Header Ads



பெருமையாக இருக்கிறது..!


(ரவுப் ஹஸீர்)

நேற்று மாலை நான் இதனை கேள்விப்பட்டேன். மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. யாராவது முகப்புத்தகத்தில் குறிப்பிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஹலால், ஹராம், ஹபாயா, மாடறுப்பு என்று இனவாதிகளின் குரைச்சல்களுக்குப் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறோமே தவிர தேசப்பற்றுடன், ஒரு இளம் சாதனையாளனை, அக்குருத்தின் மதம் , நிறம் , குலம் பாராமல் பாராட்டுகிற, அல்லது அந்த செய்தியை நண்பர்களுடன் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிற மனப்பக்குவத்தை இன்னும் நாம் அடையாமல் இருப்பது மிகவும் கவலை தருகிறது. 

சச்சின் தெண்டுல்கார் மாணவனாக இருந்தபோது, பாடசாலைகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் முச்சதம் அடித்து வளரும் பயிர் என்பதை முளையிலேயே வெளிப்படுத்தியதை சச்சினின்  சாதனைகளை பற்றி பேசுகிற அனைவருமே குறிப்பிடத் தவறுவதில்லை .

கொழும்பை சேர்ந்த முதல் தர பாடசாலைகளான ஆனந்தா கல்லூரிக்கும் , சென் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கிரிகெட் போட்டியொன்றில் ஆனந்தா கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருவன் சச்சினின் சாதனையை முறியடிக்கும் அளவுக்கு நமது நாட்டுக்கு பெருமை சேர்த்திருகிறான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் . 

15  வயதிற்கு குறைந்த மாணவர் அணியை சேர்ந்த ஷமி அஷான் என்கிற இந்த மாணவன் 123 பந்துகளில் 352  ஓட்டங்களை விளாசி இருக்கிறான். சரியாகப் பார்க்கப் போனால் இருபது ஓவர்களில்  352  ஓட்டங்கள் என்பது ஓர் இமாலயச் சாதனை அல்லவா.

அதுவும் இந்த வளரும் பயிரின் முச்சதமான இந்த 352 ஓட்டங்களில் ஒன்று இரண்டு சிக்ஸர்கள்  அல்ல 31 சிக்ஸர்கள்  மற்றும் 26 பௌண்டரிகள் அடங்குகின்றன என்பது வியக்க வைக்கிறது. அதாவது மைதான எல்லையை தாண்டி அடித்த பந்துகளால் மட்டும் ஷமி அஷான் என்கிற அந்த சிறுவன் 290 ஓட்டங்களை குவித்திருப்பது மூக்கின்மேல் விரல் வைக்க வைக்கிறது. 

ஐம்பது ஓவர்களில் 550 ஓட்டங்களை குவித்த ஆனந்தா  கல்லுரி, அணி சென் தோமஸ் அணியை  494 ஓட்டங்களால் வெற்றிகொண்டுள்ளது . 

நமக்கு உலகக் கிண்ணத்தை கொண்டுவந்து தந்த அர்ஜுன ரணதுங்க படித்த அதே கல்லூரியில் இருந்து ஒரு தெண்டுல்கார் உருவாக்கி வருவது பெருமைக்குரிய விடயந்தானே . வாருங்கள் பெருமைப் படுவோம் !

1 comment:

Powered by Blogger.