Header Ads



பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் பங்குகொள்ளாது - ரவூப் ஹக்கீம்

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி பங்கேற்காது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் தமது கட்சியும் பங்கேற்கப்போவதில்லை என தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார். 

கண்டியில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

3 comments:

  1. ஏதோ இவர்களை அரசாங்கம் தெரிவு செய்தது போலவும், அதனை இவர்கள் மறுப்பது போலவும் அல்லவா இப்பம்மாத்து அறிககை காணப்படுகின்றது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் தலைவரே..!!!

    நிட்சயமாக முஸ்லிம்களின் உரிமை போராட்டமாக இருக்காது என்று என் உள்மனம் சொல்கிறது ஏனெனில் இந்த ராஜபக்ச அன் கோ ஆட்சியில் நிறைய முஸ்லிம்களுக்கான பாதகமான நிகழ்வுகள் நடந்தும் நீங்கள் கைகட்டி வாய் பொத்தி மௌனமாக ( சம்மத்தத்தின் அறிகுறி ) இருந்தீர்கள். அடுத்தது இந்த முடிவும் வேறொரு சக்தியின் நிகழ்ச்சி நிரலாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது...!!! சற்று தெளிவாக விளக்குவீர்களா தலைவரே..!!!

    ReplyDelete
  3. இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலும் ஆரம்பிக்கப் போகும் தருனத்தில் தலைவர் எதையாவது தூக்கிப்போட்டு எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிப்பாறு! தொடந்து செய்ங்க தலைவர் உங்களுக்கு பின்னால ஒரு கூட்டமே இருக்கு ”கண்ன மூடிக்கிட்டு” இப்ப திறக்க மாட்டாங்க?

    ReplyDelete

Powered by Blogger.