முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் (படங்கள்)
(ஏ.எல். ஜுனைதீன் + எஸ்.அஷ்ரப்கான் + ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனை மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆதம்பாவா முகம்மது பறக்கத்துல்லா என்பவரின் கல்முனை மதரசா வீதியிலுள்ள வீட்டுக்கு இன்று 10 ஆம் திகதி திங்கள் கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இக்குண்டு வீட்டின் முன் இருந்த பூச்செடியின் கொடியில் சிக்கி கீழே விழுந்து வெடித்ததன் காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு தெய்வாதினமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் மாநகர சபை உறுப்பினர் அவரின் மனைவி மாமனார் மாமி ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்ததாக உறுப்பினர் பறக்கத்துல்லா ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு காரணமாக வீட்டின் குடிநீர் விநியோக குழாய் வெடித்து சிதறியுள்ளதுடன் வீட்டின் சுவர் வீட்டின் இரும்பிலான முன் கதவு என்பனவற்றிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ எம் கப்பார் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். .அதிரடிப் படையினரும் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து குண்டு பற்றிய ஆய்வுகளயும் நடத்தினர்.
கல்முனை மாநகர சபையில் உள்ள 11 முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் 07 பேர் ஒரு பக்கமும் 04 பேர் ஒரு பக்கமும் தற்சமயம் செயல் பட்டுவருகின்றனர். ஏ.எம். பறக்கத்துல்லா 07 பேரில் ஒருவராகச் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment