அமெரிக்க உதவியுடன் இலங்கையில் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடம்
சிறிலங்காவில் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கான புதிய ஆய்வுகூடம் ஒன்று ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குளுக்குத் தேவையான DNA பரிசோதனைகள் இந்த ஆய்வு கூடத்தில் எதிர் வரும் காலங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பத்தரமுல்லையில் அமெரிக்காவின் நிதியுதவி 2.1 மில்லியனுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வகத்தில் தோட்டாக்களை ஆய்வு செய்வதற்கான கூடம், தோட்டாக்களை மீட்கதற்கான கூடம்,மற்றும் போதை மருந்து மற்றும் நச்சுத்தன்மையான பொருட்களைக் பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வகமும் அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வுகூடம் அமெரிக்க அரசின் நிதியுதவியுடனேயே அமைக்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கான பயிற்சிகளை தடவியல் ஆராய்ச்சியில் புகழ் பெற்ற அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழகம் வழங்கி வருகின்றது.
குற்றங்களை கண்டுபிடிக்க முடியும் அமெரிக்காவிற்கு குற்றங்களை குறைக்க முடியாது திணறுவது ஆச்சரியமே!
ReplyDeleteஅதற்கு பிரதான காரணம் மனிதன் சட்டத்தை ஆக்குவதால் அவனது கையடிப்பு சகல துறைகளிலும் உள்ளதால் குற்றத்தை குறைப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது.