Header Ads



அறபுக்கல்லூரி தீ பற்றி எரிந்தது

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாயலுக்கு முன்பாக அமைத்துள்ள  சிறாஜிய்யா அறபுக்கல்லூரி தீ பற்றி எரித்துள்ளது. 

இச் சம்பவம் இன்று அதிகாலை வியாழக் கிழமை 06.06.2013  4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும், இவ் விடயத்தை முகைதீன் ஜூம்ஆ பள்ளி வாயலில் கடமையாற்றுகின்ற முஆத்தின் குறிந்த மதரஸா நிருவாகத்தினருக்கு அறிவித்தனை அடுத்து நிறுவாகம் மற்றும் பொது மக்கள் ஒன்றினைத்து தீயை அனைத்ததாக மதரஸா  நிறுவாக செயலாளர் மௌலவி ஏ.எல்.எம்.கபீர் தெரிவித்தார். 

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை போலீசில் முறைப்பாடு செய்தனை அடுத்து வாழைச்சேனை போலீஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவத்தின் போது மதரஸா மாணவர்கள் விடுமுறையில் சென்றிருத்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவத்தில் 1ஆம் மாடியில் அமைத்துள்ள அதிபர் காரியாலய அறை உற்பட மதரஸா மாணவர்களின் படுகைகள் (பெட்) மற்றும் தளபாடங்கள் ,ஆடைகள், அறபு கீதாபுக்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளீட்ட மின் உபகரணங்கள் தீக்கரையாக்கப்பட்டுள்ளது. 

இச் சம்பவமானது மின் ஒழுக்கின் மூலம் ஏற்பட்டிருக்கலாமா? அல்லது இச் செயலானது யாராலும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டிருக்கின்றதா? என்ற அச்ச நிலை மதரஸா நிறுவாகத்தினறுக்கும் பொது மக்களும் தோன்றியுள்ளது.  

இவ் அறபுக்கல்லுரி 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலேயே பிரசித்தி பெற்ற ஒருஅறபு கலாபீடமாகும்.

 இக் கல்லூரியில் அறபு மொழி ஷரீயா மார்க்க கல்வி போதிப்பதற்கு முழு நேரமாக ஐந்து(05) மௌலவி ஆசிரியர்களும் பகுதி நேரமாக இரண்டு(02) ஆசிரியர்களும் பாடசாலை கல்வியினை போதிப்பதற்கு ஆறு(06) ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.