Header Ads



கல்முனை மாநகர சபை ஊழியர்கள் நடுத்தெருவில் (படங்கள் இணைப்பு)


(ஏ.எல். ஜுனைதீன்)

    கல்முனை மாநகர சபையில் கடந்த சில மாதங்களாகக் கடமை செய்து கொண்டிருந்த 112 ஊழியர்களை இன்று 05 ஆம் திகதி புதன்கிழமை கையொப்பம் இட்டு கடமை செய்ய வேண்டாம் என மாநகர சபை அதிகாரிகள் தடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது சம்மந்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களிடம் வினவியபோது,

மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி வழமை போன்று கடமைக்கு வருகை தந்த எங்களை ஒப்பமிட வேண்டாம் என உத்திரவிட்டார் என்றனர். 

ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் வினவிய போது அவர் சிரித்தவராக மேயரிடம் பேசிவிட்டு இது விடயத்தைச் சொல்லுகின்றேன் என்றார். மேயரிடம் அவர் பேசிய பின் தேடிய போது அவர் தனது இடத்தில் காணப்படவில்லை. அவசர அலுவல்கள் நிமிர்த்தம் வெளியில் போய்விட்டார் எனக் கூறப்பட்டது.

    இது தொடர்பாக கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபு அவர்களிடம் வினவியபோது,

 ஆளுநர் முதலமைச்சர் ஆகியோர்களிடம் கதைத்த பின்னரே என்னால் இது பற்றி எதுவும் கூறமுடியும். ஆணையாளர்தான் நியமன அதிகாரி அவர்தான் மாகாண சபையின் சுற்று நிருபத்திற்கமைய நடவடிக்கை எடுத்துள்ளார். புதிய சுற்று நிருபத்தின்படி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருப்பவர்களே நியமிக்கப்படல் வேண்டும் எனக் கூறப்படுவதாகவும் மேயர் தெரிவித்தார்.




1 comment:

  1. அப்ப அவங்கள பதவிக்கு சேர்க்கும் போது என்ன பண்ணிட்டு சேர்த்தீங்க. இது சரியான காரணம் கிடையாது இதுக்கு வேறு என்னவோ பின்னாடி இருக்கு.

    ReplyDelete

Powered by Blogger.