Header Ads



வடமாகாண சபை தேர்தலை நடத்தினால் பதவி விலகுவோம் - அமைச்சர்கள் சிலர் எச்சரிக்கை

(Un) 13ஆவது திருத்தம் மற்றும் வடமாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய பேச்சுகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மூத்த அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். 

13ஆவது திருத்தத்தினூடாகக் காணி, பொலிஸ் அதிகாரங்களை வட மாகாணத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துவரும் சில அமைச்சர்களே இவ்வாறு ஜனாதிபதியைச் சந்திக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

முழுமையான அதிகாரங்களுடன் வடமாகாணசபை அமையுமானால் அது நாட்டில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென்பதால் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடாதென்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க உள்ளதாகவும், ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமாச் செய்வது பற்றி தீர்க்கமான முடிவு எடுக்கப்படுமென்றும் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று "உதயனி'டம் தெரிவித்தார்.

வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பாரெனவும், அல்லாத பட்சத்தில் வடமாகாணசபைத் தேர்தலுக்கு ஜனாதிபதி செல்லமாட்டார்என்றும் மேற்படி அமைச்சர் மேலும்  நம்பிக்கை வெளியிட்டார். இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சந்திப்பு நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.  

2 comments:

  1. 13 அவது திருத்தச்சட்டத்தில் எதுவித மாற்றமும் தேவையில்லை இனவாதிகளின் பேச்சை ஜனாதிபதி ஒருபோதும் கேட்கமாட்டார் அப்படிக்கேட்கும் பட்சத்தில் அதுதான் அவரது காலத்தின் இறுதிக்கட்டமாக அமையும். மக்களுக்குரிய சலுகைகளை ஒருபோதும் குறைக்ககூடாது மக்கள் அரசாங்கத்தால் நெருக்குப்படும்போதும் அரசாங்கம் பாராபட்சமாக மக்களை நடத்தும்போதும்தான் போராட்டங்களும் குழப்பங்களும் உண்டாகின்றன. எது எவ்வாறாயினும் பொலிஸ், காணி போன்ற உரிமைகளில் மாகண சபையினால் ஒன்றும் பயங்கரவாதமோ தற்போது நாட்டில் நடக்கின்ற ஊழல்களோ நடக்கப்போவதில்லை.

    ReplyDelete
  2. இத்தனை இழப்புக்களையும் அழிவுகளையும் தாங்கிக்கொண்டு அனாதைகள் போல் உயிர்,உடமை, பொருள்,குடும்பம்,மற்றும் சொல்லொண்ண எத்தனையோ துயர்ம்களை சுமந்து நாதி அற்று நிற்கும் தமிழ் பேசும் மக்களுக்கு மிகக்குறைந்த அதிகார பரவலாக்கத்தை கூட கொடுக்க மனதில் ஈவு இறக்கம் அற்ற கல் நெஞ்சக்கரர்களான இந்த கிழடுகள் இருந்துதான் என்னபலன் இதுகள் போனால் மட்டும் அரசு விழுந்து விடாது. இந்தகிளடுகள் சும்மா படம் காட்டுதுகள், இவனுகள் ஒருநாளும் அரசை விட்டு போக மாட்டானுகள், பொன்னாசை, பொருளாசை, பெண்ணாசை, பதவியாசை பிடித்தவனுகள் எங்கே போவானுகள், பார்ப்போமே தலைவரிடம் இந்த மிரட்டல் பலிக்குமா என்று!

    ReplyDelete

Powered by Blogger.