அரசியல்வாதிகளுக்கான ஒழுக்க நெறி கோவை
(Sfm) அரசியல்வாதிகளுக்கான ஒழுக்க நெறி கோவை ஒன்றை தயாரிப்பது குறித்து கலாச்சார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இது குறித்த யோசனை ஒன்றை துரிதமாக விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்க தீர்மானித்துள்ளதாக கலாச்சார அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில், பொதுமக்கள் பிரதிநிதிகளினால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டே, ஒழுக்கநெறி கோர்வை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுளது.
இருந்தபோதும், அரசியல்வாதிகளுக்கு இவ்வாறானதொரு கட்டுப்பாட்டை விதிக்கும் நடவடிக்கை எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியப்படும் என அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்கவிடம் sfm வினவியது. அதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே ஊடகதுறை சார்ந்தவர்களுக்கு ஒழுக்க விதிகளை நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று, ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்றம் மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய ஒழுக்க விதிக் கோவையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில் இந்த விதிகளை ஏற்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விதிகளுக்கு எதிர்ப்பை வெளியிடுவாராயின் அவர்தான் மக்களின் வாழ்க்கைக்கு சவாலக இருப்பார் என தெரிவித்தார்.
Post a Comment