Header Ads



இலங்கை முஸ்லிம்களிடம் கலாநிதி அமீர் அலி மன்னிப்பு கோர வேண்டும்..!

(எம்.வை.அமீர்)

(அண்மயில் சில ஊடகங்களில் கலாநிதி எ.சி.எல்.அமீர் அலி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்த கருத்துக்கள்.)

 இலங்கை முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற அபாயா இந்த நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு சாரிவராது என்றும், அந்த உடை காரணமாகவே முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள இனவாதம் வளர காரணமுமாகும். என்ற அமீர்  அலி என்பவாரின் கூற்றின் மூலம் அவருக்கு இஸ்லாமிய சமயம் பற்றியோ இலங்கை மக்களின் வரலாறு பற்றியோ தெரியாது என்பதையே தெளிவாக காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவார்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

    மேற்படி கருத்து சம்பந்தமாக் முபாறக் மௌலவி மேலும் தெரிவித்ததாவது,

    பெண்களின் கறுப்பு நிற ஆடையூம் ஆண்களின் தாடியூம் ஜுப்பாவூம் சிங்கள இனவாதம் வளர காரணம் என்பதாயின் 1915ம் ஆண்டு இந்த நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்பட்டது ஏன்? அப்போது பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கறுப்பு நிற ஆடை அணிவதில்லை. அத்துடன் ஆண்கள் தாடி வைத்திருந்தாலும் ஜுப்பா அணிந்திருக்கவில்லை. ஆனாலும் கலவரம் ஏற்பட்டது. ஏன் என மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

  அதே போல் சிங்களவரும் தமிழார்களும் ஒரே கடவூள்களைத்தான் பெரும்பாலும் வணங்குகிறார்கள். அவார்களின் பெயார்களில் கூட நிறைய ஒற்றுமை உள்ளது. குமார்  என்பது குமார என்றும் கமலா என்பது அதே பெயாராலும் இருந்தும் சிங்கள போரினவாதம் தமிழார்கள் மீது பாய்ந்தது என்றால் அதற்கு தமிழார்களின் மதமோ ஆடையோ பெயரோ அல்ல மாறாக சிங்கள இனவாதிகளின் அடக்கு முறை குனமாகும் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆக முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவாதத்துக்கும் காரணம் அபாயாவோ ஜுப்பாவோ அல்ல மாறாக சிறுபான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற மேலாதிக்க சிந்தனையே காரணமாகும். என்றும் தெரிவித்தார்.

கறுப்பு நிற ஆடை என்பது நமது நாட்டு சூழ்நிலைக்கு பொருத்தமற்றது என்பது மடத்தனமான வாதமாகும். ஆண்கள் கறுப்பு நிற கோட் சூட் அணிந்து போதாதர்ற்கு டை கூட அணிவதை நாம் காண்கின்றோம் . மிகவூம் கனதியான இந்த ஆடை நமது நாட்டுக்கு கொஞ்சமும் ஒத்து வராது என்று தொரிந்தும் அதனை அணிந்து அவிவதை காண்கின்றோம். முஸ்லிம் பெண்களின் கறுப்பு ஆடை என்பது கோட்டுக்கு தேவையானது போன்ற கனமான துணி அல்ல.  ஒரு பெண் பாவாடை சட்டை அணிந்து அதற்கு மேலால் சாறியை சுற்று என சுற்றி அப்படியிருந்தும் உடலின் அரைவாசியை காட்டி அவதிப்படுவதை விட சீதோஷ்னத்துக்கு மிகவூம் இடம் கொடுக்கும் ஆடையே கறுப்பு நிற ஆடையாகும். 

பாலைவன வெயிலுக்கே இது உகந்ததாயின் நமது நாட்டுக்கு மிகவூம் உகந்தது என்பதை விளக்கத்தேவையில்லை. இந்த ஆடை மூலம் முஸ்லிம் பெண்களிடையே ஆடைகளில் ஏற்றத்தாழ்வூ இல்லாத சமமான தன்மையை காண்கிறோம். இது இஸ்லாத்தின் சகோதரத்துவத்தை பறை சாற்றும் உடையாகும். என்றும் கூறிய மௌலவி,

 பாடசாலைகளில் வெள்ளை நிற சீருடை இருப்பதற்கு முக்கிய காரணம் மாணவார்கள் மத்தியில்  ஆடையில் ஏற்றத்தாழ்வூ தொரியக்கூடாது என்பதற்கேயாகும். அதே போல் கறுப்பு நிற ஆடை பெண்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வை நீக்குகிறது. என்றும் தெரிவித்தார்.

 கறுப்பு நிற ஆடையை உலகளாவிய முஸ்லிம்கள் அணிவது என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. இயேசு நாதரின் (அலை) தாயாரான அன்னை மார்யம் என்ற முஸ்லிம் பெண்மனி இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கறுப்பு நிற ஆடை அணிந்து தலையையும் மூடியிருந்தார்  என்பதை அவார் சம்பந்தமான ஓவியங்கள் தொரிவிக்கின்றன. அன்னை மாரியமின் பெயார் மட்டுமே குர்ஆனில் பெயர்  கூறப்பட்டுள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்ணாகும். என்றும் முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவார்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

   இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. சிங்களவார்  இந்த நாட்டுக்கு பௌத்தார்களாக வரவில்லை. அத்துடன் சிங்களவரும் பௌத்தமும் மிக அண்மைக்காலத்திலேயே அதாவது சுமார்  இரண்டாயிரத்தி அறுநூறு வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்தன. ஆனால் முஸ்லிம்கள் பல லட்ச வருடங்களாய் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.  உலகளாவிய முஸ்லிம்களுக்கே தாய் நாடு இலங்கைதான். இந்த நிலையில் இனவாதிகளுக்கு பயந்து முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை விட்டுக்கெடுக்க முடியாது.

 இந்தோனேசியா, மலேசியா என்பன வெள்ளையார்களின் பிடியில் இருந்து இஸ்லாமிய அறிவு  ஒழிக்கப்பட்ட நாடுகளாகும். இப்போதுதான் அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய அறிவு  மேலோங்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு வழிகாட்டல் என்பது சவுதியோ இந்தோனிசியாவோ அல்ல என்பதை அமீரலி போன்றவார்கள் தொரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய அறிவில் இந்தோனேசிய பெண்ணை விட இலங்கை முஸ்லிம் பெண் முதன்மையானவள் என்பதை எம்மால் உறுதியாக கூற முடியும்.

இவ்வாறான அறவிலிகள் எதிர்  காலத்தில் இனவாதம் ஒழிவதாயின் முஸ்லிம்கள்  தமது பெயார்களை சிங்கள பெயார்களாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்று கூட முட்டாள்தனமாக சொன்னாலும் சொல்வார்கள்  ஆகவே முஸ்லிம் சமூகம் விழிப்பாக இருப்பதுடன் இததகைய கருத்துக்களை கூறிய அமிரலி என்பவார்  இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பதுடன் முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

7 comments:

  1. அமீர் அலியின் கருத்தை எந்த ஒரு முஸ்லிமும் ஏற்கவில்லை என்பதை அச்செய்தியின் பின்னூட்டங்களிலிருந்து மிகவும் ஆணித்தரமாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஜப்னா முஸ்லின் வலைச்செய்தியில் இதுவரை பின்னூட்டங்கள் 100 இன்கும் மேலாக ஓடிக்கொண்டிருப்பது அமீர அலியின் அபாயாவும் நிக்காபும்..... என்ற செய்திக்கே, மெளலவி அவர்களே அச்செய்த்திக்குரிய பின்னூட்டங்களில் நடக்கும் சத்தியச்சமரை நீங்களும் ஒரு முறை பார்க்கவும்.....

    ReplyDelete
  2. உண்மையிலேயே மௌலவியின் கருத்து மிகவும் சரியானது . (ஜசாக்கள்ளாஹு கைரா !)

    * உண்மையான ஒரு முஸ்லிம் தனது உயிரை பணயம் வைத்தும் இஸ்லாத்தை பாதுகாப்பான் !

    * இஸ்லாதின் சட்டதிட்டங்களை விட்டுவிட்டு ஒரு காபிரை திருப்தி படுத்துபவன் உண்மையான முஸ்லிமல்ல . அவனை ஒரு
    முனாபிக்காகவே கருதுகிறேன் .

    ReplyDelete
  3. Veru niramaha irundaal iraivan ottukollamatana?

    ReplyDelete
  4. No logic in this article. Holy Quran has mentioned about Mariam (alihisalam), it is true. but not mentioned for women to wear black at all. A dress worn by Fathima (Alihisalam) can be seen at a Museum in Eygpt. No colour and no design. It is ridicules to take drawing of Christians to prove about Mariam's dress code. M. A. Majeed is a politician and he wants to be in news all the time. Viewers should be cautious.

    ReplyDelete
  5. ஒரு முஸ்லிம் பெண் கறுப்பு ஆடையைத்தான் அணிய வேண்டும் என முபாறக் மௌலவி சொல்லியிருப்பது போல் எண்ணி கடைசியாக ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பெண் எந்த நிறத்திலும் முழமையாக முகம் தவிர உடலை மறைத்து ஆடை அணியலாம். ஆனால் பிரச்சினை அதுவல்ல, கறுப்பு நிறம் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல என்ற அமீர் அலியின் முட்டாள்தனமான கருத்துதான். இதற்குத்தான் முபாறக் மௌலவி பதிலளித்துள்ளார். ஒருவர் அரசியல்வாதி என்பதற்காக மார்;க்கம் பற்றி பிழையாக கூறப்பட்டால் அவர் மௌனமாக இருக்க வேண்டுமோ?

    ReplyDelete
  6. Dear Al Jazeera Lanka: What is your opinion on Muslim People's Party chief', M.A. Majeed's comment on dress code of Mariam?? He strongly believes that the photos drawn by Christians, as Mariam wears black are true. Does he accept the portrait of Jesus and verses of Bible as well??

    ReplyDelete

Powered by Blogger.