ஷஃபான் ரமழானுக்கான தயார்படுத்தல்..!
மௌலவி: ஏ .எல் .எம் .இர்ஷாத் (ஹலீமி)
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم، وما رأيتُ رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيته أكثر صياماً منه في شعبان ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
''நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபானை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் ஷஃபான் முழுவதுமே நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். '' (அல்புகாரி, முஸ்லிம்)
மற்றுமோர் அறிவிப்பில் ஷஃபான் மாதத்தில் அதிகமான நாட்களில் நோன்பு நோற்பார்கள் என வந்துள்ளது.
ஷஃபான் மாதம் அருள்மிகு மாதம்;ரமழானுக்கு முன்னுள்ள மாதம்;ரமழானுக்குத் தயார்படுத்தும் மாதம். ரமழான் மாதம் நோன்பின் மாதம். இதனால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஃபானைப் போன்றே ரமழானிலும் அதிகமாக நோன்பு நோற்றார்கள். இதனையே இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நோன்பு மனிதனை அவனது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு அடிமையாவதிலிருந்து தடுத்துஇ அவனது பாவக் கறையகற்றி மனிதப் புனிதனாக மாறும்பக்குவத்தைவழங்குகிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ரமழானுக்கு அடுத்ததாக ஷஃபான் மாதத்தைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிகளவு நோன்பு நோற்கவில்லை. எனவேஇ ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள் மீது கடமை போலவேஇ ரமழான் மாதத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து நோன்பு நோற்க வேண்டியஇ அதிக இபாதத்துக்கள் செய்ய வேண்டிய மாதம் ஷஃபான் ஆகும்.
பிறிதொரு முறை நபியவர்கள் கூறினார்கள்: ''ஷஃபானில் உங்களால் முடிந்தவரை நற்செயல்களில் ஈடுபடுங்கள். நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் கூலி வழங்க சோர்வடைவதில்லை. ''
இத்தகைய நல்லமல்களின் உறைவிடமாகக் காணப்படுகின்ற ஷஃபான் மாதத்தை நாம் இவ் வருடமும் அடைந்திருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்பதற்கும் நல்லமல்கள் புரிவதற்கும் உற்சாகப்படுத்திஇஊக்கப்படுத்திய ஒரு மாதம்தான் ஷஃபான் மாதம் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக நாம் இவ் அருள்மிகு மாதத்தில் ரமழானுக்குத் தயாராகாது கவனயீனமாகக் கழித்து வீணாக்கி விடுகிறோம் பொடுபோக்காக இருந்து விடுகிறோம்.
ஷஃபான் மாதத்தைத் தொடர்ந்து வருகின்ற ரமழான் மாதத்தில் அல்லாஹ் எண்ணிலடங்கா சிறப்புக்களையும் நன்மைகளையும் வைத்திருக்கிறான். அவற்றைப் பூரணமாக அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் மறுமையில் நிரந்தர வெற்றியாளராக ஆகிவிடுகின்றார். இத்தகைய புனிதமிக்க ரமழானில் நன்மைகளை அள்ளிக் கொள்வதற்குத் தயாராகும் ஓர் ஏற்பாடே ஷஃபான் மாத நோன்பும் அதில் நாம் சம்பாதிக்கும் நல்லமல்களும் ஆகும்.
மறுமையில் அல்லாஹ் நோன்பாளிகளை விஷேடமாக அழைத்துஇஅவர்களை கண்ணியப்படுத்திஇ அவர்களுக்கென்றே தனியான ஒரு வாயிலை சுவனத்தில் அமைத்து அதனூடாக அவர்களை வரவேற்கிறான்.
சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனமான நோன்பை எதிர்வரும் ரமழானில் முழுமையாக நோற்கஇஷஃபானில் நாம் திடசங்கற்பம் பூணுவோம். அந்த உறுதியான எண்ணத்தோடு ரமழானுக்கு இப்போதே தயாராகுவோம். அதற்காக எமக்கு ஆர்வமும் ஆசையும் சந்தர்ப்பமும் தந்தருள இரு கரமேந்தி இறையோனிடம் இறைஞ்சுவோம்இ இன்ஷா அல்லாஹ்.
ரமலான் மாதம் வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும்இ தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்....' (2:185)
மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.
1. ரமழானின் சிறப்பு. 2. குர்ஆனின் சிறப்பு 3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்
ரமழானின் சிறப்பு:
.
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصُفِّدت الشياطين ) متفق عليه ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?
அல்குர்ஆன் அருளப்பட்டது: ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ 'நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்' (44:03)
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ{1} وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ{2} لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ{3} َّ அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது '1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்' என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.
மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது. அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும்இ இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும்இ சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்தஇ இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.
இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால்இ அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.
ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்குஇ ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.
அதேவேளைஇ முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.
வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால்இ சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.
வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்குஇ உண்பதற்கு உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும். இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.
ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோஇ,மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும்இ சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால்இ அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் – பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல்இ ஒழுக்கவியல்இ பொருளியல்இ ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.
நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது, 'ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.' (2:183) என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.
நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும்இ பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன்இ உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.
இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும். பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும். எனவே அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ரமழானை அடைவதற்குரிய பாக்கியத்தை தருவானாக ஆமீன் .
Post a Comment