யாழ்ப்பாண முஸ்லிம் வட்டார செய்தியாளரின் விளக்கம்..!
(அண்மையில் எமது இணையம் நவமணி பத்திரிகை உள்ளிட்ட சில முஸ்லிம் ஊடகங்களில் யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் வெடிபொருட்கள் மீட்பு என்ற செய்தி வெளியாகியிருந்தது. இதுதொடர்பில் சில தமிழ் ஊடகங்கள் உண்மைக்கு மாற்றமான செய்திகளை வெளியிட்டிருந்தன. எனவே இதுதொடர்பில் நாம் எமது யாழ் பிராந்திய செய்தியாளர் பா.சிகானிடம் மேலதிக விளக்கம் கேட்டிருந்தோம். அவர் எமக்கு அனுப்பிய விளக்கம் இதோ)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட முஸ்லிம் வட்டாரத்தில் வெடிபொருட்கள் மீட்பு தொடர்பான விளக்கம்,
சம்பவ தினம் எமது பிராந்திய செய்தியாளருக்கு அப்பிரதேச மக்களின் சிலரிடம் இருந்து தொலைபேசி வந்தது. அதனடிப்படையில் கிணறு ஒன்றில் இருந்து ஷெல் ரக வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக,உடனடியாக அவ்விடம் சென்ற அவர் அங்கு இருந்த பொதுமக்கள்,கிணறு சுத்தம் செய்தவர்கள்,சம்பவ இடத்தில் நின்ற இராணுவத்தின் கஜபா ரெஜிமன்ட் உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதனடிப்படையில் மேற்படி வீடு உடன் அமைந்த காணி, அதனை தற்போது ஒருவர் 35 இலட்சத்திற்கு கொள்வனவு செய்துள்ளார் என தகவல் கிடைத்தது. இதனை அங்கிருந்த வீட்டுக்காணியில் உள்ள பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்த தொழிலாளி முதல் இராணுவத்தின் கஜபா ரெஜிமண்ட., இராணுவ, புலனாய்வு பிரிவு ஊர்ஜிதம் செய்தனர்.
மேலும் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் அங்கு பிரசன்னமாயிருந்த இராணுவ உயரதிகாரிகள் செய்தியாளரிடம் விளக்குகையில் இப்பிரதேசம் ஏலவே இராணுவத்தின் முகாமாக செயற்பட்டு வந்ததுடன்,மீட்கப்பட்ட வெடி பொருட்கள் ஷெல் ரகங்களான 130 மீ.மி,120 மீ.மி,60 மீ.மி உள்ளன. ஏன தெரிவித்தனர.
இதேவேளை மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தின் பொறியியல் பிரிவு எடுத்து செல்லும் வரை செய்தியாளர் 8 மணிநேரம் அவ்விடம் நின்றிருந்தார்.
இதுவே உண்மை...!
ஆனால் தமிழ் ஊடகங்களில் சில இச்சசெய்தியை திரிவு படுத்தி வேறு கோணத்தில் பிரசுரித்து வருகின்றன. இது அவ்வூடகங்களின் வழமையான செயற்பாடுகளாகும்.
தங்களுக்கு ஊடக தர்மம் உள்ளது. தமிழ் மொழி பேசும் மக்களின் குரல் என்றெல்லாம் கூறி தங்களை தெரிவித்து உண்மைகளை மறைத்து இவ்வாறான திரிவு படுத்தப்பட்ட செய்திகளை வெளிப்படுத்துகின்றன.
இதனை எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனெனில் சம்பவ இடத்திற்கு பெரும்பாலான மேற்குறித்த ஊடகங்கள் வருவதில்லை.
ஒரு ஊகம், ஆருடம் பார்த்தே தங்களது செய்திகளை வெளியிடுகின்றன.இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்பிராயத்தையும்,தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
எமது செய்தியாளர் இச்செய்தி தொடர்பாக (திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பான) வட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்.பி) ஜிப்ரியை தொடர்பு கொண்டு கேட்டபோது இச்சம்பவம் தொடர்பில் தான் எதுவித கருத்தும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றார்.மேலும் சில வேளை ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்திருக்கலாம் என்றதுடன் மேலதிக விடயங்களுக்கு நேரடியாக சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இது அவ்வாறு இருக்க எவ்வித ஆதாரங்களும் இன்றி சில ஊடகங்கள் குறித்த செய்தியை உண்மைக்கு புறம்பாக வெளியீட்டுள்ளமை அவ்வூடகத்தின் கபடத்தன்மை எவ்வாறு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது.
Post a Comment