முஸ்லிம் சமுகம் ஊடகத்தின் பெறுமதியை உணர தவறிவிட்டது - அமீன்
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
20 ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் நேற்று (22) சனிக்கிழமை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமை உரையாற்றுகையில்.
திறமையான முஸ்லிம் ஊடகவியலாளர்களை நாடு முழுவதிலும் உருவாக்கும் எமது எண்ணக்கருவுக்கு ஏற்ப முஸ்லிம் மீடியா போரத்தின் 40 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று நீர்கொழும்பில் நடைபெறுகின்றது. உலகின் நான்காவது சக்தியாக திகழும் ஊடகத்தின் பெறுமதியை உணர எமது முஸ்லிம் சமுகம் தவறிவிட்டமை மிகவும் துரதிஷ்டவசமானது.
இந்த நிலையை மாற்றியமைக்கும் கடும் முயற்சியில் எமது முஸ்லிம் மீடியா போரம் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து நாடு முழுவதிலும் மாணவர்களுக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஊடகத்துறைப் பயிற்சியை அளித்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ளது போன்று முஸ்லிம்களுக்கும் தனியான ஊடகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முஸ்லிம் தனவந்தர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு இன்றைய இளைய சமூகத்தினருக்கு தெரியாமலிருப்பது கவலைக்குரிய விடயம். இதனை ஏனைய மக்களும் அறிந்துகொள்ள வழியேற்படுத்த திறமை மிக்க ஊடகவியலாளர்கள் எமது சமூகத்தில் உருவாக வேண்டும்.
இன்றைய எமது இளைய சமூகத்தினரிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் தினசரிப் பத்திரிகைளை வாசிக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றௌரும் இதில் அதிக அக்கரை காட்டவேண்டும் என்றும் கூறினார்.
நீர்கொழும்புப் பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளராக- காதி நீதிபதியாக- சமூக சேவையாளராக நீண்ட காலம் கடமையாற்றிய எம். ஆர். எம். மிஹினார் மற்றும்; கல்வித்துறையிலும் ஊடகத்துறையிலும் சிறந்த பணியாற்றிய கிச்சிலான் அமதுர்ரஹீம் ஆகியேர் இந்த ஊடகச் செயலமர்வில் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம்- சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஷீத் எம். ஹபீல் ஆகியோரும் உரையாற்றினர்.
கலைவாதி கலீல்- எச்.எம். பாயிஸ்- ஜாவிட் முனவ்வர்- அஸ்கர் கான் ஆகியயோர் இங்கு விரிவுரைகளை நடத்தpனர்.
this is good please send Ameen sir mobile number
ReplyDelete