு பெயரான ஷூறா என்பது இத்தகைய அக ஜனநாயகத்தையே சுட்டுகின்றது. பிரச்சிணைகள் வருகின்ற போது தேசிய ஷூறா சபையில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் தமது கருத்துக்களை இஸ்லாமிய வறையரைக்குள் கலந்தாலோசித்து தீர்வுகளை எட்ட முடியும். குறித்த விடயத்தில 100மூ திருப்தி படுத்தல் என்பது இஸ்லாமிய ஷூறா அமைப்பில் எத்தகைய சாத்தியம் என்ற கேள்வியும் எழுகின்றது. உஹத் யுத்தத்தின் போது நபி (ஸல்) மதீனாவின் உள்ளிருந்தே போராட விரும்பியதும், மாறாக ஷூறா முடிவாக பெரும்பான்மையோர் வெளியில் சென்று போராட விரும்பியதும் இஸ்லாமிய ஷூறா சம்பந்தமான பெரும்பான்மையின் கருத்தினை மதித்தல் தொடர்பாகவும் பேசுகின்றது. எனவே கருத்து தினிப்பாக தேசிய ஷூறா அமைந்துவிடாது அணைவருக்குமான கருத்துக்கலமாக ஷூறா சபை கானப்படவேண்டும்.
ஆனால் தேசிய ஷூறா சபையின் இறுதி வரைபுகள் முன்வைக்கப்படாத நிலையில் அது தொடர்பில் களந்தாலோசிக்கப்படுகின்ற இத்தருனத்தில் முன்னுறை எழுதும் முன்பே முடிவுறை எழுத நினைப்பது இஸ்லாமிய அமைப்பொன்றைப்பொருத்தவரையில் ஆரோக்கியமான நிலைப்பாடாக அமையாதென்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
கடந்த 30வருடங்களுக்கு மேலாக பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளைக்கொன்டிருந்த தமிழ் தேசியம் கூட இன்று தேசிய ஒருமைப்பாடு குறித்து சிந்திக்கின்ற சூழலில் முஸ்லிம் தேசியம் இப்போதுள்ள தேசிய ஒருமைப்பாட்டுக்கான சந்தர்ப்பத்தை நழுவ விட நினைப்பது வரலாற்றுத்தவராக அமைந்துவிடும்.
தற்போது அரசு எதிர்கொண்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல், 13வது திருத்தச்சட்டத்தை மாற்றியமைத்தல் என்ற அரசியல் களநிலையில் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக முஸ்லிம்களது நிலைப்பாடு அவற்றின் சாதக பாதகங்கள் பற்றி களந்தாலோசித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள தேசிய ஷூறா சபை ஒன்றின் தேவைப்பாடு இன்றியமையாதது. மாறாக இஸ்லாமிய அமைப்பு ரீதியாக இத்தகைய பிரச்சிணைகளுக்கு தீர்வு கானமுடியும் என்று வெருமனே கதையாடல் செய்வதும் அறிவீனமாகவே அமையும். ஏனெனில் இன்று உலகலாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மத்தியில் வஹாபிஸம் என்ற வகுப்புவாத கருத்தை முன்வைத்து இஸ்லாத்தின் எதிரிகள் தஃஹீத் அமைப்புக்களுக்கெதிராக வியூகம் அமைத்து செயற்படுவதை கானமுடிகின்றது. அன்மையில் ஜேர்மனியில் இடம்பெற்ற தீவிரமயமாதலும் பயங்கரவாதமும் என்ற மாநாட்டில் பிரிதானிய பிரதமர் களந்துகொண்டு ஆற்றிய உறையும் அன்மையில் அமெரிக்க பொன்ஸ்டன் நகர குண்டு வெடிப்பின் பின்னர் வஹ்ஹபிஸம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்து என்பன இலங்கையில் கானப்படும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கெதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதனை விழங்க வேண்டியுள்ளது. எனவே அத்தகைய சூழ்நிலையில் தேசிய ஷூறா போன்ற அமைப்பே இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் குறித்து சரியான வழி நடாத்தல்களை சம்பந்தப்பட்ட துறைசார அமைப்புக்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து ஒரு லொபியாக நின்று செயற்படுத்த முடியும்.
Can any one summarize the purpose of this article. I dont see a link between the topic and the content
ReplyDeleteஇது எல்லாவற்றுக்கும் முதலில் நீங்கள் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு ஜனநாயக முறைப்படி நேர்மையான நிர்வாக சபையொன்றைத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுங்கள்.
ReplyDeleteமுஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்துக்கான உத்தியோகத்தராக இருந்து கொண்டு சம்பளம் பெறும் அரச ஊழியரான நீங்கள் முதலில் உங்களின் கடமையை இறைவனுக்குப் பயந்து செய்து விட்டு ஊருக்கும், உலகத்துக்கும் உபதேசங்கள் செய்வதுதான் சிறந்தது.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-