'அதிகாரத்தை பரவலாக்காமல் ஆச்சரியமான அபிவிருத்தியை நோக்கி செல்லமுடியாது'
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு அமைய தான் செயற்பட போவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அழைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்கியதாக வெளியான செய்தி தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நிலைப்பாட்டை தான் ஏற்கவில்லை எனவும் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வழங்குவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் பகிரங்கமாக அது குறித்து பேசுவதை தவிர்த்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் நாட்டில் அதிகாரத்தை பரவலாக்காமல் ஆச்சரியமான அபிவிருத்தியை நோக்கி நாட்டை இட்டுச் செல்ல முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment