Header Ads



லண்டனில் பள்ளிவாசல்களை பாதுகாக்க யூதர்கள் முன்வருகை

(Tn) லண்டனிலுள்ள ஹக்னி பகுதியில் இருக்கும் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் கட்டிடங்களை பாதுகாக்க யூதர்களின் ரோந்துக் குழு முன்வந்துள்ளது. பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையிலேயே அங்குள்ள யூத சமூகத்தினர் இந்த நடவடிக்கைக்கு முன்வந்துள்ளனர்.

ஹக்னி பகுதியில் யூத எதிர்ப்பு குற்றச் செயல்கள் அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலான செயல்களை தடுக்க தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட பயிற்றுவிக்கப்பட்ட யூதர்களின் விசேட பொலிஸார் குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் யூத தலைவர்களை சந்தித்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்தக் கோரியுள்ளனர். இதன் போது தனது ரோந்து நடவடிக்கையில் பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய கட்டிடங்களையும் உள்ளடக்க யூத ரோந்துக் குழுவினர் இணங்கியுள்ளனர்.

யூத ரோந்துக் குழுவின் மேற்பார்வையாளர் செய்ம் ஹொவ்சர் கூறும் போது:- “முஸ்லிம் சமூகத்தினர் தமது பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார்கள். எனவே அவர்களுக்கு உதவ நாம் முன் வந்தோம்” என்றார்

லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்துவெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தீவிரமடைந்த இஸ்லாமிய எதிர்பபு நடவடிக்கைகளால் ஹக்னி பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இங்குள்ள சோமாலிய சமூகத்தினரின் பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதோடு மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

2 comments:

  1. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.Al Quran 5:51.

    ReplyDelete
  2. Aattukkuttiyap padukakka oonaya Allahthan padukkakka wendum

    ReplyDelete

Powered by Blogger.