ஜமாதே இஸ்லாமின் நிதியளிப்பில் பொத்தானையில் ஜூம்ஆப் பள்ளி வாயல் திறப்பு
(அனா)
கிரான் பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேற்றக் கிராமமான பொத்தானையில் புதிதாக அமைக்கப்பட்ட முகைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயல் இன்று (14.06.2013) திறந்து வைக்கப்பட்டது.
பள்ளிவாயல் தலைவர் ஏ.அஹமட் லெப்பை தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், இலங்கை ஜமாதே இஸ்லாமியின் இணைப்பாளர் எம்.எம்.பஷால், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.நியாஸ், புனானை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேர்ணல் ராஜகுரு பண்டார, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவிர ஆகியோர் கலந்து கொண்டனர்.
1985ம் ஆண்டு இக் கிராமத்தில் இருந்த மக்கள் இடம் பெயர்ந்து ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, காவத்தமுனை பகுதிகளில் வாழ்ந்து வந்து யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் தற்போது மீள்குடியேறி பொத்தானைக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை ஜமாதே இஸ்லாமின் முப்பது லட்சம் ரூபா நிதியளிப்பில் இப் பள்ளிவாயல் அமைக்கப்பட்டுள்ளது.
இதெல்ல்லாம் இப்ப publicity பண்ணுற விசயம் இல்ல பா
ReplyDeleteஅவர்கள் உணவளிப்பதும் இல்லை உணவளிக்கும்படி தூண்டுவதும் இல்லை.
ReplyDeleteசிலவங்க சமூகத்துக்கு ஒண்ணுமே செஞ்சிருக்கவும் மாட்டங்க, யாரவது என்னமாவது நல்லது செஞ்சா அத பார்த்துட்டு பொருதுகவும் மாட்டாங்க.
மாஷா அல்லாஹ்