சுகாதார வைத்திய அதிகாரி ஜப்பாருக்கு பிரியாவிடை நிகழ்வு
(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றி பதவி உயர்வுபெற்றுச் செல்லும் கே.ஏ.ஜப்பார் என்பவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று 24-06-2013 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையில் நிர்வாக உத்தியோகத்தராக பதவி உயர்வுபெற்றுச் செல்கின்றார்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகீலா இஸ்ஸத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment