Header Ads



கலாநிதி அமீர்அலிக்கு பதிலடி..!

அபூ ஜஹ்ல் இவன் இயற்பெயர் அம்று பின் ஹிஷாம். இவனுக்கு மக்கள் சூட்டிய பெயர்: அபுல் ஹிகம் (அறிவின் தந்தை). இவனுக்கு மக்கள் இட்ட கலாநிதிப்பட்டத்தால் இஸ்லாத்தையும், அல்லாஹ்வைப் பற்றிய செய்தியையும் விளங்கிக்கொள்ளமுடியாது போனதால் நபி (ஸல்) அவர்கள் இட்ட பெயர்தான் 'அபூ ஜஹ்ல்' என்பதாகும்.

அறியாமைக்காலத்தில் அபூ ஜஹ்ல் என்பவன்மட்டுமல்ல, பல குறைஷித் தலைவார்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் பலர், நபியவர்களின் போதனையை விளங்கிக்கொள்ளவில்லை. எனினும் பிலால் போன்றோர்களே அன்று இஸ்லாத்தை ஏற்று நபியவர்களோடு பயணித்தார்கள்.

குறைஷித் தலைவர்கள் விரும்பியிருந்தால் இஸ்லாத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே மக்கா இஸ்லாமிய மயமாக மாறியிருக்கும், ஆனால், விளங்கியும் தங்களது தலைமைத்துவத்துக்காக இஸ்லாத்தை விளங்க மறுத்தனர்.

இதற்கு முன்னுதாரணமாக காலித் (றழி) அவர்களின் தந்தை வலீதை எடுத்துக்கொள்ளலாம். முஹம்மது சொல்வது இனிமையிலும் இனிமை என்று ஏற்றுக்கொண்டுதான் மக்களுக்காக நபியவர்கள் சொன்னதை மறுத்தான்.

இது போன்று, இன்று எமது முஸ்லிம் தலைமைகளும், அறிஞர்களும் என்று போற்றப்படக்கூடியவர்கள், பௌத்த கடும்போக்காளர்களின் வெளிப்படையான கோஷங்களுக்கும், சில தமிழர்களின் இரகசியமாக அரைகூவலுக்கும் துணை போவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

நவமணி, முஸ்லிம் கலாநிதி என மதிப்பளித்து, முஸ்லிம்களுக்காக எதுவும் கூறலாம் என்று கருத்துக்கேட்டு பேட்டி கண்டிருந்ததை ஜப்னா முஸ்லிம் இணையத்தில் படிக்கக் கிடைத்தது மட்டுமின்றி, அதன் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நானும் ஒரு பின்னூட்டத்தை அனுப்பிவிட்டு எனது வேலை முடிந்துவிட்டது என்று சும்மாவே இருந்துவிடலாம். அது எவ்வளவு தூரம் மக்களின் மனதில் பதியும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் விரிவாகவே கலாநிதி அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன். எழுதினேன். பின்பு ஏதோ சில தடங்களால் அப்படியே நிறுத்தியிருந்தேன்.

ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல முடியாது. எதிராளிகள் வரிந்து கட்டிக்கொண்டுவந்துவிடுவார்களே. என்று வாசக சகோதரர்களே அவசரப்படதீர்கள்.!

யாரையும் விமர்சிக்க வேண்டும் என்ற தேவையில்லை. இஸ்லாத்தையும், இஸ்லாமிய வழி வாழனும் எனத் துடிப்பவர்களையும் தூசிப்பது போல் கருத்துச் சொன்னால் அதனைப் பார்த்துக்கொண்டிருக்க எந்த முஸ்லிமாலும் முடியாது.

அடுத்து, தெரியாத்தனமாக முதன் முதலில் சொல்லியிருந்தால் கூட பக்குவமாக பிழைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், இதற்கு முன்னரும் பலர், முஸ்லிம் தலைவர்கள் என்றும், அறிஞர்கள் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கெதிராகவும் கருத்துச் சொன்ன போது, அதற்கு பலரும் பதில்கள் பதிந்திருந்தார்கள்.

இவைகள் எதனையும் மதிக்காது, ஒரு கலாநிதியாக இருந்தும் தான்றோன்றித்தனமாக கருத்து சொல்லியிருப்பதையிட்டு எவர்தான் அமைதியாக இருக்க முடியும்? கலாநிதி என்பதனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று தனது நாவிற்கு வந்தபடி பேசிவிட முடியுமா?'கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு.'

எவ்வளவுதான் பட்டம் எடுத்தாலும், அது கை மண்ணளவுதான் என்பதை கலாநிதி வரிசையில் உள்ளவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இப்போது கருத்துச் சொல்கிறோம் என்று எதிர் எதிராக, தப்புத் தப்புத்தாக கருத்துச் சொல்வது மலிந்துவிட்டது. கொஞ்சம் மக்கள் அவர்களை மதித்துவிட்டால், தன்னை விட்டால் ஆளில்லை எனும் அளவுக்கு கண் மூக்குத் தெரியாது கருத்துச் சொல்ல வந்துவிடுகிறார்கள்.

'நாங்கள் காத்தான்குடியிலும் கல் பதிப்போம்' என பதுளையில் பொது பல பேசியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். இவ்வாறான கலாநிதிகள் இருக்கும் வரை பொது பல சேனா என்ன, இஸ்ரவேலர்களும் கால் பதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. விடயத்திற்கு வருவோம்.

'தம்மம் சரணங் கட்சாமி' என்பதன் பொருள் என்ன? இஹ்திநஸ்ஸிறாதல் முஸ்தகீம் என்பதன் பொருள் என்ன? என்று ஏதோ அர்த்தம் விளங்யது போல் மக்களிடம் கேட்டு, ஏனைய மதத்தார்கள் விரும்ப நடக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் காட்டியிருக்கிறார். அல்லாஹ்வின் வார்த்தை என்பதை கொஞ்சமும் மதியாது நடந்திருக்கிறார்.

'தம்மம் சரணங் கட்சாமி', 'இஹ்திநஸ்ஸிறாதல் முஸ்தகிம்' இவ்விரண்டுக்குமிடையில் உள்ள தொடர்பு என்ன? அவைகளின் பொருள் என்ன என்பதை கலாநிதி அவர்கள் அறிவிக்க வேண்டும். எனக்கு பௌத்தமும் தெரியும், அல்குர்ஆனும் தெரியும் என்று பிதற்றிக்கொண்டு போய்விடக்கூடாது.

தான் ஒரு டொக்மெண்டரி படம் பார்த்ததாக படக்கதையை சொல்லி இறைச்சிகளை பகிரங்கமாக வைக்கக்கூடாது என்றும், அது ஏனைய மதத்தவர்களை புண்படுத்துவதாகவும் கூறியிருக்கறார். இப்போது கஞ்சா, சாராயத்தையே பகிரங்கமாக வியாபாரம் பண்ணி, தங்களது மதப் போதனையையே ஏறி மிதிக்கிறார்கள். அப்படியிருக்க, இறைச்சியை பகிரங்கமாக விற்பணை செய்தால் ஏனைய மதங்களை மதிக்காமல் நடக்கிறார்களாம்!!

கலாநிதி அவர்கள் எப்போதிருந்து சைவம் என்பதைக் கூறமுடியுமா?

புத்தர், உயிர் வதை கூடாதென்றிருக்கிறார் என்பதாக அறிகிறோம், மாமிசம் சாப்பிட வேண்டாமென்று சொல்லியிருக்கிறாரா? அப்படித்தான் சொன்னதாக பதிவுயிருந்தாலும் அதனை எந்தளவில் ஏற்றுக்கொள்ள முடியும்? ஏனெனில், புத்தர் வாழ்ந்தது காட்டில், அவர் என்னதான் புசித்திருப்பார், கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா? இறைச்சி உண்ணுவதைத்தான் உயிர் வதை என்று புத்தர் சொல்லியிருப்பாரா? எல்லாம் தெரிந்த கலாநிதி அவர்கள் ஆய்ந்து பேச வேண்டும்.

இவருக்கு உலமாக்களோடு என்ன காழ்புணர்ச்சியோ தெரியவில்லை. இவர் பெண்களுக்கு ஒப்பாக இருப்பதனால் ஆண்களுக்குரிய தாடியையும் பந்திக்கு இழுத்து நகைத்திருக்கிரார். அடுத்த மதங்களை மதிக்கச் சொல்பவர், உயிர் வதை கூடாதென்ற புத்தரின் கொள்கையை ஏற்றவர், மற்ற மனிதர்கள் மீதேறி மிதித்து நடப்பது எந்த வகையில் அடங்கும்??

ஒரே விதமான கருத்துக்களை பல தடவைகள் மிம்பரில் சொல்லியும் புரியாத இந்த கலாநிதி போன்றோருக்கு ஒரு கருத்தை ஒரு முறை சொன்னால் புரிந்துவிடுமா என்ன?

முஸ்லிம் பெண்கள், அடிவயிறு தெரியும் அளவென்ன அதைவிடக் கேவலமாக உடை உடுத்தாலும், முஸ்லிம்கள் என்பதற்காகவே அந்நியவர்கள் விமர்சிப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டும் பதிவுகளும், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் முறையைப் பற்றியும் பல பதிவுகள் வெளிவந்துள்ளது. அவைகளை கலாநிதி அவர்கள் மீட்டிப் பார்க்கட்டும்.

தனதூருக்கு அண்மித்த பகுதிகளான ஒள்ளிக்குலம் போன்ற கிராமங்களில் உள்ளவர்களோடு ஒட்டி உரவாடியவர்களால்தான் அப்பகுதிகள் சின்னாபின்னமானது என்பதை மறந்து, முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் ஒட்டி உரவாடிய காலம் போய், ஒருவருக்கொருவர் புற முதுகு காட்டுகிறார்கள். இதற்குக் காரணம் யார் எனக் கேட்டு முஸ்லிம்கள் மீது பலி சுமத்துகிறார் கலாநிதி அமீரலி அவர்கள்.

இவர்கள் போன்றவர்கள் இலங்கை நாட்டில் இருந்தால், பொதுபல சேனாவுடன் சேர்ந்து வரலாறுகளையே மாற்றி அமைத்துவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் கருத்துச்சொல்லவிட்டிருந்தால், பள்ளி வாயல்களில் தொழுதுகொண்டிருந்தவர்கள் சுட்டுப் பொசுக்குவதற்கும் காரணம் முஸ்லிம்கள்தான் என்றும் சொல்லியிருப்பார். ஏதோ பேட்டியை நிறுத்திவிட்டார்கள்.

எனவே கலாநிதி அவர்களே! ஒரு சிலரின் வெறுப்பால் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீதும் பலி சுமத்தாமல், இஸ்லாத்தை விமர்சிக்காமல், தன்னிடம் உள்ள கருத்தைச் சொன்னதற்காக எவ்வளவோ என்னை விமர்சித்திருக்கிறார்கள் என்று மீண்டும் இஸ்லாத்தைச் சாடாது, ஒரு முஸ்லிமாக மரணிக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

பட்டம் இருக்கிறது என்பதற்காக எதைச்சொன்னாலும் மக்கள் செவிசாய்ப்பார்கள் என எதிர்பார்த்து, எங்களை முஸ்லிம்களும் ஆதரிக்கிறார்கள் என்ற பொது பல சேனாவின் கூற்றை உண்மைப்படுத்தாதீர்கள். அல்லாஹ்வே எல்லோருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

8 comments:

  1. good reply alhamthulillah

    ReplyDelete
  2. இஸ்லாத்தின் இருப்பையும் அதட்கு களங்கம் எற்படாவண்ணம் அதை காப்பாற்றும் பொறுப்பு நமக்குரியது என்பதை உறுதிப்படுத்துவதாக மேட்கானும் "பதிலடி" அமைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்,உலகில் தமது இருப்பை (?)உறுதிப்படுத்திக்கொள்வதட்காக பலர் சாத்தானிய வசனம் பேசுவது காலாகாலம் நடைபெறுவதுதானே!மேற்கை திருப்தி படுத்தி வயிறு வளர்க்கப்போனவர்கள் தம்மை ஒரு தஸ்லீமா நஸ்றீநாகவோ அல்லது ஒரு சல்மான்ருஷ்தி யாகவோ மாற்றிக்கொண்டால் தானே மேட்க்குவாதியாக வலம்வரலாம்,பரிணாமத்தை விசுவாசிக்கும் குரங்கின் பேரர்களிடம் போய் அவர்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு சமூகத்தைப்பற்றி கருத்துக்கேட்டது தவறு ,பின் அதை பிரசுரித்தது அதைவிட பெரிய தவறு.

    ReplyDelete
  3. அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக கால நிதி இதன் பின்னாவது சிந்திப்பாரா??

    ReplyDelete
  4. அது என்னமோ தெரியவில்லை …பெராதேனிய பல்கலையில் படித்த ஒரு கூட்டம், முஸ்லிகளின் பெயர் தாங்கி நம் சமூகத்தின் அறிவுக்கன்கள் எனவும் சிந்தனை சிற்பிகள் எனவும் பீத்திக்கொண்டு நம் முதுகலைக்கு தொடர்பில்லாத சித்தாம்தம்களில் விளக்கவுரைகளும் விரிவுரைகளும் கொடுப்பது துர் அதிஸ்டமே……

    எதோ ஒரு பொருளியல் அல்லது Logic துறையில் பட்டமோ அல்லது முதுகலை பட்டமோ பெற்று வியாக்கியானம் கொடுப்பதும் அதை ஆமோதிக்கும் ஒரு கூட்டம் கூலிக்கு மார் அடிப்பதும், தாம் அரைகுறையாக ஒரு கேள்விப்படாதே ரசிய அல்லது ஜப்பானிய பல்கலையில் பெற்ற பட்டத்தை வைத்துகொண்டு இஸ்லாமிய விளக்கவுரை கொடுப்பதும் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது( நானும் இவ்வாறான பல விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ள அனுபவம்)

    இந்த அரைகுறை படிப்பு மேதாவிகளுக்கு ஒரு Phd பட்டம் அல்லது Mphil பட்டம் இருந்தால் நமக்கு எல்லாம் தெரியும் என்ற சிறு பிள்ளைத்தனமான எண்ணம்……இந்த கரையான்கள் நம் சமூகத்தின் சாபக்கேடு…….

    ReplyDelete
  5. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்


    நாங்கள் முஸ்லிகள் எங்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது

    அந்த கலாச்சாரத்தில் வலர்ந்தவர்களுக்குதான் அதன் பெறுமதி தெரியும் , அதன் அந்தஸ்து புரியும் .

    ReplyDelete
  6. தாராளமான பதில் இதை அமீர் அலி மட்டுமல்ல எதிர்காலத்திலும் நிகழ்காலத்திலும் உள்ள அமீர் அலிகளுக்குரிய பதிலடியாகவும் அமைகின்றது.

    ReplyDelete
  7. I sent this article to Dr. A. Ali

    ReplyDelete
  8. படிச்சவன் என்று சொல்றவன் எல்லாம் இப்பிடித்தான் இருக்கானுகள்.

    ReplyDelete

Powered by Blogger.