தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
(ஹனீக் அஹமட்)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமையைக் கண்டிக்கும் வகையில், பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 28-06-2013 ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
பகிடி வதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் சிங்கள மாணவரான கமலஸ்ரீ என்பருக்கு பல்கலைக்கழக நிருவாகம் வகுப்புத் தடையினை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டிக்கும் வகையிலேயே மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முன்னேறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் இரும்புத் தடுப்புக்களை ஏற்படுத்தியதோடு, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலையும் இழுத்து மூடியிருந்தனர்.
இதனால், விரிவுiராயாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாமல் தமது வாகனங்களுடன் வெளியே காத்திருக்க நேரிட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் மாணவர் ஆதவு சேவையினருக்கு எதிராகவும் பதாதைகளை ஏந்திருந்தனர்.
pakadi wathaikal kattayam thandikka pada wandiyathu ondru aanal atharkaka am manavanin walkayai pathikkamal nadakkawum.athrkaka pahadi wathaikalai aatharippathu yandru artham illai.
ReplyDeleteநன்றி உங்கள் நடவடிக்கைக்கு நிருவாகத்தினரே........... ஆனா ஏன் வாய் கூசாமல் இங்கே பகிடிவதை ஒன்றும் இல்லை என்று அறிக்கையெல்லாம் விட்ட பெரியோர்கள் எங்கே??? எங்கே உங்களது சிரேஸ்ட மாணவர் குளு... அவர்கள் பகடிவதை செய்ய எதிர்ப்பாமே!!! ஹா ஹா... நாங்கள் உண்மை சொன்னால் நீங்கள் வாய் கூசாமல் அதை பொய் என்பீர்கள்.. இப்போது நீங்கள் நினைத்த வேலியே பயிரை திண்பதை பார்த்தீர்களா??? பகடிவதைக்கு முஸ்லிம் மாணவியர்கள் எவ்வாறு ஊக்குவிப்பு வளங்குகிறார்கள் என்பது புகைப்படத்தில் தெளிவாக புலனாகிறது.. மாணவர்களே இதுவல்ல தண்டனை.. சமூகத்தின் தண்டனைகளை மிக விரைவில் எதிர்பாருங்கள்!!!!!!!!!!!!!!
ReplyDeleteIvar raging il eedupattadatkaaha veliyeatra padavillai, adil eedu padavumillai. But Lectur oruvarudan vaakku vaadhattil eedupattadatkaaha thaan veliyeatrapattar. Aneedikkediraahatthan intha aarppattam.
Deleteவெட்கமாய் இருக்கிறது!
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்தின் பண்பாடடை பிரதிபலிக்க வேண்டிய இங்கு பகிடிவதை!..