பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமைச்சரவை கூடுகிறது
அரசியலமைப்பின் 13 சட்டதிருத்தத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தின் போது ஆராயப்பட்டது.
எனினும் இதுகுறித்து ஆலோசிப்பதற்கு அவகாசம் வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் வாதிட்டிருந்தனர். இதனடிப்படையில் ஒருவார கால அவகாசம் ஜனாதிபதி மஹிந்தவினால் வழங்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை, 13 ஆம் திகதியுடன் இந்த அவகாசம் முடிவடையும் நிலையில் நேற்று புதன்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.
ஒருபக்கம் பௌத்த பேரினவாத கட்சிகள் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை செய்ய வலியுறுத்திவரும் நிலையில் மறுபக்கம் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இடதுசரிகள் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நலையில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Now the power is with his excellency the president he is the president to all Sri Lanakns so he hast to take meaningful decision specially he has to forecast on non Buddist community now a days some Buddist elements trying to eradicate all other religious community.
ReplyDeleteSo entire world is writing to see how Mr. President is going to react