சாட்சியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் - வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு அறிவுறுத்தல்
பம்பலப்பிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தனவை தொடர்ந்தும் விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் அழுத்தம் கொடுத்தமை தொடர்பில் வாஸ் குணவர்த்தனவின் மனைவியை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஏ எம் சஹாப்தீன் அழைப்பாணை விடுத்துள்ளார்.
இதனிடையே, வாஸ் குணவர்த்தன, சிறைச்சாலை அதிகாரிகளின் விஷேட பாதுகாப்பு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், சாட்சியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment