Header Ads



முஸ்லிம் மீடியா போரம் விண்ணப்பங்களை கோரியுள்ளது

(ஏ. எல். ஜுனைதீன்)

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2013, 2014 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன.

   இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 29 ஆம் திகதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் 17 ஆவது வருடாந்த மாநாட்டின் போது புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெறும் என மீடியா போரத்தின் தலைவர் அல்-ஹாஜ் என் எம் அமீன் அறிவித்துள்ளார்.

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தில் அங்கத்தவர்களாக உள்ளவர்கள் தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இப்பதவிகளுக்காக விண்ணப்பிப்போர் கடந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் செயற்குழு உறுப்பினராக குறைந்த பட்சம் ஒரு முறையேனும் பூரண அங்கத்தவராக இருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    குறிப்பிட்ட இப்பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்களேயானால்  நடைபெறவிருக்கும் வருடாந்த மாநாட்டில் அங்கத்தவர்களிடையே வாக்கெடுப்பின் மூலமாகத் தெரிவுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

    15 செயற் குழு அங்கத்தவர்கள் பதவிகளுக்கு 15 பேருக்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வார்களேயானால் செயற்குழு உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் மூலமாகவே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


3 comments:

  1. இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஸ்திரமானதொரு ஊடகத்தேவை நீண்டகாலமாக உணரப்பட்ட ஒன்று. முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு தொலைக்காட்சியோ வானொலி இதுவரை தொடங்கப்படாத நிலையில் அடுத்தவர்களின் தயவிலேயே எமது ஊடகம் தேவைகள் மனச்சாட்சிக்கு விரோதமாக வெளிப்படுத்தப்படுகிறது.

    இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் ஊடகங்களை பிரநிதித்துவம் செய்யும் இலங்கை முஸ்லிம் மீடியா போரம் இவ்வாறன முக்கிய ஊடகத் தேவையை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கையெடுக்காததன் காரணம் என்ன? இலங்கையின் தற்போதைய அரசுக்கு வக்காலத்து வாங்குகின்ற அமைப்புக்களையும் இயங்க்கங்களையுமே இன்று அதிகம் கான முடிகின்றது.

    கிடைத்த கிடைத்துள்ள பதவிகைளயும் வருமானத்தையும் தக்க வைப்பதற்கு அல்லது அதிகரிக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமெ தற்போதை முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் இவ்வறானா முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    ReplyDelete
  2. மர்ஹூம் அஷ்ரப்பின் திட்டங்களில் முஸ்லிம்களுக்காக ஒரு தனியார் தொலைக்காட்சி அமைத்தல் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருந்தார்.தாறுல்ஸலாம் கட்டிமுடித்த பின் அது அமைய வேண்டும் என்றும் கூறினார். அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினார். அப்போது தபால் அமைச்சராக ஹிஸ்புல்லா இருந்தார் அந்த அமைச்சின் ஊடாக சில கருவிகளையும் இறக்குமதி செய்ய முயற்ச்சி செய்தார்.ஆனால் ஹிஸ்புல்லா வுக்கும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த முயற்சி தடு பட்டது.இப்போது யாருக்கும் அந்த எண்ணம் இல்லை

    ReplyDelete
  3. how to join with u as a member???

    ReplyDelete

Powered by Blogger.