வடமாகாண தேர்தல் திகதியை நானே தீர்மானிப்பேன் - தேர்தல்கள் ஆணையாளர்
செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவப்பட்டது.
அவர் தெரிவித்ததாவது;
'வட மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 7ஆம் திகதியெனத் தெரிவித்தார்கள். 14ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிட்டார்கள். 28ஆம் திகதி என்றார்கள். பெரும்பாலும் செப்டம்பர் மாதம் தேர்தலை நடத்துவதற்கான நான்கு தினங்கள் உள்ளன. அவை 7,14,21 மற்றும் 28ஆம் திகதிகளாகும். 7 மற்றும் 14ஆம் திகதிகளில் தேர்தலை நடத்துவதற்கு வாக்களிப்பு சட்டத்தின் கீழ் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான கால அவகாசம் போதுமானதாக இருக்காது. அதனால், பெரும்பாலும் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி தேர்தல் இடம்பெறலாம். அதில் ஒரு தினத்தை முடிவு செய்யவுள்ளோம். யார் என்ன சொன்னாலும் 21ஆம் திகதியா அல்லது 28ஆம் திகதியா என்பதை நானே தீர்மானிப்பேன்.
என்னது..? இந்த நாட்டிற்கு இரண்டு ஜனாதிபதிகளா?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-