Header Ads



கிட்டங்கி பாலம் விரைவில் மக்களின் போக்குவரத்திற்கு..!


(ஏ.எல். ஜுனைதீன்)

    கல்முனை- நாவிதன்வெளி இடையிலான கிட்டங்கி பால வேலைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் போக்கு வரத்திற்கு விடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம். நிசார் தெரிவித்தார்.

    இப்பால அமைப்பு வேலைகள் முடிவுற்றதும் கல்முனை- கிட்டங்கி இடையிலான ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு பாதை அகலமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே இவ்வீதி ஒரு கிலோ மீற்றருக்கு அகலமாக்கப்பட்டிருப்பதாகவும் செய்யவிருப்பது இரண்டாவது கிலோ மீற்றர் பாதை எனவும் மேலதிக மாகாணப் பணிப்பாளர் நிசார் மேலும் தெரிவித்தார்.

   கிட்டங்கி பால வேலைகள் தற்பொழுது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பாதையூடாகவே நாவிதன்வெளி மற்றும் இங்குள்ள குடியேற்றப் பிரதேச மக்கள் கல்முனை வந்து செல்ல வேண்டும். அது போல் கல்முனையில் இருந்தும் அதிக எண்ணிக்கையானோர் அலுவல்கள் நிமிர்த்தமும் விவசாய நடவடிக்கைகளுக்காகவும் இப்பாதையூடாகவே போக்கு வரத்துச் செய்ய வேண்டும்.

    கிட்டங்கிப் பாதையூடாக முன்னர் தோணி, படகு என்பனவற்றின் மூலமாகவே மிகவும் கஷ்டப்பட்டு இப் பிரதேச மக்கள் போக்கு வரத்துச் செய்தார்கள். 

   கல்முனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹும் எம்.ஸி அஹமது தனது பதவிக் காலத்தில் கிட்டங்கிப் பாதையை தரைப் பாதையாக மாற்றி இப்பிரதேச மக்களின் போக்கு வரத்துக்கு உதவினார். அன்னாரின் இச் சேவையை மக்கள் மறந்து விடாமல் அடிக்கடி நினைவு கூறுகிறார்கள்.



No comments

Powered by Blogger.