Header Ads



இண்டர்நெட் பயன்பாட்டை தவிர்க்க துறவிகளுக்கு தேவாலயத்திலிருந்து அறிவுரை

ரஷிய நாட்டின் பழமையான மரபுவழி தேவாலயத்தின் தலைவராக இருப்பவர் பாட்ரியார்க் கிரில். இவர் சமீபத்தில் கிரீஸ் நாட்டிலுள்ள ஜோக்ராப் மடாலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு இணையதளங்களை உபயோகிப்பது துறவிகளின் தூண்டுதலை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டதாக தேவாலயத்தின் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

துறவிகளில் பெரும்பாலானோர் காரணங்கள் இல்லாமல் நடந்துகொள்கின்றனர். ஒருபுறம், இரட்சிப்பின் சாதகமான நிலைமைகளைப் பெறும்பொருட்டு உலக வாழ்வைத் துறந்து வெளியே வருகின்றனர். ஆனால், மறுபுறம், தங்களுடைய மொபைல் தொலைபேசியில் இணையதள இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர்.

தற்போது இணையதளத்தில் ஆவலைத் தூண்டும் விதமாக நிறைய விஷயங்கள் வருகின்றன. நாகரீக மாறுபாடுகளை வழக்கப்படுத்திக் கொள்ளுவதில்லை என்பது துறவிகளுக்குரிய மடாலயங்களின் தீர்மானமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிரில் கடந்த காலங்களில் கூட இணையதள பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளார்.

ஆனால், பெயரைக் குறிப்பிட விரும்பாத தேவாலய ஊழியர் ஒருவர், தேவாலயத் தலைவரான கிரில்லே தகவல்கள் பெறும்பொருட்டு இணையதள வசதிகளை உபயோகித்துக் கொள்ளுகின்றார் என்ற தகவலை வெளியிட்டார். சென்ற வருடம் பேஸ்புக்கில் இவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்தில் வெளிப்படையாக அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஆதரவு அளிக்கப்பட்டிருந்தது.

புதினும் இந்த தேவாலயத்தை ரஷ்ய நாட்டின் தேசீய மதிப்பீடுகளின் காவலாக விவரித்துள்ளார். கடந்த 1991-ம் ஆண்டு ரஷியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுற்றதைத் தொடர்ந்து ரஷிய நாட்டின் இந்த மரபுவழி தேவாலயம் மறுமலர்ச்சி பெற்றது. ரஷிய மக்களில் பெரும்பாலோர் இந்த தேவாலயக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றவர்களாகவே இருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.