Header Ads



மடவளையில் அஹதிய்யா வகுப்பு மாணவர்களின் பரிசளிப்பு வைபவம் (படங்கள்)


எவர் இறைபணிக்காக தம்மை அர்பணம் செய்கிறாரோ அவரே மனிதர்களில் மேன்மையானவர்களாகுமஎன அகில இலங்கை ஜமமஜயத்துல் உலமா சபையின் உபதலைவர் மவ்லவி எம்.எச்.எம்.புர்ஹான்(பஹ்ஜி) (30.6.2013) தெரிவித்தார்.

மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்ற அஹதிய்யா வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு வைபவங்களில் விசேட அதிதியாகக் கலந்து உரையாற்றும்  போதேஅவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது,

இறைவன் எதுவித தேவையுமற்றவன். இருப்பினும் தமது அடியார்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை பரிசிலுப்பதற்கே எமக்கு சில நடை முறைகளை அவன் வைத்துள்ளனான். யார் இறைதூதை மற்றவர்களுக்கு அறிவிக்கின்றாறோ அல்லது யார் இறைகட்டளைகளை மற்றவருக்கு கற்றுக் கொடுக்கின்றாறோ அவரே மனிதர்களில் உயர்வானவராகும் என்றார்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் அஹதிய்யா ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்இதில் கல்வி பயில்கின்றனர்.



No comments

Powered by Blogger.