கண்டியில் முஸ்லிம் சகோதரிக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள்
(ஜே.எம்.ஹாபீஸ் - மொஹொமட் ஆஸிக்)
கண்டி போதனா வைத்த்pயசாலையில் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் ஒரே சூலில் ஐந்து சிசுக்களை இன்று (2013 06 27) பிரசவித்துள்ளார்.
கண்டி, மடவளை பஸார் சிரிமல்வத்த வீதியை சேர்ந்த பாத்திமா பர்ஜீசிஹா என்ற 31 வயதுடைய முஸ்லிம் பெண்ணே இவ்வாறு ஐந்து குழந்தைகளை ஒரே சூலில் பிரசவித்துள்ளார். இது அவரது முதற் பிரசவம் என்றும் சுமார் மூன்று மாதங்களாக கண்டி வைத்திய சாலையில் தங்கி தொடர்ந்து சிகிற்சை பெற்று வந்ததாகவும் வைத்திய சாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
பிரசவித்துள்ள குழந்தைகள் ஐவரும் தலா 800 கிராம் எடை கொண்டுள்ளதுடன் மூன்று சிசுக்கள் கண்டி வைத்திய சாலையின் சிசுப் பராமரிப்புப் பிரிவிலும், மற்றைய இரண்டு சிசக்களும் பேராதனை வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிசுக்கள் சகதேகிகளாக இருந்த போதும் இடப் பற்றாக்குறை காரணமாக இடமாற்றப்பட்டதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இவற்றுள் நான்கு ஆண் சிசுக்களும் ஒரு பெண் சிசுவும் அடங்கும்.
குழந்தைகளின் தந்தை வெளிநாடு ஒன்றில் தொழில் புரிவதாகவும் இத் தம்பதியினர் கடந்த நான்கு வருடங்களாக குழந்தைகள் இன்றி இருந்ததாகவும் தெரியவருகிறது.
தாய்க்கு வெற்றிகரமான சத்திரசிகிற்சை மேற்கொண்டதாகவும் விஷேட வைத்திய நிபுணர் கபில குனவர்தன இச் சத்திர சிகிற்சையை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இதன் காரணமாக தாய் தற்போது பூரண ஓய்வில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிசுக்களையோ தாயையோ சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை.
MASHA ALLAH ! YA ALLAH INTHA KULANTHAIKALUKKUM AVARLALIN PETTOORKUM BARAKATH SEIVAYAHA.
ReplyDeleteMASH ALLAH....MABROOK... MAY ALLAH HELP THIS PARENTS... AMEEN
ReplyDeleteAlhamthulillah
ReplyDeleteHi Friends,
ReplyDeleteபாவம் பொதுபலசேனா இனவாதிகள்! அவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி இது!
எப்போது அவர்கள் முஸ்லீம்களின் குடித்தொகை பற்றிய மிகையான புரளிகளைக் கிளப்பி, சுயலாபம் தேட வெளிப்படையாக முயற்சித்தார்களோ அப்போதிருந்தே முஸ்லீம் தாய்மார்களுக்கு இப்படியாக ஒரேசூலிலே ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதும் ஆங்காங்கே நிகழ்ந்து போலத்தான் தோன்றுகின்றது.
அது ஒருவித மகிழ்ச்சியையும் இனம்புரியாத திருப்தியையும் தருவதை என்னால் மறைக்க முடியவில்லை.