முஸ்லிம் பாடசாலகளில் நோன்புகால விடுமுறை அவசியமா..?
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது அவசியம்தானா? இவ்வாறு விடுமுறை வழங்குவது முஸ்லிம் மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிப்பதாக இல்லையா? இவ்வாறு கல்விச் சிந்தனையாளர்களில் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி பற்றி சிந்திக்கும் முஸ்லிம் கல்வி மாநாடு, முஸ்லிம் அமைச்சர்கள்,உலமாக்கள், மதப் பெரியார்கள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் என்போர் ஒன்று கூடி எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி முன்னேற்றத்திற்கு ஏற்ப இது குறித்து ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் எனவும் கல்விச் சிந்தனையாளர்கள் மேலும் வேண்டுகோள் விடுக்கின்றனர். புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் நடைபெறுவதைத் தவிர்க்கும் நோக்கமாக எமது இலங்கை அரசாங்கத்தால் வருடா வருடம் லீவு வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வருடம் (2013) ஜூலை மாதம் 10 ஆம் திகதி பிறை தென்பட்டால் முஸ்லிம்கள் நோன்பு அனுஸ்டிக்கத் தொடங்கிவிடுவர். இதற்கென முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டு முஸ்லிம் ஆசிரியர்களுக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கும் முன்கூட்டியே விடுமுறை (ஜூலை 05 ஆம் திகதி) வழங்கப்பட்டு விடும்.
முஸ்லிம் ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடுமுறை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தாலும் இதனால் முஸ்லிம் மாணவர்களின் கல்வியின் நிலை பாதிக்கப்படுவதாக கல்விச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
புனித நோன்புக்காக ஒரு மாதத்திற்கும் அதிகமான நாள்களை விடுமுறை கொடுக்க வேண்டியிருப்பதால் முஸ்லிம் பாடசாலைகளின் தவணைகள் மாற்ற வேண்டி ஏற்படுகின்றது இவ்வாறு தவணைகள் மாற்றம் செய்யும் போது முஸ்லிம் மாணவர்களின் கல்வியே பாதிக்கப்படுகின்றது. குறிப்பாக க.பொ.த உயர்தர, சாதாரண தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைக்காக ஆயத்தம் செய்வதற்கு பாடசாலைகளில் போதிய காலமும், அவகாசமும் கிடைப்பதில்லை. ஆனால் சிங்கள, தமிழ் பாடசாலைகளைப் பொறுத்த வரையில் பாடசாலைத் தவணைகள் திட்டமிடப்பட்டு ஒரு ஒழுங்கு அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்படுகின்றது. இதனால், சிங்கள, தமிழ் மாணவர்கள் நன்மையடைகின்றனர்.
இவ்வாறு முஸ்லிம் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் எமது இலங்கை நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும். அப்பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பார்கள். பரீட்சைகள் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் மத உணர்வை மதித்து வழங்கியுள்ள இச் சலுகை பெரிதும் பாராட்டப்பட வேண்டியதே. எனினும் இவ்வாறான ஓர் உரிமையைத் தொடர்ந்து அனுபவிக்க முற்படுவதன் மூலம் முஸ்லி மாணவர்களின் கல்வித் தரத்தில் நிரப்ப முடியாத ஒரு பள்ளம் முஸ்லிம் சமூகத்தை அறியாமலே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது என கல்விச் சிந்தனையாளர்களில் பலர் கூறுகின்றனர்.
புனித நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை விடுவது என்பது முஸ்லிம்களுக்கான உரிமை அதை முஸ்லிம் சமூகம் எக்காரணம் கொண்டும் விட்டு விட முடியாது எமது உரிமையை நாம் பெற்றேயாக வேண்டும் என்று கூறுகின்ற சிலரும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.
இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தயவு செய்து சற்று சிந்தித்துப் பார்த்தலும் அவசியமாகும். முஸ்லிம் சமூகத்தின் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கும் இந்த உரிமை எமது சமூகத்திற்குத் தேவைதானா என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் எனவும் கல்விச் சிந்தனையாளர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
எமது இலங்கை நாட்டில் சகலருக்கும் சம்மான கல்வி வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சமூகங்களுக்காக அரசாங்கத்தினால் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன இங்குள்ள மக்கள் இன, மத, மொழி ரீதியாக வேறுபட்டாலும் நாட்டின் கல்வித் திட்டம் ஒரே இலக்கை அடியொட்டியே உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று பாட விதான உள்ளடக்கம் ஒரே அளவினைக் கொண்டதாக அமைந்து ஒரு வருட கால எல்லைக்குள் பாடசாலையில் கற்பித்து முடிக்க வேண்டியதாகவும் உள்ளது.
இதனைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நோக்குடன் சிங்கள, தமிழ் பாடசாலைகளில் கல்வி வருடங்கள் சம அளவைக் கொண்டதாக மூன்று தவணைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வொரு தவணை முடிவிலும் குறிப்பிட்ட ஒரு காலம் மாணவர்களுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஒழுங்கு முறையான இந்த தவணை அமைப்பு மாணவர்கள் கல்வியைச் சீராகக் கற்க உதவுவதுடன் கல்வியை ஒரு சுமை எனக் கருதாது உளத் திருப்தியுடன் கற்கவும் துணை புரிகின்றது என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டியுள்ளது எனவும் கல்விச் சிந்தனையாளர்களால் வலியுறுத்திக் கூறப்படுகின்றது.
நோன்பு நோற்பது என்பது சகல முஸ்லிம்களினதும் கட்டாயக் கடமையாகும் தொழிலை அல்லது கல்வி கற்பதை விட்டு நோன்பு நோற்குமாறு எமக்கு எங்கும் கட்டளையிடப்படவில்லை. தமது நாளாந்தக் கடமைகளைச் செய்வதுடன் நோன்பு நோற்பதன் மூலம் அதன் உண்மையான பயனைப் பெறமுடியும்.
நோன்புக்கு என முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதால் பெரும்பாலான முஸ்லிம் மாணவர்களும் ஒரு சில முஸ்லிம் ஆசிரியர்களும் அக்காலத்தை கழிக்க வழி தெரியாமல் சோம்பேறிகளாக்கப்படுவதுடன் தமக்கு கிடைக்கும் பொன்னான நேரங்களை வீண் கேளிக்கைகளிலும் தெரு விளையாட்டுக்களிலும் அரட்டை அடிப்பதிலும் நெடு நேரம் தூங்குவதிலும் கழிக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் புனித நோன்பின் உண்மையான பயனைப் பெறத் தவறி விடுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மாறாக நோன்பு காலத்திலும் முஸ்லிம் பாடசாலைகள் நடைபெறுமாயின் கல்வி போதனைக்கும் மேலதிகமாக ஆசிரியர், மாணவர் தொடர்பு தொடர்ந்து இருந்து வரும். இதனால், ஆசிரியர்களால் மாணவர்களை நாளாந்த வணக்க வழிபாடுகளில் முழுமையாக ஈடுபடச்செய்ய முடியும். மறைமுகமாக மாணவர்களை மதச் செயல்பாடுகளிலும் ஏனைய மார்க்க விடயங்களிலும் வழி நடத்தவும் முடியும் எனவும் ஆலோசணையும் கூறப்படுகின்றது.
முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது “ஹறாம்” (விலக்கப்பட்டது) என்று கூறிய ஒரு காலம் அன்றிருந்தது. புத்திஜீவிகள், சமூக சிந்தனையாளர்கள் போன்றோரின் முயற்சியினால் அந்நிலை இன்று மாறிவிட்டது. இது போன்று முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு காலத்தில் மூடப்படல் வேண்டும் என்ற நிலையும் சமூக சிந்தனையாளர்களின் முயற்சியினால் மாற்றப்பட்டு முஸ்லிம் மாணவர்களின் கல்வி தடைப்படாமல் சீராகச் செல்வதற்கு உதவுதல் வேண்டும் என்பதே கல்விச் சிந்தனையாளர்களின் விருப்பமாகும்.
முஸ்லிம் பாடசாலைத் தவணைகள் சிங்கள, தமிழ் பாடசாலைகளின் தவணைகளுக்கு முரண்படாத வகையில் இணைந்து செல்லக் கூடியதாக மாற்றப்படுவதன் மூலம் முஸ்லிம் மாணவர்களின் கல்விக்கு பாதகமின்றி ஊக்கமளிக்கமுடியும் என்பது கல்விச் சிந்தனையாளர்களின் வேண்டுகோளாகும்..
இப்படியான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வரும்போது முஸ்லிம் பாடசாலைகளில் புனித நோன்பு காலங்களில் மாத்திரம் பாடத்திட்டத்தில் நேரசூசியில் சில மாற்றங்களைச் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உதாரணமாக காலையில் 1 மணித்தியாலம் அல்லது 1 ½ மணித்தியாலங்கள் தாமதித்து பாடசாலையை ஆரம்பிப்பது. ஒவ்வொரு பாட வேளையிலும் 05 அல்லது 10 நிமிடங்களைக் குறைத்து அல்லது முற்றாக ஒரு பாடவேளையை இல்லாமல் செய்து புனித 27 ஆம் நாள் தொடக்கம் நோன்புப் பெருநாள் வரை விஷேட விடுமுறை வழங்கி முஸ்லிம் மாணவர்களின் கல்விக்குத் தொடர்ந்து வழிகாட்டலும் ஊக்கமும் வழங்கலாம் அல்லது இதுபோன்ற பல விடயங்களை புத்திஜீவிகள் ஆராய்ந்து தீர்க்கமான ஓர் முடிவுக்கு வரமுடியும் எனவும் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு தேசிய ரீதியான ஒரு சமூகத்தின் பிரச்சினை என்பதால் எமது முஸ்லிம் தலைவர்கள், மதத் தலைவர்கள் என்போர் மத்தியில் இப்பிரச்சினையை முஸ்லிம் கல்வி மாநாடு போன்ற அமைப்புக்கள் கொண்டு வந்து கருத்துக்கள் பரிமாறப்பட்ட பின்னர் சமூகத்திற்கு நன்மை தரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
சமூகத்தை வழி நடாத்திச் செல்லும் முஸ்லிம் தலைவர்கள் சமூக நலனைக் கருத்தில் கொண்டே செயல்பட முன் வரல் வேண்டும். நாம் ஒரு உரிமையை அனுபவிக்கின்றோம் என்ற ஆசையில் எம்மை அறியாமலே எமது சமூகத்தின் கல்வி நிலையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியைக் கண்டறிந்து அதனைத் தவிர்ப்பதற்கு சரியான முடிவைக் காணல் வேண்டும் என்பது கல்விச் சிந்தனையாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
தலைப்ப பார்த்தவுடன் இதுவும் பொது பல சேனா அண்ணன்தான் இத சொன்னாரோ என்று நினைத்துவிட்டன்...(இது விடயமாக சிந்தித்தல் நம் சமூக முன்னேற்றத்துக்கு நல்ல விடயம்தான்)
ReplyDeleteபுத்தி ரொம்ப ஜாஸ்தியாகி விட்டதோ
ReplyDeletefasting kalathil unmyaka katpikum teachersku kastamanathu adthu fasting kalathil special classes nadaiperukinradhi evarkalikku theriatha pasiudan 7 subject kattpathu kadinum kattpikum teachers kattayam water kuddikka vendum teachers & studentssleeping kalam kuraivu saharvelail velithu pillaikalai thayarpathi annuppuvathu peraicchinai term sariyaka perithuthan school naddathapadukirathu.muslimallatha school sellum pillaikal nonbu pedikkamal sellkinranar or kalavu saikindranar ethaiellam kurum kalvisinthaniyalargal yarr evarkal ac roomil erunthu summa velaiparpavargal or nonbu pidikathavarkal .pillaikuk streetil arrattai addipathu pettrorin thappu nonbin thavarellai.nonbu vedumurai thakkavaithukonndu melaikurrapatta kuraipattinai nevarthikalame!
ReplyDeleteNarrow minded and selfish elements in our society would not allow this sought of progressive thinking. They view this as giving into BBS requirements. Many Muslim students who attend non Muslim schools, attend school during the month of Ramadhan. It does not dent their Ibada. As some members of the ACJU also attended non Muslim schools, they very well know this.
ReplyDeleteDear Abujannah & Jaffnamuslim, pls don't be fool. don't try to give an new ideas and new subject to the anti muslim terrorist to talk about this holey days and make as big issue also. mostly our own peoples giving them a new subject to talk and make as big issue against muslims. pls avoid to write such a new references and pls don't publish such a subjects.
ReplyDeletepadikkiramanawarhal ebbadiyum patipparhal
ReplyDeleteVery informative article. I too agree that Muslim schools should be opened during Ramadan but only for reduced hours, may be 5 hours per day. We know that schools in Muslim countries are also open during Ramadan. Muslim leaders should make good decision on this issue.
ReplyDeleteஇது எங்களுக்கு கிடைத்த ஒரு சலுகை. இதை இல்லாதொலிப்பதர்காக இன்று பொது பல சேனாக்கள் முயர்சித்துக்கொன்டிருக்கின்ரார்கள். ஆகயால் நாங்கள் இந்த விசயத்தில் நிதானமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த சலுகயை இல்லாமலாக்காமல் ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளுக்கேற்ப குருப்பிட்ட சில வகுப்புகளுக்கு மாத்திரம் மாற்றங்களை கொன்டுவர வேண்டும். மீதியுல்ல வகுப்புகளுக்கு தேவைக்கேற்ப அந்தன்த பாடசாலை அதிபர்கள் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும். தயவு செய்து இந்த சலுகயை இல்லாதொலிக்க வேண்டாம்.
ReplyDeleteHi Friends,
ReplyDeleteஇது ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சட்டென்று தீர்மானம் செய்துவிடக்கூடிய விடயமாக தோன்றவில்லை.
கட்டுரையிலே கூறப்பட்டுள்ள விடயங்கள் உண்மைகளேயாயினும் நோன்பு விடுமுறையை இல்லாதொழிப்பதிலே தினமும் வெகுதூரம் நடந்து சென்றும் நெருக்கடியான பஸ்வண்டிகளிலே பிரயாணம் புரிந்து வந்து செல்லும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் நிலைமைகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். அத்துடன் மலைநாடுகளிலே உயரமான குன்றுகளிலே ஏறியிறங்கிப் பாடசாலை சென்றுவரும் மாணவர்களையும் வெப்பம் அதிகமான உலர்வலயப் பாடசாலை மாணவர்களையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
மற்றையது நோன்பு பிடித்தால் இயல்பாகவே தோன்றும் களைப்பு கடைகள் நிறுவனங்களிலே வேலைகள் செய்வதற்கு ஓரளவு இயலுமானதாக இருக்கலாம். ஆனால் கல்வி நடவடிக்கைகள் அவ்வாறல்லவே? அது மூளையின் கிரகித்தலுடன் தொடர்பானது. கற்பிக்கும் பாடங்களை சரிவர கிரகிக்க முடியவில்லை என்றால் கல்வியில் பாதிப்பு வருவதற்கு நிறையவே வாய்ப்புண்டு.
எனவே, இதுபற்றிய தீர்மானங்களை உறுதியாக எடுப்பதற்கு முன்பு நிறைய ஆலோசனை கருத்தரங்குகள் மாநாடுகள் நடாத்தி முடிவெடுக்கலாம் என்ற கட்டுரையாளரின் ஆலோசனை மிகச்சரியானதே.
அத்துடன் சில குறித்த பிரதேசங்களிலே மட்டும் பரீட்சார்த்தமான முயற்சிகள் செய்து அவதானித்தலும் நல்லது.
ஆங்கிலக் கல்வி 'ஹராம்' என்று ஒருகாலத்திலே கருதப்பட்டதற்கு காரணம் இருந்தது.
போத்துக்கீசியர்கள் முதல் கடைசியாக இலங்கையை ஆட்சிபுரிந்த ஆங்கிலேயர் வரை சுதேசிகளக்கான தமது கல்வி நடவடிக்கைகளை அவர்களது கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் அதனை அண்டிய இடங்களிலுமே நடாத்தி வந்தார்கள். அங்கு குறிப்பிடத்தக்களவு சுதேசிகளை மதமாற்றும் நிகழ்வுகளும் இடப்பெற்ற வந்தன. ஏனைய மதத்தவர்களில் பலர் அதுபற்றிய கவலையின்றி ஆங்கிலக் கல்வியை பெற்றவேளையில் நமது முன்னோர்கள் மட்டும் மதமாற்றப்படும் சாத்தியங்களைத் தவிர்ப்பதற்காகவே ஆங்கிலக் கல்வியை தடுத்தார்களே தவிர வேறுகாரணங்களுக்காக அல்ல.
இதனால்தான் நமது சகோதர இனத்தவர்களை விட ஆங்கிலக்கல்வியில் நம்மவர்கள் 50 வருடம் பின்தங்கியுள்ளனர்.
எப்பொழுதும் எமது நாட்டில் உள்ள தலைவர்கள் எமது முஸ்லிம்களின் மார்க்க விழுமியங்களை பாதுகாப்பதில் அசட்டு தனமாகவே இருக்கிறார்கள் எவ்வலவோ விடயங்கள் முஸ்லிகளுக்கு தேவைப்படும் நிலையில் இருக்கின்ற சில உரிமைகளையும் இல்லாமளாக்கவே முயற்சிக்கிறார்கள் . நோன்பு கால விடுமுறையை இல்லாமளாக்கச்செய்தால் நோன்பு பிடிக்கும் மாணவர்களை பார்ப்பதற்கே அரிதாகிவிடும் . நோன்பு என்பது கட்டாய கடமை அதை நோற்காமல் இருப்பவர்களும் , அதற்க்கு காரணமாக இருந்தவர்களும் நிட்ச்சயமாக அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாவார்கள் . இலட்சியத்தோடு படிக்கும் மாணவனுக்கு இதெல்லாம்
ReplyDeleteஒரு காரணமில்லை
Very good suggestion Masha Allah
ReplyDelete11 மாதம் உலகக்கல்விக்கு ஒதுக்கி ஒரு மாதத்தை மார்க்க கல்விக்கு ஒதுக்க மனமில்லாத புத்திகெட்ட முஸ்லிம் அறிவாளிகலளின் யோசனைகளை குப்பையில் போடவும்...
ReplyDeleteஅல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும்.முஸ்லிம்களுக்கு உள்ள சலுகைகளை பொதுபல சேனா ஒரு பக்கமாக இல்லாமல் பன்ன ம்றுபக்கமாக முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு சுயநல அரசியல் செய்யும் ந்யவஞ்சகர் களிடமும் இருந்து முஸ்லிம் சமூகத்தை பதுகாக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும்
உண்மையில் எதிர்கால சந்ததிகள் கல்வியில் ஒரு போட்டியான சூழ்நிலைகளை முகம் கொடுக்க நேரிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்கு பல விட்டுகொடுப்புகள் செய்யத்தான் வேண்டும் .
ReplyDeleteஇது எங்களுக்கு முன்னோர்களால் பெற்றுக்கொடுத்த உரிமையாக இருக்கலாம் அனால் வளரும் சிறார்களின் கல்விக்கு பங்கம் ஏற்படும் என்றால் கல்விக்கு பங்கம் ஏற்படாமல் உரிமைகளை அனுபவிக்க வழிகளை தேட வேண்டும். இதற்கு BBS க்கு வெற்றி என்பது கருத்தல்ல.
முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்துள்ள சில உரிமை - சழுகைகளை இல்லாதொழிப்பதில் கல்வி என்னு பெயர் கொண்டு நிறைய முயற்சி நடைபெறுகின்றது.... இப்படியே நாங்கள் அவர்களுக்கு எமது சமூகத்து நியாயங்களை காட்டிக்கொடத்து விடுவோம்......!
ReplyDeleteஇந்த புத்தி கெட்ட ஜீவிகளை நம்பி மார்க்கத்தை விற்க வேண்டாம்.
ReplyDeleteBad .........why are you thinking only this word? you have to arrange...........because we are Muslims........don't forget we are Muslims...can ask small q? are you thinking your mind is (-) from hindu & buddies mind? ...
ReplyDelete