பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் குறைவான ஆடை அணிவதும் காரணம்
மிகக் குறைந்த ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு அந்நாட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது கோடைக் காலம் என்பதால், மிகக் குறைந்த ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் வெளியே வருவதால், பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்திருப்பதாகவும், அதனைக் குறைக்கவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பேருந்து மற்றும் சுரங்கப் பாதைகளில் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக பல புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும், எனவே, பேருந்து மற்றும் பொது இடங்களில் கவர்ச்சியான உடை அணிந்து வர வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான தீர்வை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டது....!
ReplyDeleteஒரு காலம் வரும்.... நிச்சயமாக,,,,,,,சத்தியமாக....
சகல துறைகளிலும்.... இஸ்லாமிய சட்டங்கள்தான் சிறந்தவை என்று இந்த உலகம் ஒத்துக்கொள்ளும்...
ReplyDeleteஅடடா! ஒழுக்கமென்றால் என்னவென்று முதலிலே ஆண்களாகிய நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருபெண் சிறிது அரைகுறையாக வந்தாலும் அவளைப் பார்த்து மனதாலேயே கற்பை இழப்பவர்கள் ஆண்களாகிய நீங்கள்தான்.பெண்கள் யாரும் ஆணின் அரைகுறை உடலைப் பார்த்து மானமிழப்பதில்லை.
உண்மையில் நீங்கள்தான் பலகீனர்கள். உங்களது பலகீனங்களை மறைக்கத்தான் நீங்கள் பெண்களை போர்த்திக் கொண்டு இருக்கச் சொல்லுகின்றீர்களே தவிர நல்ல நோக்கத்தில் அல்ல.
எங்களது உரிமைகளை ஆண்களாகிய நீங்கள் நசுக்குவது பற்றித் தட்டிக்கேட்டால், உடனே மேற்கத்திய அரைகுறை ஆடையணியும் பெண்களோடு நீங்களாகவே எங்களை ஒப்பிட்டு தாழ்த்துகின்றீர்கள். உங்களுடைய ஆண் மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காக நாங்கள் ஒன்றும் அரைகுறை ஆடை பெண்கள் போல தறிகெட்டு வாழ ஆசைப்படுகின்றோம் என்று அர்த்தமில்லை.
ஆம் பெண்ணை சக மனிதனாக எண்ணாத, பெண்களுக்கு சமவுரிமை தராத கோழைகள் நீங்கள். பெண்கள் தொடர்பான ஆன்மீகச் சட்டங்களில் அநேகமானவை இறைவனுடயதல்ல. அவை இடையிலே வந்த பல ஆணாதிக்கர்களால் தங்களது வசதிக்கேற்ப பெண்களை அடிமைப்படுத்துவதற்காகத் திரிபுசெய்யப்பட்டவையே.ஒருபக்கச்சார்பான கபட ஒழுக்கநெறிகள். எனவே அவை ஆண்களாகிய உங்களுக்கு எவ்வளவு புனிதமாக இருந்தாலும் எங்கள் கால்தூசுக்குச் சமானம்.
jesslyaநீங்கள் தவறாக புறிந்துள்ளீா்கள், சீனா அரசும்hatheekஉம் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.பெண்கனளப்பாதுகாக்க வேண்டும் என்பது தான் அதிகமானவர்களின் ஆசயும் நோக்கமும்.மனிதனாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் பல வித்தியாசமான ஆனசகளுடனேயே பனடத்தவன் பனடத்திருக்கின்றான்.ஆன்கள் ஜட்டியுடன் போனால் பெண்கள் பார்ப்பதில்னல அது உண்னம ஆனால் ஆன்கள் அப்படி போவதில்னலயே,அதேநேரம் அதிகமான பெண்கள் முயற்சிப்பது ஆடனய இயன்றளவு குனறத்து தனது அழனக வெளியே காட்டுவதற்கு. பெண் உறினமனய சொன்ன மார்க்கம், சொல்லவில்னல பெண்களுக்கு ஆனடனய குனறக்கும்படி.எனவே புறிந்துகொள்ளுங்கள் சகோதறியே...
ReplyDeleteசகோதரி ஜெஸ்லியா, உங்களுடைய கருத்துக்களை படித்தோம்..
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி,,
அனால்,, சகோதரி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்...
உலகில் உள்ள ஏனைய மதங்களை விட ,, புனித இஸ்லாம் தான் பெண்களுக்கு அதிகப்படியான உரிமைகளை கொடுத்திருக்கிறது....
பெண் உரிமை பேசப்படும் நாடுகளில் பெண்கள் போதைப் பொருளாகவும், வியாபார பொருளாகவுமே பார்க்கப் படுகிறார்கள்,,,
Dr . Zakir Naik இன் பெண் உரிமை பற்றிய உரைகளைப் பாருங்கள், தெளிவு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது..
பெண்களின் குறைவான ஆடைகள் தொடர்பாக இன்று உலகமே யோசித்துக்கொண்டு இருக்கின்றது...
ஆடைகளில் குறைவு செய்வதுதான் பெண்களின் உரிமை அல்ல,
ஆடை என்பது அல்லாஹ்வின் கட்டளை...
ஆண்களால் உன்ன்டக்கப் பட்டது அல்ல..
இயற்கையில்
ஆண்களுக்கு கண் பார்வை மூலமாக பாலியல் உணர்வுகள் ஏற்படுகின்றது, பெண்களுக்கு தொடுகை மூலமாக ஏற்படுகின்றது..
இது படைப்பின் நியதி
இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்ந்தால் குழப்பங்கள் கிடையாது.
Adiye Jesliya muthalla nee pottu irukkira scurf kalattivittu two piece photo onru unnudaya profilekku podu Neeyalla oru muslimpen asingam
ReplyDeletejessly
ReplyDeleteமேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்தி சீனா அரசாங்கத்தால் அன்னாட்டில் வெளியான செய்தி அதற்காக நீங்கள் கொடுத்துள்ள பின்னூட்டம் சம்மந்தமே இல்லாமல் உங்கள் சொந்த வாழ்க்கையே பிரதிபலிக்கின்றதே இது ஏன்? உங்கள் கூற்றுப்படி உலகிலுள்ள ஆண்கள் அனைவரும் ஒளுக்கம் கற்றுக்கொள்ளவேண்டியவர்கள்தானா? இன்னும் நிறைய விடயங்கள் உங்களுடன் கேட்க விரும்புகின்றேன் இதற்கான உங்கள் பதில் என்ன? பலவிடயங்களிலிருந்து புரியக்கூடியதாகவுள்ளது நீங்கள் கடுமையாகப்பதிக்கப்பட்டுள்ளீர்களென்று. உங்களைப்புண்படுத்தவேண்டும் என்பது கண்டிப்பாக எனது நோக்கமல்ல ஆனால் நீங்கள் ஆண்களைப்பற்றி பேசும்போதெல்லாம் ஆண்களைக் கூறையாகவே பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். அதற்காக நான் ஆண்களை நியாயப்படுத்த வரவில்லை சமுதாயங்களில் நிறையவே பிரச்சினைகள் உள்ளன இருப்பினும் நமது தனிப்பட்ட பிரச்சினைகளைக்கொண்டுவந்து சமுதாயத்துடன் அதே கோணத்தில் திணிக்க நினைப்பது மகாதவறு, இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாகப்புரிகின்றது. அதற்காக ஒட்டுமொத்தமாக நீங்கள் ஆண்கள் வர்கத்திற்கே புத்திசொல்ல முற்படுவதும், ஒழுக்கம் கற்றுத்தர முற்படுவதும் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஜெஸ்லி தயவுசெய்து உங்கள் சொந்தப்பிரச்சினைகளுக்காக சமுதாத்திலுள்ளவர்களை தூசிப்பது தவறு என்று முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஆண்களின் காலடியில் பெண்கள் அடங்கிவாழவேண்டுமென்று நான் ஒருபோதும் சொல்லவில்லை,ஆனால் சமுதாயம், மார்கம், அறிஞர்கள், உலமாக்கள், இறைத்தூதுவர்கள், அல் ஹதீஸ், அல் குர்ஆன், இறவன் என்றெல்லாம் பலவிடயங்கள் நம்மையும் தாண்டியுள்ளன அவைகள் மனிதவாழ்வைப்பற்றியும் மனிதன் எப்படி வாழவேண்டியுள்ளது என்று சொல்லித்தருகின்றது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளவில்லையா? முதலில் மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
மேற்குறிப்பிட்ட தலைப்பில் வந்த செய்தியை நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள் காரணம் ஆத்திரம் கண்ணை மறைக்கின்றது, பெண்கள் விடயமேன்றாலே நீங்கள் சரமாரியாக ஆண்களில் பாய்கின்றீர்கள் அதற்கு உங்கள் வாழ்வில் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம் அவைகள் நியாயமாகவும் இருக்கலாம் அதற்காக....
உங்கள் பின்னூட்டத்தை நீங்களே மீண்டுமொருமுறை வாசித்துப்பாருங்கள், எத்தனையோ வலைத்தளங்களுக்கு போய் அதிலுள்ள விடயங்களை வாசித்து பின்னூட்டங்கள் பதிக்கவேண்டியுள்ளது இதுபோன்ற குறிகிய வட்டங்களுக்குள் உங்கள் சிந்தனையை மட்டுப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்தமாக குறைகூறுவது உங்கள் மனதுக்கு வேண்டுமானால் பதமாக இருக்கலாம் ஆனால் அது சரியாகத்தென்படவில்லை என்பதைவிட நாகரீகமான செயலாகத்தான் தென்படுகின்றது. ஜெஸ்லி மீண்டும் மன்னிக்கவும் என்னை குறை நினைக்கவேண்டாம் நான் உங்கள் பக்கமே நிற்கின்றேன்.
ஒட்டுமொத்த ஆண்களின் சார்பாக நான் பேசுகின்றேன் அதில் நல்லவர்கள் நிறையவே இருக்கின்றார்கள் மிகவும் கெட்டவர்களும் நீங்கள் நினைப்பதைப்போலவும் இருக்கின்றார்கள் ஆகவே, அவர்கள் அனைவரின் சார்பாகவும் எனக்கு பதில் தரவேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் உங்கள் பதில்?
Meersha,
ReplyDeleteஇருளிலே இருக்கும்போது எல்லாநிறங்களும் கருமையாகத் தோன்றுமாம். அதுபோல பெண்கள் ஆண்களிலேயே முற்றுமுழுதாக தங்கியிருக்கும் நிலைமையை இப்படியே தொடர்ந்து பேணிக்கொண்டிருந்தால் இன்றைய சமூக அமைப்பிலே பெண்களைப் பாதுகாக்க வேண்டியது நியாயம் போலத் தான் நமக்குத் தோன்றும்.
ஒரு ஊரிலே திருட்டு நடக்கின்றது என்பதற்காக எல்லா வீட்டுக்கதவுகளுக்கும் இரும்புக் கிராதிகள் போடுவது வேண்டுமானால் உடனடியான சிறுபலனைத் தரலாம். ஆனால் நீண்டகால நிரந்தரப் பலனைத்தராது.
திருட்டுக்கு காரணமென்ன என்பதை ஆராய்ந்து, விளையும் நன்மையினை உத்தேசித்தாவது ஊராரின் வறுமை, வேலையின்மை போன்றவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளை ஏற்படுத்திவிட்டால் அதுதானே இரும்புக்கிராதிகளைவிட நீடித்திருக்கும்..?
எரியும் பொருளை அகற்றிவிட்டால் அல்லது எரிவதற்கு வேண்டிய வெப்பத்தை தணித்து விட்டால் தீ அணைந்துவிடும்.
குற்றத்திற்கான தேவையையும் அதற்கான காரணிகளையும் நீக்கிவிட்டால் குற்றங்கள் மெல்ல மெல்ல அற்றுப்போய்விடும்.
அதுபோலத்தான் நமது சமூகத்திலே ஆண்களும் பெண்களும் ஒருவர்மீது அன்பு செலுத்தினாலும் கூட ஒருவரையொருவர் மேலாதிக்கம் புரியாது சுயமாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழக்கூடிய வகையிலே சிறந்ததொரு சமூகக்கட்டமைப்பை உருவாக்கி விட்டால், நமது பெண்களை ஆண்கள் வெடிகுண்டுகளை வெடித்துவிடாமல் பாதுகாப்பது போன்று பொத்திப் பொத்திப் பாதுகாப்பு வழங்கிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லையே.
நிதானமாகவும் நடைமுறைச்சாத்தியமாகவும் யோசித்துப் பாருங்கள். இது தெளிவாகப் புரியும் சகோதரரே!
சகோதரி Jesslya! சீன காவ்ற்துரை எந்த ஆன்மீக சட்டத்தினை அமுள்படுத்துகின்ரார்கள்?,
ReplyDeleteஅறிவியள்றீதியாக அறிவுள்ள எந்த மனிதனாளூம் மறுக்கமுடியத ஒரு உண்மையான ஆண்,பெண் உடல் ஊனர்வு வேரறுபாட்டினை மறுக்கின்ரீரா?.
நீங்கள் ஒறு முஸ்லிமாக இறுந்தாள் இஸ்லாம் ஆண், பெண் ஆடை தொடர்பாக என்ன அறிவுரைகளை வளங்கியுள்ளது என்பதனையும் பிழையானன நடைமுரைகளையும் சுட்டிக்காட்டியிருக்களாமே!.
அவ்வாறு இல்லையென்ட்ரால் கண்மூடித்தனமாக எந்த சட்டத்தினை மறுக்கின்ரீர்கள். ஓலுக்க விலுமியங்களை அறுவுறுத்தும் இஸ்லம் பலவீனமான ஆண்களையும் பெண்கலையும் சய்த்தானின் பிடியில் சிக்கி தமது கற்பையும் நிம்மதியையும் பறிகொடுத்துவிடாமள் பாதுகாப்பதற்காகவே முதலில் ஆண்களைப்பற்றியும் அதனைத் தொடர்ந்து பெண்களைக்குறித்தும் நிற்கின்றது. அதாவது...........................
“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். Al-Quran(24:30)
தொடர்ந்து ”இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே!(இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்”Al-Quran(24:31)
மேற்கூரப்பட்ட அல்லாஹ்வின் வழிகாட்டளை ஓரலவேனும் சீன் கவள்துரை கடைபிடிக்கின்ரது.
இஸ்லாத்தின்பால் முலுமையாக திரும்புவதற்கு எள்ளாம் வள்ள அல்லஹ் எனக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அருள்புறிவானாக.
முறன்பாடுகள் இறுப்பின் தொளிவுபடுத்துங்கள்.
சகோதரியே தயவுசெய்து மறுக்கப்படும் பெண் உறிமைகளை தெழிவாக சமூகத்தின் முன் எடுத்துச்சொள்ளுங்கள். அவ்வுறிமைகளை வென்றெடுக்க அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளும் ஒன்றினைந்து தெழிவான வழ்க்கை நெறியின் அடிப்படைய்யிள் செயற்படுவோம்.............
ReplyDeleteஜெச்லிய தங்கச்சி,,
ReplyDeleteரொம்ப பாதிக்கப் பட்டிருக்க போல தெரியுதே...
யாரோ ஒருத்தன் ஏமாற்றி இருக்க கூடும்....
அல்லாஹ் உங்களுக்கு நல்ல அறிவை, ஹிதாயத்தை கொடுப்பானாக...! ஆமீன்....!
Ranees MHM,
ReplyDeleteநீங்கள் நினைப்பதுபோல எனது கருத்துகளுக்கு காரணம் நிச்சயமாக எனக்குண்டான தனிப்பட்ட பாதிப்புகள் கிடையாது. எனக்கு ஆண்களின் மீது வெறுப்பும் கிடையாது. தவிர என்னைச்சுற்றியுள்ள ஆண் சகோதரர்கள் அனைவரும் சிறந்த ஒழக்கமுள்ள மனிதர்கள். அதுமட்டுமல்ல அதிஸ்டவசமாக ஆண்களுக்கேயுரிய மேலாதிக்க குணம் சிறிதும் அற்றவர்கள் அல்லது மிகவும் குறைவான அளவில் மட்டுமே கொண்டிருப்பவர்கள். எனவே தனிப்பட்ட வகையிலே பாதிக்கப்பட வாய்ப்பே இல்லாத சூழலில் வளர்ந்தவள் நான்.
எனது கருத்துக்கள் எல்லாமே நான் அயற்சூழலில் சமூகத்தில் பார்த்தும் படித்தும் அறிந்தவைதான்.
தவிர, தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் சமூக அநீதிகள் குறித்து கோபம் கொள்ள வேண்டுமா? Eg:பொதுபலசேனாவினால் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை எதிர்த்து கருத்துக்கூறுகின்றார்களா என்ன?
இஸ்லாம் சிறந்த மார்க்கம்தான். ஆனால் ஆணாதிக்கம் அதனையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. இஸ்லாம் இறைவனால் அருளப்பட்டது என்றால் அது நிச்சயம் மனித ஆண்-பெண் இருபாலாருக்கு பொதுவான நீதியையே கொண்டிருக்க வேண்டும். அது ஆணினம் பெண்ணினத்தை அடக்கி ஒடுக்கும் விதமாக நிச்சயம் கட்டமைக்கப்பட்டிருக்காது. ஏனெனில் இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். ஆக இஸ்லாத்தில் பெண்களை ஒடுக்கும் அம்சங்கள் இருக்குமாயின் அவை ஆணாதிக்கர்களின் கபடத்தனமான இடைச்செருகலாகவே இருக்க வேண்டும்.
அவ்வாறேதான் ஏழை-பணக்காரன் பற்றிய மதக்கொள்கை வேறுபாடுகளுக்கும் ஏதோ ஒரு வரலாற்றுப்பிழையே காரணமாக இருக்க வேண்டும்.
கொலைப்பட்டினியில் சாகும் ஆபிரிக்க முஸ்லீம் சிறுமிக்கும் 2.5 மில்லியன் யூரோ செலவில் டிஸ்னிலான்டில் மதுபானப் பார்ட்டி வைக்கும் சவூதி இளவரசருக்கும் பாரபட்சமான நீதிவைத்தவனாக இறைவனையும் அவனது சட்டங்களையும் என்னால் கருதமுடியவில்லை.
பெரும்பாலான நமது ஆண்கள் பெண்களை அடக்கி ஓடுக்குவதிலே காண்பிக்கும் இஸ்லாமியப்பற்றை, தமக்கு இஸ்லாம் காண்பித்துள்ள வேறு எத்தனையோ பல ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதிலே காண்பிப்பதில்லை.
இவற்றால் உண்டாகும் தார்மீகக்கோபம்தான் எனக்கு உள்ளது. தவிர மேலாதிக்க உணர்வுகளில்லாத விதிவிலக்கான ஆண்கள் மீது எனக்கு கோபமோ வருத்தமோ கிடையாது.
இணையத்திலே நான் எனது கருத்துக்களை துணிச்சலாக இடுவதனால் அவற்றை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காத ஆண் மேலாதிக்கப்புத்தியுள்ள பலர் ஒருநாளைக்கு 20க்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை மரியாதையற்ற வார்த்தைகளுடனும் ஆணாதிக்க வெறியுடனும்தான் அமைந்து வருகின்றனவே தவிர எனது நியாயமான வினாக்களுக்கு காத்திரமான பதில் தர அவர்களால் முடிவதில்லை.
பொதுவாக அத்தகைய மரியாதையற்றவர்களை நான் கண்டுகொள்வதேயில்லை.
என்னை என்னுடைய கருத்துக்காக மதிப்பவர்களை மட்டுமே நானும் மதிப்பதுண்டு. நீங்கள் நினைப்பதுபோல நான் அறிவு அகந்தை கொண்டவளல்ல. அத்தோடு அப்படியான அகந்தையை நான் வரவேற்பவளுமல்ல.
நான் ஆண் மேலாதிக்க இயல்புகளுக்குத்தான் எதிரியே தவிர ஆண்களுக்கல்ல.
எனது கருத்துக்கள் சரியென்று என்று எனக்குத் தோன்றுகின்றது. அதை நான் வெளிப்படுத்தும் விதத்தில் வேண்டுமானால் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவற்றிலுள்ள மனித நேயத்தையும் நியாயத்தையும் புரிந்துகொண்டால் என்னைப்பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் தோன்றாது.
நாம் பெண்களுக்காக வாதாடுகின்றோமென்றால் அது எங்கோ தொலைவிலே இருக்கும் பெண்களுக்காக மட்டுமல்ல. நமது தாய் சகோதரிகள் அனைவருக்குமாகத்தானே விவாதிக்கின்றோம். இதை ஏன் நல்லவிதத்தில் நீங்கள் புரிந்துகொள்ளக்கூடாது? நியாயத்தைக் கேட்பது பெண்ணாக இருந்தால் அவள் அடங்காப்பிடாரிதான் என்று நீங்களே ஒருதலையாக முடிவெடுப்பது சரியா? அந்த உரிமையை யார் ஆண்களாகிய உங்களுக்கு வழங்கியது?
இதுதான் எனது கேள்விகள்.
தற்போது ஜெஸ்லியா சகோதரியின் கருத்துக்கள் வரவேற்கத் தக்கதாக உள்ளன..
ReplyDeleteநீங்கள் இந்த செய்திக்கு முதலாவது கருத்தில் கொஞ்சம் கவனமாக வார்த்தை பிரயோகங்களை பதிவு செய்திருக்கலாம்....
ஆண் ஆதிக்க செயற்பாடுகளை நாங்களும் வன்மையாக கண்டிக்கிறோம்..
அனால் , ஆடைக்குறைப்பு விடயத்தை எந்தப் பெண்ணும் நியாயப்படுத்த முடியாது....
ஆடை விடயத்தில் என் மனைவி, சகோதரி, தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நன் ஆசைப்பட்டேனோ அதை தான், நன் மற்றைய பெண்களிடமும் எதிர்பார்க்க வேண்டும்... அப்போது தான் நன் ஒரு உண்மையான முஸ்லிம்...
அல்-குர்ஆண், அல்-ஹதீத் ஒளியில் பார்த்தல் உலகில் உள்ள சகல சித்தாந்தம் களையும் விட இஸ்லாம் மிக சிறப்பாக பெண்களுக்கு உரிமைகளையும் , பாதுகாப்பையும் வாரி வாரி வழங்கி இருக்கிறது...
" உலகில் இரண்டு குழப்பங்களை விட்டு செல்கிறேன்..முதலாவது - பெண்கள், இரண்டாவது - உங்கள் பொருளாதாரம் (பணம்) "
(அல் - ஹதீத்.)
" நரகில் அதிகமாக பெண்களைப் பார்த்தேன் - ஏன் என்றால் அவர்களில் அதிகமானோர் கணவனுக்கு மாறு செய்வோராக இருக்கின்றனர் "
(அல் - ஹதீத்.)
இவற்றையெல்லாம் பார்க்கும் போது பெண்கள் தரப்பில் அதிக தவறுகள் இருப்பதாக தோன்றுகிறது....
சகோதரி jesliya விடம் ஒரு வேண்டுகோள் ..
நன் உங்கள் மனம் நோகும் படி ஏதும் பேசி இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்..
Jesslye,
ReplyDeleteஉங்கள் comment எல்லாம் பார்த்தேன் நன்றி,
நீங்கள் Hatheek க்கு கொடுத்த முதலாவது Comment ஐப்பாருங்கள் அதற்குமுன் Hatheek என்ன சொல்லியுல்லார் என்றும் பாருங்கள்,அவர் சென்னது 1400வருடத்துக்கு முன்பே......,ஆனால் நீங்கள் அவருடன் சண்டயிடும் விதத்தில் எழுதி உள்ளீர்கள்.அவர் தவறாக எதுவும் எழுதவில்ல அவர் சிலநேரம் என்னயும்விட நல்லவறாக இருக்கலாம்,அதேபோன்று நீங்களும் நல்ல குணம் உள்ள பெண்ணாக இருக்கலாம் எனவே புறிந்து கொண்டு எழுதுங்கள்.நாம் முஸ்லீம்கள் அடுத்தவர் மனம் புண்படும் விதம் வார்த்னதகனல பிறயோகிக்கக்கூடாது.
பெண்உறிமய பற்றி நீங்கள் தாறாழமாக எழுதுங்கள் அது அடிமயாக வாழ்கின்ற பெண்களுக்கு உற்சாகத்னத ஏற்படுத்தும் அதேபோன்றுகெட்ட குணம் உள்ள ஆன்களுக்கு பாடமாகவும் இருக்கும், நன்றி.
சகோதரர்கள் Hatheek,Meersa & Renees MHM,
ReplyDeleteஎனது எண்ணங்களைப் புரிந்து கொண்டதாக நீங்கள் எழுதியிருப்பதற்கு மிக்க நன்றி. இதுவரையில் எனது கருத்துக்கள் சற்றுக்கடுமையாக இருந்தமைக்கு காரணம் உள்ளது.
பொதுவாக பெண் அடிமைத்தனங்களைப் பற்றிய கருத்துக்களை தளங்களிலே எழுதியதும் அதற்குரிய உடனடி விளைவாக நான் சந்திப்பது படுகேவலமாக எழுதப்பட்ட மின்னஞ்சல்களைத்தான். அவற்றை எழுதுவது வேறுயாருமல்ல. பிரபல இணையத்தளங்களிலே தம்மை மிகப்பெரும் இஸ்லாமியப் பற்றாளர்களாக காண்பித்துக்கொள்ளும் நமது ஆண் சகோதரர்கள்தான்.
அவர்கள் முஸ்லீம்களாக இருந்தும் கூட ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது.
அவர்களிலே பலர் எவ்வாறான முஸ்லீம்கள் என்றால், தொடுவானச் சிந்தனை கொண்ட முஸ்லீம்கள். அதாவது தொடுவானத்திற்கு அப்பால் எதுவுமில்லை என்று நம்பும் சிறுபிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டிருப்பவற்றுக்கு அப்பால் சிந்திப்பதுமில்லை - சிந்திக்க விரும்புவதுமில்லை. ஆகவே என்னுடைய கருத்தின் நியாயத்தை எதிர்கொள்ள முடியாத ஆற்றாமை அவர்களில் பலரை என்மீது தனிப்பட்ட அவதூறுத் தாக்குதல்களில் ஈடுபடச்செய்திருக்கின்றது.
இணையத் தளங்களிலே பக்திமான்களாகவும் தனிப்பட்ட மின்னஞ்சலிலே பாலியல் வக்கிரர்களாகவும் எழுதுபவர்களை நான் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக சற்றுக் கடுமையான தொனியை எனக்கு நானே வரவழைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தி வரவேண்டியதாயிற்று.
ஆனால் நாளடைவிலே அதுவே எனக்குப் பழகியும்போய்விட்டது.
அந்தக் கடுமையான தொனி, எனது கருத்துக்களை உள்ளுர ஆதரிக்கும் ஆண்களில் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது உண்மையே. ஆனாலும் இப்போது உங்களைப்போன்ற சகோதரர்களின் பின்னூட்டங்களின் காரணமாக நிலைமையை பரஸ்பரம் நாம் புரிந்து கொண்டமை மகிழ்ச்சியை அளிக்கின்றது.
மற்றப்படி சிறந்த கருத்துப் பரிமாறலுக்கு எனது இதயம் எப்போதும் திறந்தே இருக்கின்றது.
Jessly..
ReplyDeleteநான் உங்கள் கருத்திற்கு சில கருத்துகளை காட்டி சிலகேள்விகளைக்கேட்டிருந்தேன் அதற்கு சில விடயங்களை காட்டி மீண்டும் என்னிடம் சில கேள்விகளை கேட்டிருந்தீர்கள் அவற்றையும் பார்த்தேன் அதனிடையில் சில சகோதர்களின் பின்னூட்டங்களையும் பார்த்தேன். இருப்பினும் என்னிடம் நீங்கள் கேட்டகேள்விகளுக்கு பதில் எந்த ரீதியில் தருவது என்பது சம்மந்தமாக எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது காரணம் உங்களது கேள்விகள்: மார்கம் சம்மந்தமாகவும், மார்க்கத்தைப்பின்பற்றுபவர்கள் நடந்துகொள்ளும் விடயமாகவும், அதேவேளை சமுதாயத்தின் ஒரு போராட்ட நிலை பற்றியும் இருந்தது. ஆக இதற்கான பதில் என்னைப்பொறுத்தவரைக்கும் ஓரளவு விரிவாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டுமென்று வழமைபோல் எண்ணியிருந்தேன் காரணம் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றனவா என்று பார்கவே நாம் தற்போது அலசிக்கொண்டிருக்கின்றோம் நம் எல்லோரது எண்ணமும் சமுதாயத்திற்காக குரல்கொடுப்பதுதான் ஆகவே நம் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிக்கொண்டுவரும் விதம் வித்தியாசமாக இருக்கின்றது. கடைசியாக நேற்று 08/06/2013 இல் உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் பார்த்தேன் அதில் உங்கள் நிலைமையை எடுத்துச்சொல்லி உள்ளீர்கள் அதையிட்டு உங்கள் கொள்கையின் விழக்கம் மகிழ்சியாக இருந்தாலும் நடந்தவைகளையிட்டு வேதனைப்படுகின்றேன். இதுபோன்றவர்களின் கீழ்த்தரமான உள்ளொன்று வெளியொன்று வைத்தும் சமுதாயத்திற்கொன்றும் தனக்குள்ளொன்றும் வைத்து நாடகமாடும் அனாகரீகச்செயல்களுக்கு நாம் ஒருபோதும் நம் குரலை தாள்திவிடத்தேவையில்லை.
எது எவ்வாறாயினும் உங்கள் காரணங்களும் கொள்கையும் ஏறுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளன என்பதில் சந்தேகமே இல்லை. தனிப்பட்ட மனிதனின் செயற்பாடும் அவனது கொள்கையும் வெளி நடப்பும் ஒருபோதும் இஸ்லாம் ஆகாது ஒருமனிதனின் செயலால் ஒருபோதும் இஸ்லாம் பாதிக்கப்படக்கூடாது, மனிதன் இப்படித்தான் வாழ்வேண்டும் என்பதற்காக இறைவனால் சொல்லப்பட்ட வழிமுறைதான் இஸ்லாம் என்றிருக்க மனிதனின் செயல்பாட்டினால் அவனைப்படைத்த இறைவனும் அவன் நமக்காக வழிவகுத்துதந்த சட்டதிட்டங்களும் தவறாகிப்போவது ஒருபோதும் நியாயமாகாது. உங்கள் பணிதொடரட்டும் அது நல்ல முறையில் தொடரட்டும், உங்கள் கொள்கை நல்லதே அதைவெளிக்கொண்டுவரம் விதம் ஆவேசத்துடன் உள்ளது ஆற அமர யோசிப்பது மிகவும் நன்மையத்தரும் ஏனென்றால் நானும் பலவிடயங்களில் அடிக்கடி ஆவேசப்படுவேன் அவைகள் எப்போதும் எனக்கு நல்லதொருதீர்ப்பைப்பெற்றுத்தந்ததே கிடையாது மாறாக எனக்கு எதிர்மறையான நிகழ்வுகளையே உருவாக்கின.
புரிந்துகொள்வோம் பெற்றுக்கொள்வோம்.
நம் அனைவரின் பணியும் நல்லவழியில் தொடரவேண்டும் இன்னும் நிறையவே நாம் கற்கவேண்டியும் சாதிக்கவேண்டியும் உள்ளது.
கருத்துப்பரிமாற்றங்களினூடாக சந்திப்போம். மகிழ்ச்சி.
Renees MHM,
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு நன்றி,
உங்கள் கருத்துகளிலிருந்து நீங்கள் என்னுடன் சில விடயங்களை விவாதிக்க விரும்புகின்றீர்கள் என்பதுவும் ஆனால் அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற தயக்கமிருப்பது போலவும் தெரிகின்றது. சரி, நானே ஆரம்பித்து வைக்கின்றேன்.
அதற்கு முன்பு சிறு வேண்டுகோள்:
விவாதம் என்பது முன்முடிவுகளுடன் வந்து கருத்து நெகிழ்வின்றி வெறுமனே வரட்டுத்தனமாக வாதிட்டு விட்டு திரும்பிச்செல்லும் நிகழ்வு அல்ல. திறந்த மனதுடன் வந்து ஆதாரபூர்வமான கருத்துகளை மோதவிட்டு உண்மையை அறிவதே ஆரோக்கியமான விவாதம்.
அதாவது ஒரு விவாதம் என்பது அதன் மூலம் ஒரு குறித்த விடயம் பற்றிய தெளிவை அடையக்கூடிய பாதையில் அறிவுபூர்வமாக முன்னேறிச் செல்வதாக அமையவேண்டும்.
அவரவர் விவாதத்திற்கு முன்வைக்கும் ஆதாரங்கள் கூடுமானவரையில் வெறும் நம்பிக்கைகள் சார்ந்தவையாக இல்லாமல் உண்மையானதாகவும் உலகம் அறிந்ததாகவும் அவற்றை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கத்தக்க வகையிலும் இருக்கட்டும்.
உதாரணமாக கைரேகை சோதிடம் உண்மையானது என்று ஒருவர் வாதிட்டால் அவர் மனிதர்களின் கைரேகைகளையும் அவற்றின் காரணமாக அவர்களுக்கு நிகழ்ந்த பலாபலன்களையும் ஆதாரபூர்வமாக சமர்ப்பித்து அதை நிரூபிக்க வேண்டும்.
மாறாக, சோதிடத்தை உலகில் இத்தனை வீதமான மக்கள் நம்புகின்றார்கள் முன்னோர்கள் நம்பியிருக்கின்றார்கள் எனவே அது உண்மையானது கூறி நிரூபிக்க நினைக்கக் கூடாது.
பேய் உள்ளதா இல்லையா என்று ஒரு விவாதம் நிகழ்வதாக வைத்துக்கொள்வோம். அதிலே பேய்கள் இருக்கின்றன என்று வாதிடும் நபர் பேய்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அறிவுபூர்வமாக முன்வைக்கலாமே ஒழிய பேய்களால் எழுதப்பட்டதாக அவர் நம்பும் ஒரு நூலைக் காண்பித்து, 'இதோ பாருங்கள் ஒரு காட்டேரிப்பேய் இப்படி எழுதி வைத்திருப்பதால்...' என்பது போன்ற ஆதாரங்களை முன்வைக்க முடியாது.
இதற்கெல்லாம் இருவரும் தயாராக இருந்தால் இந்த நிமிடமே விவாதத்தினை ஆரம்பிக்கலாம்.
பதில் கூறுங்கள்.
ஆஹா......!
ReplyDeleteஎன்ன டா நடக்குது இங்க....?
jesly
ReplyDeleteun kannil milahai podiyai thoovi vittu
yerichal milahai podi thoovapattatal varavillai milahai podiyai un kangal paartataltan vantathu endru oppukolviya ???
nee pesuvathu muttaltanamaha erukkirathu aanavam kodavarhalai allah neasippathillai //unnidam aanavam erukirathu atanale unmayai yetrukolla marukure unnidam vivatam seivathu kadum muttal tanam