முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பங்கள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் பகுதிப் பிரிவிற்கு முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கிறது.
விண்ணப்பதாரர்கள் உரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்கின்ற பிரிவுக்குள் நிரந்தர முகவரியை உடையவர்களாகவும் குறிப்பிடத்தக்களவு சொத்துக்களுக்கு உரிமையாளிகளாகவும் பிரதேச மக்களின் நன் மதிப்பையும் ஒத்தாசையையும் பெறுகின்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
இப்பதவிக்காக முஸ்லிம் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரரின் வயது 30 வருடங்களுக்கு குறையாமல் இருப்பதோடு 60 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விவாகம் செய்தவர்களாக இருத்தல் வேண்டும். கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் போன்றவை சம்மந்தமான மேலதிக விபரம் அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்போ “மாவட்டச் செயலாளர்/ மேலதிக பதிவாளர் நாயகம் மாவட்டச் செயலாளர் அலுவலகம் அம்பாறை “ என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும். என பதிவாளர் நாயகம் ஈ.எம். குணசேகர அறிவித்துள்ளார்.
Post a Comment